Sunday, 28 February 2016

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 31

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 31


அத்தியாயம் 31 மனிதனின் இழி நிலை

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


 நீர்க்குமிழி போன்ற இந்த நசுவரமான-அழியக்கூடிய வாழ்வை நித்தியம் என்று எண்ணி மனிதர்கள் ஆடுகின்ற கோமாளி செய்கைகளை நகைச்சுவையுடன் விமரிசிக்கிறார் பூந்தானம் அடுத்த சில வரிகளில்.

സ്ഥാനമാനന്ഗള് ചൊല്ലിക്കലഹിച്ചു
നാണമ് കെട്ടു നടക്കുന്നിതു ചിലര്
മദമത്സരമ് ചിന്തിച്ചു ചിന്തിച്ചു
മതികെട്ടു നടക്കുന്നിതു ചിലര്

ஸ்தானமானங்கள்  சொல்லிக்கலஹிச்சு
நாணம் கெட்டு நடக்குன்னிது சிலர்
மதமல்ஸரம் சிந்திச்சு சிந்திச்சு
மதிகெட்டு நடக்குன்னிது சிலர்

பதவி,அதிகாரம் போன்றவைகளால் தன்னை மறந்து அகந்தையால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு காலத்தைக் கழிக்கின்றனர் சிலர். அவர்களுக்குத் தெரிவதில்லை இன்று மாட மாளிகைகளில் வசிப்பவரை ஒரு நொடியில் குப்பை மேட்டிற்கு கொண்டு வருவதும் தெருவில் இருப்பவனை அரசகட்டிலில் உட்கார வைப்ப்பதும் அந்த கிருஷ்ணனின் லீலா விலாசம் என்று.வெட்கம், மானம் எதுவும் இல்லாமல் ‘நானே பெரியவன்’ ‘நானே அறிவாளி” என்று மதிகெட்டு நடக்கிறார்கள்

ചന്ചലാക്ഷിമാര് വീടുകളില് പുക്കു
കുന്ചിരാമനായാടുന്നിതു ചിലര്
കോലകന്ഗളില് സേവകരായിട്ടു
കോലമ് കെട്ടി ന്ജെളിയുന്നിതു ചിലര്

சஞ்சலாக்ஷிமார் வீடுகளில் புக்கு
குஞ்சிராமனாயாடுன்னிது சிலர்
கோலகங்களில் ஸேவகராயிட்டு
கோலம் கெட்டி ஞெளியுன்னிது சிலர்.

இன்னும் சிலரோ அழகிய மாதர் பின் சென்று அவர்களால் குரங்காட்டம் ஆடவைக்கப் படுகிறார்கள். எப்படி குரங்காட்டி ஒரு கம்பை வைத்துக்கொண்டு குரங்கை இதைத் தாண்டு, அதைத் தாண்டு, இப்படிக் குதி, அப்படிக் குதி என்று சொல்வதற்கெல்லாம் மறு பேச்சு பேசாமல் குரங்கு ஆடுமோ அது போல் சில மனிதர்கள் அழகிய கண்களையுடைய விலைமாதர் தம் கண் அசைவிற்க அநுசரணையாக காரியங்கள் ஆற்றுகிறார்கள்.
சில மதி கெட்ட மாந்தர் அரச மாளிகைகளில் சேவகம் செய்துகொண்டு, வெளியே சீமான்கள் போல் நெளிந்து நடமாடுகிறார்கள்.

ശാന്തി ചെയ്തു പുലര്ത്തുവാനായിട്ടു
സന്ധ്യയോളമ് നടക്കുന്നിതു ചിലര്
അമ്മൈക്കുമ് പുനരച്ചനുമ് ഭാര്യയ്ക്കുമ്
ഉണ്മാന്പോലുമ് കൊടുക്കുന്നില്ല ചിലര്

சாந்தி செய்து புலர்த்துவானாயிட்டு
சந்த்யயோளம் நடக்குன்னிது சிலர்
அம்மைக்கும் புனரச்சனும் பார்யைக்கும்
உண்மான்போலும் கொடுக்குன்னில்லது சிலர்

மற்ரு பலர் கோயில்களில் பூஜை செய்து காலை முதல் இரவு வரை பகவத் கைங்கரியம் செய்து பிழைப்பு நட்த்துகிறார்கள்.ஆனால் பெற்ற தாய்க்கும் தகப்பனுக்கும் மனைவிக்கும் உணவிற்கான பொருள் கூட கொடுப்பதில்லை. என்னே அவர்கள் பக்தி ! அவர்களது பக்தியின் பொய்மையை பூந்தானம் எள்ளி நகையாடுகிறார் இங்கு.

അഗ്നിസാക്ഷ്ണിയായൊരു പത്നിയെ
സ്വപ്നത്തില്പോലുമ് കാണുന്നില്ല ചിലര്

அக்னிஸாக்ஷிணியாயொரு
பத்னியெ
ஸ்வப்னத்தில் போலும் காணுன்னில்ல சிலர்

அப்படிப்பட்டவர்கள் அக்னி சாக்ஷியாய் கைபிடித்த மனைவியை கனவில்க் கூட காண்பதில்லை.இவர்களா பக்திமானகள்?

സത്തുക്കള് കണ്ടു ശിക്ഷിച്ചു ചൊല്ലുമ്ബോള്
ശത്രുവെപ്പോലെ ക്രുദ്ധിക്കുന്നു ചിലര്
വന്ദിതന്മാരെക്കാണുന്ന നേരത്തു
നിന്ദിച്ചത്രേ പറയുന്നിതു ചിലര്

ஸத்துக்கள் கண்டு சிக்ஷிச்சு சொல்லும்போள்
சத்ருவெப் போலெ க்ருத்திக்குன்னு சிலர்
வந்திதன்மாரெக்காணுன்ன நேரத்து
நிந்திச்சத்ரே பறயுன்னிது சிலர்

இதைக் கண்டு யாராவது நல்ல மனிதர்கள் கடிந்து கொண்டாலோ அவர்களை எதிரியாக பாவித்து கொடுஞ்சொற்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.வணக்கத்திற்குரியவர்களை சுடு சொற்களால் சேருகிறார்கள் சிலர்.

