Monday, 14 December 2015

ஞானப்பானா-கிருஷ்ண கீதை 13

ஞானப்பானா-கிருஷ்ண கீதை 13

அத்தியாயம் 13 ஸகுண பிரம்மம்

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!                      

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

                                            

 

ഒന്നിലുമറിയാത്ത ജനങ്ങള്ക്ക്

                                                     ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

                                             ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്

ഒന്നിലുമൊരു  ബന്ധ്മില്ലാതയായ്

നിന്നവന് തന്നെ വിശ്വമ് ചമച്ഛുപോല്

இதற்கு முந்தின அத்தியாயத்தின் முடிவில் சகுண பிரம்மம் நிர்குண பிரம்மத்தின் மறுபக்கம் தான் என்று சொன்னோம்..இன்னும் சற்று ஆழமாக சென்று பார்ப்போம்.
சகுண பிரம்மம் ‘ஒன்று’ என்ற பதத்தின் மூலம் வேதங்களிலும் ஸ்ருதிகளிலும் அடையாளம் காட்டப்படுகிறது. நிர்குண பிரம்மமோ எண்ணிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. எல்லாமே நிர்குண பிரம்மம் தான். அதற்கு ‘ஏகாத்வமோ” ( ஒருமை) ‘நானாத்வமோ’’(பன்மையோ) அடைமொழியாக கொடுக்க முடியாது.
சகுண பிரம்மத்தின் தோற்றத்தை மனுஸ்மிரிதியில் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
                     ஆஸீதிதம் தமோ பூதம்
                     அப்ரஞ்சாதமலக்ஷணம்
                     அப்ரதர்க்யமவிஞ்சேயம்
                     ப்ரஸுப்தமிவ ஸர்வத:
                    
                     தத: ஸ்வயம்பூர்பகவான்
                     அவ்யக்தோ       வ்யஞ்சயன்னிதம்
                     மஹாபூதாதி வ்ருத்தௌஜா:
                     ப்ராதுராஸீத்தமோனுத:

                     யோஆஸாவதீந்த்ரியக்ராஹ்ய:
                     ஸூக்ஷ்மோஅவ்யக்த: ஸனாதன:
                     ஸர்வபூத்மயோஆசிந்த்ய:
                     ஸ ஏவ ஸ்வயமுத்பபௌ
                           *********************
                     யத்தல் காரணமவ்யக்தம்
                     நித்யம் ஸதஸதாத்மகம்
                     தத்விஸ்ருஷ்ட: ஸ புருஷோ
                     லோகே ப்ரம்மேதி கீர்த்த்யதே
‘இந்த பிரபஞ்சம் தமோ ரூபமாக உள்ளது. அறிந்து கொள்ள முடியாததாக, எந்த இலக்கணத்திற்குள்ளும் அடைபடாத, மனோ விருத்தியால்-சிந்தித்து அறிந்து கொள்ள முடியாத,எவ்விதத்திலும் தெரிந்துகொள்ள முடியாத, எல்லாம் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பது போல் இருந்தது.
பரமாத்மா யாருக்கும் தெரியாத ஒரு சக்தியாக இருந்து கொண்டிருந்தாலும், பஞ்ச பூதங்களாலான இந்த பிரபஞ்சமாக ஆவிர்பவித்தான்; தோன்றினான்.தன்னை ஆவரணம் செய்திருந்த இருளை நாசம் செய்து,,அதுவரை இந்திரியங்களுக்கு அப்பாற்ப்பட்டவனாக, ஸூக்ஷ்ம ரூபியாக, ஸனாதனாக, சர்வ பூத ரூபியாக,சிந்தனைகளுக்கெல்லாம் மேலானவனாக இருக்கும் அவர் பிரபஞ்ச உருவமாக தோன்றினார். ஸ்வயமுத்பவ
அவ்யக்தமாக, நித்தியமானவனாக’,ஸத்’ ஆகவும் அஸத் ஆகவுமிருந்த,எல்லாவற்றினுடைய காரணகர்த்தாவான பரபிரம்மம் பிரம்மா என்ற புருஷனை ஸ்ருஷ்டித்தார்.( மனு ஸ்ம்ரிதி (1.5.6. 7-11)
இதில் கவனத்தில் கொள்ளவேன்டிய வாக்கியம் ஏவ ஸ்வயமுத்பபௌ’ என்பதாகும். தானே தோன்றினார். யாராலும் உருவாக்கப் படவில்லை.
இதைத்தான் பூந்தானமும்
                   നിന്നവന് തന്നെ വിശ്വമ് ചമച്ഛുപോല്
         “நின்னவன் தன்னெ விஸ்வம் சமச்சுபோல்.”
அவனே இந்த விசுவத்தை உருவாக்கினான் போலும் என்கிறார். பிரபஞ்சம் தோன்றும் முன் அந்த பரபிரம்மம் மட்டும் இருந்தது என்று கூறிவிட்டு அந்த பிரம்மம் பிரபஞ்சத்தை சிருஷ்டித்தது என்று சொன்னால் எதிலிருந்து-எதைக்கொண்டு சிருஷ்டித்தது என்ற கேள்வி எழும்புகிறது. மண்பானக் கலைஞன் மண்பாண்டங்கள் செய்தான் என்றால் அவனுக்கு மண் மூலப் பொருளாக( rawmaterial) உளது.. அது போல் பிரம்மம் பிரபஞ்சத்தை உணுபண்ணியது என்றால் மூலப்பொருள் எது? அது தன்னிலேயே அந்த மூலப்பொருளை கண்டது.ஆகவே தன்னிலுள்ள மூலப்பிரகிருதியிலிருந்து பிரபஞ்சத்தை சிருஷ்டித்தது.    
‘தமோ ரூபம்’ என்ற சொற்றொடர் மூலபிரகிருதி என்ற பொருளில் மனுஸ்மிருதியில் பயன் படுத்தப் பட்டுள்ளது.இப்படி உண்டாகின்ற தோற்றத்திற்கு ( ஆவிர்பாவத்திற்கு) ஒரு மறை வேண்டியிருந்தது. அது தான் ‘பிரகிருதி’ (இயற்கை) எனப்படுகிறது. இந்த பிரகிருதிக்கு ஸசேதனத்வம்( உயிரூட்டுதல்) புருஷ உதவியில்லாமல் முடியாது.
இரண்டானாலும் உண்மையில் ஒன்றே ஆன,சுபாவத்தில் ‘சத்’ ஆகவும் ‘அசத்’ ஆகவும் தானே ஜீவனாகவும் ஜீவனை தாங்கி நிற்கின்ற ஒரு உபாதியாகவும் இருக்கின்ற புருஷ-பிரகிருதியின் சேர்க்கையில் உருவானது தான் இந்த பிரபஞ்சனைத்தும்.
இந்த சகுண பிரம்மம் தான் எல்லா ஜீவராசியிலும் காணப்படுகின்றது
இந்த பிரம்மம், யாருக்கும், தென்படாமல் ஆனால் எல்லாவற்றையும் கண்டுகொண்டும்,., யாராலும் கேட்க முடியாதவனாகவும் ஆனால் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும், தான் எந்த சித்த விருத்திக்கும் ஆளாகாமல் ( சிந்தனைகளற்ற) எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொண்டு அந்தர்யாமியாக,நாசமில்லாதவனாக நம்முள் வசித்து வருகிறான்.அவன் தான் ஆத்மா.
இதை பிரஹதாரண்யக உபனிஷத் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறது:

                                                                                                அத்ருஷ்டோ த்ருஷ்ட:,  ஸ்ருத: ஸ்ரோதா, மதோ மந்தா, அவிஞ்சாதோ விஞ்சாதா,  நான்யோ அதோ அஸ்மி  திருஷ்டா நான்யோஅதோ அஸ்தி ஸ்ரோதா நான்யோஅதோஅஸ்மி மந்தா,னான்யோ அதோஸ்மி விஞ்சாதைஷத ஆத்மாந்தர்யாம்யம்ருதோ அதோ அன்யதார்த்தம்.

(பிர.உப. 3. 7 23)
பக்வத் கீதையில் பகவான் கிருஷ்ணன்  இவனை ‘ஸர்வ பூதாசயஸ்திதன்” என்று கூறுகிறார்..எல்லோருடைய இதயத்திலும் குடிகொண்டிருப்பவன் அவனே.அதாவது ‘சகுண பிரம்மம்’ தான் ஜீவாத்மா என்கிறார் கிருஷ்ணன். இதுவே எல்லா ஜீவராசிகளுடைய ‘அஹம்’ புத்தியும் .ஆதியும் அந்தமும் இல்லாத புருஷன் என்றும் பரமாத்மா என்றும் அறியப்படுகிறது., சகல ஜீவன்களிலும் குடிகொள்ளுகின்ற ஆத்மாவும்,’அஹம்’ புத்தியோடுகூடிய ஜீவாத்மாவும் ஒன்றே என்று புரிந்து கொண்டுவிட்டோமென்றால்,மூலபிரகிருதியின்- அனாத்மாவாயிருக்கின்ற- தேஹத்தின் சுபாவம் என்ன என