കാണ്ക നമ്മുടെ  സമ്സാരമ് കൊണ്ടത്രേ
വിശ്വമീവണ്ണമ് നില്പുവെന്നുമ് ചിലര്
ബ്രാഹ്മണ്യമ് കൊണ്ടു കുന്തിച്ചു കുന്തിച്ചു
ബ്രഹ്മാവുമെനിക്കൊക്കായെന്നുമ് ചിലര്

காண்க நம்முடெ ஸம்ஸ்காரம் கொண்ட்த்ரெ
விஸ்வமீவண்ணம் நில்பூவென்னும் சிலர்
ப்ராஹ்மண்யம் கொண்டு குந்திச்சு குந்திச்சு
ப்ரஹ்மாவுமெனிக்கொக்காயென்னும் சிலர்

வேறு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் “இந்த பிரபஞ்சமே என்னால்த் தான் வாழுகின்றது; நான் பண்ணுகின்ற பிராமண்ய கர்மங்களால் நான் பிரம்மாவிற்கும் மேலானவன்” என்று கொக்கரிக்கிறார்கள்

അര്ത്ഥാശക്കു വിരുതു വിളിപ്പിപ്പാന്
അഗ്നിഹോത്രാദി ചെയ്യുന്നിതു ചിലര്
സ്വര്ണന്ഗള് നവരത്നന്ഗളെ ക്കൊണ്ടുമ്
എണ്ണമ് കൂടാതെ വില്ക്കുന്നിതു ചിലര്
മത്തേഭമ് കൊണ്ടു കച്ചവടമ് ചെയ്തുമ്
ഉത്തമ തുരന്ഗന്ഗളതു കൊണ്ടുമ്
അത്രയുമല്ല കപ്പല് വച്ചിട്ടു
മെത്ര നേടുന്നിതര്ത്ഥമ് ശിവ! ശിവ!

அர்தாசக்கு விருது விளிப்பான்
அக்னிஹோத்ராதி செய்யுன்னிது சிலர்
ஸ்வர்ணங்கள் நவரத்ன்ங்களெக் கொண்டும்
எண்ணம் கூடாதெ வில்க்குன்னிது சிலர்
மத்தேபங்களெக் கொண்டு கச்சவடம் செய்தும்
உத்தம துரங்கங்களது கொண்டும்
அத்ரயுமல்ல கப்பல் வச்சிட்டு
எத்ர நேடுன்னிதர்த்தம். சிவ! சிவ!

பெயருக்கும் புகழுக்குமாக சிலர் பொருள் சலவு செய்து அக்னிஹோத்திரம் போன்ற யாகங்கள். செய்கிறார்கள்.குதிரைகள், யானைகள் வியாபரம் செய்து பொருளீட்டுகிறார்கள். கப்பல் விட்டுக்கூட பொருள் தேடுகிறார்கள். அவர்கள் நேடுகின்ற பொருளினால் என்ன பயன்?
அனித்தியமான இந்த பிரபஞ்சத்தில் நித்தியமான அந்த பிரம்மத்தைத் தேடாமல், பெண், பொன், பொருள், புகழ், ப்தவி, பெயர் எங்கின்ற அனித்தியமான பொருள்களின் பின்னால் ஓடுகிறார்கள்.என்னே பரிதாபம்1 என்று வியக்குகிறார் பூந்தானம்.
இவர்கள் ஒரு முறையாவது பகவத் நாம்ம் சொல்லியிருந்தால் முக்தி கிடைத்திருக்குமல்லவா? இந்த பிரபஞ்சத்தில் மறுபடியும்  பிறக்க வேண் டியிராதல்லவா?அவர்கள் பாப ஜன்மங்கள் !
நாமாவது அப்படியில்லாமல் பகவன் நாம்ம் சொல்லிப் பாடுவோம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே



ஞானப்பானா-கிருஷ்ணகீதை 30

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 30


அத்தியாயம் 30

மனிதப் பிறவியின் மகிமை

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

എത്ര ജന്മമ് പ്രയാസപ്പെട്ടിക്കാലമ്
അത്ര വന്നു പിറന്നു സുക്രിതത്താല്
എത്ര ജന്മമ് മലത്തില് കഴിന്ജതുമ്
എത്ര ജന്മമ് ജലത്തില് കഴിന്ജതുമ്
എത്ര ജന്മമന്ഗള് മണ്ണില് കഴിന്ജതുമ്
എത്ര ജന്മമ് മരന്ഗളായ് നിന്നതുമ്
எத்ர ஜன்ம்ம் ப்ரயாஸப்பெட்டிக்காலம்
அத்ற வன்னு பிறன்னு சுக்ருத்த்தால்
எத்ற ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மங்கள் மண்ணில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மம் மரங்களாய் நின்னதும்
விளக்கவுரை 
எத்தனையெத்தனை ஜன்மத்திற்குப் பின் இந்த மனித ஜன்மம் கிடைத்திருக்கிறது? எண்ணற்ற புண்ணிய கர்மங்களின் பலனாக இந்த மனிதப் பிறவி கிடைத்துள்ளது.எத்தனையோ பிறவிகளில் புழுவாகவும் பூச்சியாகவும், புல்லாகவும் மரமாகவும் சேற்றிலும் அழுக்கிலும் கிடந்து உழன்ற பிறகு மனித ஜன்மம் கிடைத்துள்ளது.நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து இறந்தும் பிறந்தும் பல ஜன்மங்கள் கழிந்து மனித ஜன்மம் கிடைத்துள்ளது.

എത്ര ജന്മം മരിച്ചു നടന്നതും 
എത്ര ജന്മമ് മ്രിഗന്ഗള് പശുക്കളായ്
അതു വന്നിട്ടിവണ്ണമ് ലഭിച്ചൊരു
മര്ത്യജന്മത്തിന് മുമ്ഴിമ്പേ കഴിച്ചു നാം 
எத்ர ஜன்ம்ம் மரிச்சு நடன்னதும்
எத்ர ஜன்மம் ம்ரிகங்கள் பசுக்களாய்
அது வன்னிட்டிவண்ணம் லபிச்சொரு
மர்த்ய ஜன்மத்தின்மும்பே கழிச்சு நாம்

இந்த மனித ஜன்மத்திற்கு முன் பசுவாகவும் மற்ற மிருகங்களாகவும் பிறந்தோம் இறந்தோம்.பிறகு தான் மனித ஜன்மம் கிடைத்துள்ளது.

എത്രയുമ് പണിപെട്ടിന്ഗു മാതാവിന്
ഗര്ഭപാത്രത്തില് വീണതറിന്ജാലുമ്

எத்ரயும் பணிபெட்டிங்கு மாதாவின்
கர்ப்பாத்ரத்தில் வீணதறிஞ்சாலும்

எவ்வள்வு கஷ்டங்களுக்குப் பின் தாயின் கருப்பையில் வந்து சேர்ந்தோம்

പത്തുമാസമ് വയറ്റില് കഴിന്ജു പോയ്
പത്തുപന്തീരാണ്തുണ്ണിയായിട്ടു പോയ്
തന്നെത്താനഭിമാനിച്ചുപിന്നേടമ്
തന്നെത്താനറിയാതെ കഴിയുന്നു

பத்து மாசம் வயற்றில் கழிஞ்ஜுபோய்
பத்துபந்தீராண்டுண்ணியாயிட்டு போய்
தன்னெத்தானபிமானிச்சுபின்னேடம்
தன்னெதானறியாதெ கழியுன்னு

பத்து மாதம் தாயின் கர்பத்தில் இருந்தோம்; பிறந்தபின் பத்து பன்னீரெண்டு வருடங்கள் ஒன்றும் தெரியாத பால்ய பருவத்தில் –விவேகம் உதிக்காத நிலையில் எது சத்தியம்; எது நசுவரம்; எது நித்தியம் என்று அறியாத நிலையில் ‘ நான்” என்ற அகம்பாவத்துடன் இந்த உலகில் வாழ்ந்து விடுகிறோம்.

ഇത്ര കാലമിരിക്കുമിനിയെന്നുമ്
സത്യമോ നമുക്കേതുമൊന്നില്ലല്ലോ
നീര്പ്പോളപോലെയുള്ളോരു ദേഹത്തില്
വീര്പ്പുമാത്രമിന്ഗനെ കാണുന്നു

இத்ரகாலமிரிக்குமினியென்நும்
சத்யமோ நமுக்கேதுமொன்னில்ல்ல்லோ
நீர்ப்போளபோலேயுள்ளொரு தேஹத்தில்
வீர்ப்புமாத்ரமிங்கனெ காணுன்னு

இன்னும் எத்தனைகாலம் இந்த பூமியில் வாழ்வோம் என்று நமக்குத் தெரியாது.நமது வாழ்வு ஒரு நீர்குமிழி போன்றது.எப்பொழுது வேண்டுமென்றாலும் அது உடைந்து நீரோடு சேர்ந்து விடலாம்
அது வரை எலும்பும் சதையும் ரத்தமுமான இந்த தேஹத்தில் வாழ்ந்துதானாக வேண்டியுள்ளது.

ഓര്ത്തറിയാതെ പാടുപെടുന്നേരമ്
നേര്ത്തു പോകുമതെന്നേ പറയാവൂ
അത്രമാത്രമിരിക്കുന്ന നേരത്തു
കീര്ത്തിച്ചീടുന്നതില്ല തിരുനാമമ്

ஓர்த்தறியாதெ பாடுபெடுன்னேரம்
நேர்த்துபோகுமதென்னே பறயாவூ
அத்ரமாத்ரமிரிக்குன்ன நேரத்து
கீர்த்திச்சீடுன்னதில்ல திருனாமம்

அப்படிப்பட்ட அனித்தியமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரு நேரமாவது பகவன் நாமம் சொல்லுகின்றோமா? இல்லையே! இப்படி நமது கிடைப்பதற்கரிய வாழ்வை வீணாக்கலாமா ?பூந்தானம் அங்கலைக்கிறார்

   

ஞானப்பானா- கிருஷ்ண்கீதை 29

ஞானப்பானா- கிருஷ்ண்கீதை 29

அத்தியாயம் 29

                     എന്തിന്റെ കുറവ്?

நமுக்கென்ன குறை?

 

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


   കാലമിന്നു കലിയുഗമല്ലിയോ?
   ഭാരതമിപ്രദേശവുമല്ലയോ?
    നമ്മെളെല്ലാമ് നരന്മാരുമല്ലയോ?
   ചെമ്മേനന്നായ് നിരൂപിപ്പിനെല്ലാരുമ്

காலமின்னு கலியுகமல்லியோ?
பாரதமிப்ரதேசவுமல்லயொ?
நம்மெளெல்லாம் நரன்மாருமல்லயோ?
செம்மேனன்னாய் நிரூபிப்பினெல்லாரும்.

 ഹരിനാമന്ഗളില്ലാതെ പോകയോ?
  നരകന്ഗളില് പേടികുറകയോ?
  നാവു കൂടാതെ ജന്മമതാകയോ?
 നമുക്കിന്നി വിനാശമില്ലായ്കയോ?

ஹரி நாமங்களில்லாதெ போகயோ?
நரகங்களில் பேடி குறகயோ?
நாவு கூடாதெ ஜன்மமதாகயோ?
நமுக்கின்னி வினாசமில்லாய்கயோ?

 കഷ്ടമ് കഷ്ടമ് നിരൂപണമ് കൂടാതെ
 ചുട്ടു തിന്നുന്നു ജന്മമ് പഴുതെ നാമ്

கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதெ
சுட்டு தின்னுன்னு ஜன்மம் பழுதெ நாம்.

    இதற்கு முன்னாலுள்ள வரிகளில் பூந்தானமெனும் பக்த ஞானி பாரத தேசத்தின் பெருமையும், கலிகாலத்தின் விசேஷங்களையும், மனித ஜன்மத்தின் மேன்மையும் குறித்து விவரித்தார். உலகமே பாரத தேசத்தின் தார்சனிக பாரம்பரியத்தை  புகழ்ந்து பாடுகின்றனர் என்று சொன்னார்.மேற்கத்தியர் லௌகீக சுக போகங்களின் பின்னால் ஓடி ஓடி களைத்துப் போய், பௌதிக வஸ்துக்கள் நிரந்தர சாந்தியை அளிப்பதில்லை என்று புரிந்து கொண்டு பாரதத்தை நோக்கி வருகிறார்கள்.ஏன்? இங்கு சொல்லப் படும் வேத கோஷங்களும் மந்திரோச்சாடனங்களும் பகவத் நாம் கீர்த்தனங்களும் இந்த பூமியை புண்ணிய பூமியாக்கியுள்ளது என்பதால்த் தானே! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று இந்த தேசத்தில் கால் வைத்தாலே சாந்தி கிடைத்து விடும் என்று நம்பித் தானே எல்லோரும் பாரதத்தை நோக்கி வருகிறார்கள்!
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? .நமது பாரம்பரியத்தை மறந்து விட்டு, நமது வேதங்களும் உபனிஷத்துக்களும் காட்டும் பாதையை விட்டு விலகி லௌகீக சுக போகத்தின் பின்னால் ஓடுகிறோம். எதை மேற்கத்தியர் உதாவக்கரை என்று உதறித் தள்ளிவிட்டு நம் தேசத்தை நோக்கி ஓடி வருகிறார்களோ,அதை வாரியணைத்து மகிழ நாம் முயலுகிறோம். நமக்கு என்ன ஆயிற்று என்று வியக்குகிறார் பூந்தானம் இந்த வரிகளில்.
அந்த ஞானி கேட்கிறார்:
‘இது கலிகாலம் என்பது நமக்கு மறந்து போய் விட்டதா? நாம் பிறந்திருப்பது பாரத தேசம் தானே? நாம் மனித ஜன்ம தானே எடுத்துள்ளோம்? சற்றே யோசியும் பிள்ளாய்’    என்கிறார் பூந்தானம்
‘இங்கு பகவன் நாமத்திற்குத்தான் பஞ்சம் வந்து விட்டதா?’ விஷ்ணு சஹஸ்ர நாமம் போன்ற எத்தனை சஹஸ்ர நாமங்களை நமது ஆச்சாரியர்கள் நமக்கு அளித்துள்ளார்கள்? வேண்டாம்; கஷ்டமான பெயர்களை சொல்ல வேண்டாம்; ‘ராமா’ என்ற இரு எழுத்துக்களைச் சொன்னால் போதுமே! அதைச் சொல்லக்கூட அச்சமா? ‘நான்’ என்ற அகம்காரம் பகவன் நாமத்தை உரக்கச் சொல்லுவதை தடுக்கிறதா?
இல்லை; நரகங்களைக் கண்டு பயமில்லாமல் போய்விட்டதா? சுகத்திற்கு ஆசைப்படுகிறவர்கள் துக்கத்தைக் கண்டு அச்சப் பட வேண்டுமல்லவா? இல்லை நமது நாவு தன் செயலிழந்து விட்டதா? பகவன் நாமம் சொல்ல முடியாமல்.
இல்லை இனி இறப்பே கிடையாது; நாம் முக்தியடைந்து விட்டோம் என்ற பொய்யான இறுமாப்பா? ஏன் பகவன் நாமத்தை சொல்ல மாட்டோமென்கிறோம்?
இப்படி நமக்கு கிடைத்துள்ள அரிதான வாய்ப்பை நழுவ விட்டு விட்டு, நம் ஜன்மத்தையே வீணடிக்கிறோமே என்று பூந்தானம் வருந்துகிறார்.’சிந்தியுங்கள், சிந்தியுங்கள்’ என்று அறைகூவல் விடுகிறார்.

ஆகவே நாமும் அவருடன் சேர்ந்து பாடுவோம்:

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே





ஞானப்பானா-கிருஷ்ண்கீதை 28

ஞானப்பானா-கிருஷ்ண்கீதை 28

அத்தியாயம் 28

பாரத மகிமை

கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


യുഗമ് നാലിലുമ് നല്ല കലിയുഗമ്
സുഖമേതെന്നു മുക്തി വരുത്തുവാന്
ക്രുക്ഷ്ണ,ക്രിഷ്ണ,മുകുന്ദ, ജനാര്ദ്ദന,
ക്രുഷ്ണ, ഗോവിന്ദ, രാമായെന്നിന്ഗനെ
തിരുനാമസന്ഗീര്ത്തനമെന്നി മ-
റ്റേതുമില്ല പ്രയത്നമറിന്ജ്ന്ജാലുമ്
അതു ചിന്തിച്ചു മറ്റുള്ല ലോകന്ഗള്
പതിനാലിലുമുള്ള ജനന്ഗളുമ്
മറ്റു ദ്വീപുകളാറിലുമുള്ളോരുമ്
മറ്റു ഖണ്ഡന്ഗളിലെട്ടിലുമുള്ളോരുമ്
മറ്റു യുഗന്ഗള് മൂന്നിലുള്ളോരുമ്
മുക്തി തന്ഗള്ക്കു സാധ്യമല്ലായ്കയാല്
കലികാലത്തെ ഭാരതഖ്ണ്ഡത്തെ
കലിതാദരമ് കൈ വണന്ഗീടുന്നു.
അതില് വന്നൊരു പുല്ലായിട്ടെന്ഗിലുമ്
ഇതുകാലമ് ജനിച്ചുകൊണ്ടീടുവാന്
യോഗ്യത വരുത്തീടുവാന് തക്കൊരു
ഭാഗ്യമ്പോരാഥെ പോയല്ലോ ദൈവ്മേ!
ഭാരതഖണ്ഡത്തില് പിറന്നോരു
മനുഷര്ക്കുമ് കലിക്കുമ് നമസ്കാരമ്!.
എന്നെല്ലാമ് പുകഴ്ത്തീടുന്നു മറ്റുള്ളോര്
എന്തെന്നിനു നാമ് പറന്ജീടുന്നു?

யுகம் நாலிலும் நல்ல கலியுகம்
ஸுகமேதென்ன முக்தி வருத்துவான்
க்ரிஷ்ண,க்ரிஷ்ண, முகுந்த, ஜனார்தன.
க்ரிஷ்ண, கோவிந்த,ராமாயென்னிங்கனெ
திருனாமஸங்கீர்தனமென்னி ம-
ற்றேதுமில்ல ப்ரயத்னமறிஞ்சாலும்

நாலு யுகங்களுள்ளும் மேலான கலியுகத்தில் முக்தி அடைவதற்கு பகவத் நாம சங்கீர்தனம் ஒன்று தான் வழி.அதுவும் பாரத தேசத்தில் பிறந்தவர்களுக்கு அது மிகவும் சுலபம் எங்கிறார் பூந்தானம்.ஆகவே தான் மற்ற தேசத்தில் வாழுகின்ற எல்லோரும், மற்ற யுகங்களில் வாழ்ந்த எல்லோரும் பாரத தேசத்தில் பிறந்த நம்மைப் பார்த்து வியக்கிறார்கள்; பொறாமைப் படுகிறார்கள்.

அது சிந்திச்சு மற்றுள்ள லோகங்கள்
பதிமூன்னிலுமுள்ள ஜனங்களும்
மற்று த்வீபுகளாறிலுமுள்ளோரும்
மற்று கண்டங்களெட்டிலுமுள்ளோரும்
மற்று மூன்னு யுகங்களிலுள்ளோரும்
முக்தி தங்கள்க்கு ஸாத்யமல்லாய்கயால்

மற்ற பதின்மூன்று லோகங்களிலும் வாழ்கிறவர்களுக்கும் முக்தி பெறுவது இயலாத காரியமாக இருக்கிறது.பதின்மூன்று லோகங்கள் எவை? ஸத்ய லோகம்,தபோலோகம்,ஜனலோகம்,மஹர்லோகம்,ஸ்வர்லோகம், புவர்லோகம்,அதலம், விதலம், ஸுதலம்,தலாதலம்,மஹாதலம்,ரஸாதலம்,பாதாலம்,என்பவையே அந்த பதின்மூன்று லோகங்கள்.மட்டுமல்ல ஆறு தீவுகளில்,(ப்லாக்ஷ த்வீபம்,ஶலாமல த்வீபம்,குஸ த்வீபம், க்ரௌன்ச த்வீபம்,ஷாகத்வீபம் மற்றும் புஷ்கர த்வீபம்)வாழுவுபர்களுக்கும், மற்ற ஆறு கண்டங்களில் வாழுவர்களுக்கும்(இலவிரதம்,பத்ரசவம்,ஹிரன்மயம்,குரு,கிம்புருஷம்)மற்ற மூன்று யுகங்களில் ( க்ருதா யுகம்,த்ரேதா யுகம், த்வாபர யுகம்) வழ்ந்தவர்களும் முக்தி சாத்தியமில்லை என்று புரிந்து மிகவும் மரியாதையுடன் நம்மை நோக்குகிறார்கள்
குறிப்பாக மேற்கண்ட மூன்று யுகங்களைக் குறித்து சில விஷயங்களை சொல்ல வேண்டியுள்ளது.
நமது வேதாந்த கிரந்தங்கள் தர்மத்தை ரிஷபமாக-காளைமாடாக உருவகப் படுத்துகின்றன.க்ருதா யுகத்தில் அதற்கு நான்கு கால்கள் உள்ளன.அவை முறையே தபா, சௌசா, தயா, ஸத்யா என்பவையாகும். தபா என்றால் தார்மீக எளிமை,தூய்மை,பூத தயை, மற்றும் சத்தியம் என்பவையாகும்.நான்கு கால்களில் நிற்கின்ற தர்மம் அந்த யுகத்தில் சஞ்சலமற்றிருந்தது.மனிதர்களும் ஸாத்விக குண்முடையவர்களாகவே இருந்தார்கள் கடும் தவத்தின் மூலம் தான் பிரம்மத்தை அறிய முடிந்தது; முக்தி பெற முடிந்தது.
த்ரேதா யுகத்தில் தர்ம்ம் எனும் ரிஷபத்தின் ஒரு கால் காணாமல் போய்விட்டது.தவம் அல்லது தார்மீக எளிமை காணாமல் போய்விட்ட்து. படாடோபம் தலை தூக்கியது. இருந்தாலும் தர்மம் அழியவில்லை.ஆகவே ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு கடுமையான மன சுத்தமும் சாரீரிக சுத்தமும் பரிபாலிக்க வேண்டிவந்தது.பூத தயையும் கருணையும் உண்மையும் இன்றியமையததாக இருந்தது. பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் மிகவும் அத்தியாவசியமான குணமாக கருதப்பட்டது.
த்வாபர யுகத்தில் இன்னும் ஒரு கால் இல்லாமல் போய்விட்ட்து.சௌசம் காணாமல் போய்விட்ட்து.தயையும் சத்தியமும் நிலைத்து நின்றது. ஆகவே ஆத்மசாக்ஷாத்காரத்திற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
இன்று தர்மத்திற்கு ஒரே கால் தான் உள்ளது.ஸத்தியம் மட்டும்.தர்மம் நிற்பதற்கு முடியாமல் தடுமாறுகிறது.இன்று ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைப்பதற்கு பகவன் நாம ஸக்கீர்தனம் ஒன்றே வழி.அது மிகவும் எளிதான வழியாகவும் தென்படுகிறது.ஆகவே மனிதர்கள் இந்த கலியுகத்தில் பாரத வர்ஷ்த்தில் பிறப்பதை பாக்கியமாக கருதுகிறார்கள்.

கலிகாலத்தெ பாரதக்ண்ட்த்தெ
கலிதாதரம் கைவணங்கீடுன்னு.

ஆகவே கலிகாலத்தில் பாரத தேசத்தில் பிறந்தவர்களை மிகுந்த ஆதரவுடன் பிற தேசத்தவர் வணங்குகிறார்கள்

அதில் வன்னொரு புல்லாயிட்டெங்கிலும்
இதுகாலம் ஜனிச்சுகொண்டீடுவான்
யோக்யத வருத்தீடுவான் தக்கொரு
பாக்யம் போராதெ போயல்லோ தெய்வமே!

இந்த யுகத்தில் பாரத தேசத்தில் ஒரு புல் செடியாகவேனும் பிறக்க தகுதி இல்லாமல் போய்விட்டதே என்று தெய்வத்தை மனம் உருகி வேண்டுகிறார்கள்.

பாரத கண்ட்த்தில் பிறன்னோரு
மானுஷர்க்கும் கலிக்கும் நமஸ்காரம் !
என்னெல்லாம் புகழ்த்தீடுன்னு மற்றுள்ளோர்
என்னதெந்தினு நாம் பறஞ்சீடுன்னு ?

‘அப்படி பிறக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையென்றாலும் பாரத தேசத்தில் பிறந்தவர்களை வணங்கி புகழ்ந்து பாடுகிறார்கள்’  என்கிறார் பூந்தானம்.
பாரத தேசம் அப்படி என்ன புண்ணியம் செய்ததூ? இந்த தேசத்தில்தான் உபனிஷத்துக்களும் வேதங்களும் ஜனித்தன. இந்த மண்ணில்த்தான் வியாசர், வால்மீகி,சங்கரர், பகவான் ரமணர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் அவதரித்தார்கள். அப்படிப்பட்ட மண்ணில் பிறந்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள் என்று கூறுவதில் என்ன தவறு?
அந்த புண்ணியம் நீடிக்க பாடுவோம் பகவன் நாமம்:

கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே





Sunday, 7 February 2016

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 27

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 27

அத்தியாயம் 27

 யக்ஞ கர்மம்


கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

முன் அத்தியாயத்தின் கடைசியில் நாம் பகவத் கீதையில் கிருஷ்ணர் ,” யக்ஞ ரூபமாக செய்யும் கர்மங்களின் பலன் உன்னை பாதிக்காது” என்று கூறியதைக் கண்டோம். யக்ஞம் என்பதற்கான பொருளை கீதையில்  பல சுலோகங்கள் மூலம் பகவான் நமக்கு தெளிவு படுத்துகிறார்.அவையில் சிலதை இங்கு பார்ப்போம்.
பகவத் கீதை மூன்றாம் அத்தியாயம் பத்தாம் சுலோகத்தில் பகவான் கீழ்க் கண்டவாறு சொல்லுகிறார்:
    
     ஸஹயஞா: ப்ரஜா:ஸ்ருஷ்டா புரோவாச ப்ரஜாபதி !
     அனேன ப்ரஸவிஷ்யத்வமேஷவோஸ்த்விஷ்ட காமதுக் !!
                             ப.கீ அத்த்.3 சுலோ 10
பிரம்மதேவன் இந்த உலகில் ஜீவராசிகளை படைக்கும் பொழுது ஒரு யக்ஞ சங்கல்பத்தோடு படைத்து, நீங்கள் இந்த பிறவியை அந்த சங்கல்பத்தோடேயே வாழ்ந்து வாருங்கள். அந்த யக்ஞ சங்கல்பம் உங்களுக்கு ஒரு காமதேனுவாக இருந்து எல்லா சுகத்தையும் அளிக்குமாறாகட்டும் என்று அருளி நம்மை இங்கே அனுப்பிவைத்தார்.
ப்ரஜாபதி- உலகிலுள்ள எல்லா விதமான பிராணனுகளுக்கும் பதியாக இருப்பவன்-பிரம்மா –என்ன பெயரிட்டு வேணுமானாலும் அழையுங்கள்-இயற்கை, அரூபமான சக்தி என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள்- யாராக இருந்தாலும் அவன் அந்த சக்தி நம்மை படைக்கும் போதே ஒரு யக்ஞ ஸங்கல்பத்துடன் படைத்துள்ளான்.அந்த ஸங்கல்பத்திலிருந்து வழுவாமல் கர்மம் ஆற்றினால் நமக்கு எல்லா சுகமும் ஆனந்தமும் கிடைக்கும் என்று இந்த சுலோகத்தில் பரமாத்மா அருளுகிறான்
ஒரு ஹோமகுண்டம் ஜடராக்னியாக நம்முள்ளே எரிந்து கொண்டிருக்கிறது. அந்த அக்னி  நாம் உண்ணும் உணவையெல்லாம்-அவை வெண்டைக் காயாகட்டும், பாகற்காயாகட்டும்,அரிசியுணவோ கோதுமையோ எதுவாக இருந்தாலும் அவைகளை எரித்து, ,ஜீரணம் செய்து சாரம் வேறு, மலம் வேறு என்று பிரிக்கிறது.பல விதமான என்சைமுகளும் (enzymes). ஹார்மோண்களும் (Harmones)  நாம் உண்ணும் உணவை மஜ்ஜையாக மாமிசமாக, தசைகளாக எலும்புகளாக, மலமாக, மூத்திரமாக ,சுக்கிலமாக மாற்றி நம் இந்திரியங்களுக்கு வலு சேர்க்கின்றது. வெளியேறும்  மலமும் மூத்திரமும் பஞ்சபூதங்களான பூமியோடும் வாயுவோடும் நீரோடும் கலந்தும் கலக்காமலும் மற்ற ஜீவராசிகளுக்கு உணவாகின்றது. ஆணின் சுக்கிலம் பெண்ணின் கருமுட்டையில் பிரவேசித்து ம்ற்றொரு உயிரை படைக்கின்றது. சிருஷ்டி சக்கரம் சுழலுகிறது.
இதே தத்துவம் விசுவம் முழுவதற்கும் பொருந்தும்.இந்த விசுவம் முழுவதும் ஒரு ஜீவனாக உருவகப்பட்டு ஹோமகுண்டங்களிருந்து எழுகின்ற கரியமில வாயு ( carbondieoxide)  செடிகொடிகளுக்கு உணவு சமைக்க உதவுவது போல் நாம் செய்கின்ற ஒவ்வொரு  கர்மங்களும் மற்ற உயிரினங்களுக்கு சாதகமாகவொ பாதகமாகவோ முடிவடையும்.. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு பொறுப்பு உள்ளது.அவரவர் தம் தம் பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றுவதற்காக கர்மங்கள் ஆற்றினால் விசுவா நரனுக்கு ஆபத்தில்லை.
என்று  நாம் நமது பொறுப்பிலிருந்து பிறழுகிறோமோ  நமது கர்மங்கள் அந்த யக்ஞ சங்கல்பத்திலிருந்து விலகிச் செல்லுகிறதோ அன்று சர்வ நாசம் சம்பவிக்கும்.
பகவத் கீதையின் இந்த சுலோகம் நம்மை பிரமன் தந்துள்ள அந்த யக்ஞ சங்கல்பத்திலிருந்து நாம் வழுவாமலிருக்க அறிவுறுத்துகிறது. யக்ஞ சங்கல்பம் நமக்கு ஒரு காமதேனு. அதை பொறுப்புடன் போற்றி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஜீவராசியின் பொறுப்பாகும்.அவ்வாறு கர்மம் ஆற்றினால் கர்மபலன்கள் நம்மை பாதிக்காது.
போட்டியும் பொறாமையும் நம்மை அழிவின் பக்கம் இழுத்துச் செல்லும். வாழ்க்கையை ஒரு யக்ஞமாக  பிறருக்கு உதவியாக, பிறருக்குத் துன்பம் பயக்காதபடி வாழ்ந்தோமென்றால் ஒரு பொழுதும் துன்பம் வராது. சுகம் கைக்கூடும்.குறைந்த பட்சம் பிராரப்த கர்மத்தின் தீவிரம் குறைந்து நாம் மேலும் கர்மச்சுமையை ஏற்றாத படி அமையும்.
மேலும் பகவான் பதினொன்றாம் சுலோகத்தில்  கூறுகிறார்:
     தேவான்பாவயதானேன தே தேவா பாவயந்து வ: !
     பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத !!
வார்த்தைகளின் அர்தத்தை மட்டும் வைத்து பார்த்தால் இந்த சுலோகத்தின் அர்த்தம் “நீங்கள் தேவர்களை பேணுங்கள்;அவர்கள் உங்களைப் பேணி உங்களுக்கு சகல சுக சௌகரியங்களையும் அளீப்பார்கள்.” என்று வரும்.
ஆனால் இதன் உள்ளே பொதிந்து கிடக்கும் ஒரு மகத்தான தத்துவத்தை சற்று ஆழமாக சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்
நமது ஒவ்வொரு இந்திரியங்களுக்கும் ஒரு அதிஷ்டான தேவதை  உண்டு. திருசிய அவயவமான கண்களுக்கு அக்னி, ஸ்ரவண இந்திரியமான காதுகளுக்கு வாயு, ஸ்பரிசத்திற்கு பிருத்வி இப்படி ஒவ்வொரு இந்திரியத்திற்கும் ஒரு அதிஷ்டான தேவதை உண்டு. நாம் உண்ணும் உணவு இந்த அதிஷ்டான தேவதைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்;அவைக்கு வலு சேர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் தவறினால் நமது இந்திரியங்கள் அதன் வேலையை செய்யாது ;வாழ்க்கையில் துன்பப் பட நேரிடும்
நமது உணவு சமனாக (Balanced Diet) இருக்க வேண்டும் என்று ஒரு அர்த்த்மும் கொள்ளலாம்.
இன்னொரு வித்த்தில் நோக்கினால் எல்லா இந்திரியங்களும் சமமான மதிப்புடையவை. ஒன்றைவிட ஒன்று மேல் கிடையாது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒருமுறை இந்திரியங்களுக்குள் ஒரு போட்டியேற்பட்ட்து –யார் மேலானவன் என்று.கண் ,காது ஒவ்வொன்றும் நான் தான் மேலானவன் என்று கூறியது.
அவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாத்தால் அவைகள் எல்லாம் பிராணனை அணுகின. பிராணன் அல்லது அந்தர்யாமியான ஆத்ம சைதன்யம்- ஆன்மா கூறியது, “நான் யார் தீர்ப்பு கூற? உங்களில் ஒருவர் ஒரு ஆறு மாத்த்திற்கு வேலை செய்ய்யாமலிருந்து பாருங்களேன். அப்பொழுது தெரியும் என்னாகிறது என்று.”
கண்கள் முதலில் வேலையிலிருந்து தாற்காலிகமாக ஓய்வெடுத்துக் கொண்டது..ஆறு மாதம் கழித்து கண்கள் மீண்டும் வேலையில் சேர்ந்தது.கண்கள் மற்றவர்களிடம் கேட்ட்து,” நான் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டீர்களல்லவா? ஒன்றுமே செய்ய்ய முடியாமலிருந்திருக்குமே?”
“ ஒருவிதமான கஷ்டமும் படவில்லை.எத்தனையோ பேர் பிறப்பிலேயே கண்ணில்லாமல் பிறக்கிறார்கள்.அவர்களெல்லாம் வாழவில்லையா?”
இதே போல் காதுகள்,வாய் எல்லாம் ஓய்வெடுத்தும் வாழ்க்கை சக்கரம் ஓடிக்கொண்டேயிருந்த்து.
ஆனால் பிராணன் விடை பெறவேண்டிய நாள் வந்த்தும் எல்லா இந்திரியங்களும் உபயோகமில்லாமல் போயிற்று.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எல்லோரையும் ஒருங்கிணைத்து கொண்டு போகின்ற ஜீவ சக்தியிருக்கும் வரைத் தான் தனிப்பட்ட இந்திரியங்களுக்கு மதிப்பு.
அந்த கூட்டாட்சி பழுதடையும் பொழுது வாழ்க்கை சக்கரம் நின்றுவிடும்.
இதுவே உலகவாழ்வின் யக்ஞ சங்கல்பமும்.
பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவராசிகளும் சொருமிப்பாக இயங்கிக்
கொண்டிருந்தால்  எல்லோரும் ஆன்ந்தமாக இருக்க முடியும்.அந்த சமன்  நிலை தவறும் பொழுது பிரபஞ்சம் சர்வ நாசத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்.
இன்று மனித வர்க்கம் இயற்கையை அழித்து தன் சுக சௌகரியங்களை தேடிக்கொள்கிறது..காடுகள் அழிக்கப்படுக்கின்றன; பக்ஷி மிருகாதிகளுக்கு
அவர்களது இயற்க்கையான இருப்பிடம் நஷ்டமாகிறது, உண்ண உணவு கிடைப்பதில்லை,குடிக்க தண்ணீர் கிடைப்பதில்லை. அவைகள் மனித குடியிருப்புக்களில் புகுந்து நாசம் விளைவிக்கிறது. மனிதன் அவைகளை மேலும் ஆக்கிரமிக்கிறான்; துன்பத்திற்காளாக்கிறான்.. ஒருவிதமான  பீதியுடன் எல்லா ஜிவராசியும் வாழ்கிறது. ஒரு ஆபத்தான ‘சாக்கிரியம்” ( vicious cycle)  உண்டகின்றது.
 மற்ற ஜிவராசிகளை மட்டுமல்ல;மனிதனை மனிதனே நாசப்படுத்துகிறான். தனக்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்களை ,கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே பிறருக்கு அடுத்த நாடுகளிற்கு விற்கிறான்; இல்லை தானமாக கொடுக்கிறான். எலிகளையும், நாய்களையும் ஏன்,மனிதர்களையும் கூட  ரசாயன சோதனைக்கு உள்ளாக்கிறான். தவார வர்க்கங்களின் மரபணுக்களை மாற்றி விஷத்தை அவைகளில் ஜனிப்பிக்கிறான்,-அவை மனித வர்க்கத்திற்கு நாளடைவில் நாசம் விளைவிக்கும் என்று தெரிந்தே தாற்காலிகமான இலாபத்திற்காக, சுயநலத்தால் உந்தப்பட்டு.செயல்படுகிறான்.
இயற்கை நமக்கு அளிப்பதை நாம் நம் சஹ ஜீவிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பதேயில்லை  கொடுப்பதில் ஒரு ஆனந்தம் உண்டு என்று தெரிவதில்லை.எடுப்பதிலேயே மகிழ்ச்சியடைகிறான்.
இவ்வாறு கர்மங்கள் ஆற்றினால் நமது கர்மபலங்களின் சுமை ஏறிக்கொண்டே போகும். பிறப்பு-இறப்பு எனும் சக்கர சுழற்சியிலிருந்து தப்பிக்கவே முடியாது..
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தானோ என்னவோ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அன்றே பகவத் கீதையில் கூறினார்,” நீங்கள் தேவர்களை பேணுங்கள்,அவர்கள் உங்களை பேணுவார்கள்.பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் . உதவியாக இருந்து ஆனந்தம் அடைவீர்கள்.”
அந்த பாரஸ்பரியம் இன்று காணாமல் போய்விட்டது
இந்த பாரஸ்பரியத்தை மேலும் விளக்குவதற்காகத்தான் பகவான் கிருஷ்ணர் பதினாலாம் சுலோகத்தில் சொல்லுகிறார்: “:
     அன்னாத் பவந்தி பூதானி பர்ஜன்யாதன்னஸம்பவ: !
     யக்ஞாத்பவதி பர்ஜன்யோ யக்ஞ: கர்மஸமுத்பவ: !!

இதன் பொருள் அன்னத்திலிருந்து உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன என்பதாகும். அந்த அன்னமோ மழையிலிருந்து உண்டாகின்றது. மழை நீரை தன் வேர்கள் மூலம் உள்ளே இழுத்து, சூரிய ஒளியின் உதவியுடனும், ஹோமகுண்டங்களிலிருந்தும் நாம் எரியவைக்கின்ற குப்பைகளிலிருந்தும் எழுகின்ற புகை வடிவமான கரியமில வாயுவின் உதவிகொண்டும் தாவரங்கள் தண்டாகவும் இலையாகவும் காயாகவும் கனியாகவும் நமக்கு உணவு படைக்கின்றன. .அந்த தாவரங்கள் வெளியே உமிழ்கின்ற பிராண வாயு நம்மை உயிர் வாழ வைக்கின்றன. இந்தக்கருத்தை தான் பகவான்பர்ஜன்யாதன்ன ஸம்பவ:” என்றார்.
இது தான் ய்க்ஞத்தை அடிப்படையாககொண்ட கர்மங்களின் நியதி.இந்த நியதியிலிருந்து வழுவாமல் கர்மங்கள் ஆற்றுவதன் மூலம் மட்டுமே நாம் முக்தி பெற முடியும்.
இப்படி யக்ஞ அதிஷ்டிதமான கர்மங்கள் செய்வதன் மூலம் ப்ராரப்த கர்மங்களின் தாக்கத்தை குறைக்கலாம்;ஆகாமி கர்மங்களிலிருந்து காப்பாற்றப் படலாம்.
ஆகவே சன்னியாசம் எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், இந்த சம்சார வாழ்க்கையில் இருந்துகொண்டே கீதையில் கூறியுள்ள யக்ஞ சங்கல்பத்திலிருந்து வழுவாமலிருந்தால் ஆனந்தத்தை அடையலாம்.பரமாத்மாவை தரிசிக்கலாம். அவன் அருளால் ஆத்ம- சாக்ஷத்காரம் அடையலாம்.
இந்தக் கருத்தைத்தான் பூந்தானமும் கர்ம பீ நாசம் அடைந்தால் மட்டுமே முக்தி என்கிறார்.
இது மிகவும் கடினமான காரியம் தான்.அதற்கு மனம் பக்குவப் பட வேண்டும்.மனம் பக்குவப்பட பகவத் நாம சங்கீர்த்தனம் ஒரு எளிய வழி. முதலில் சொன்னது கர்ம மார்க்கம் என்றால் பூந்தானம் சொல்வது பக்தி மார்க்கம்.ஆகவே நாமும் பூந்தானத்துடன் சேர்ந்து பாடுவோம்:

கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே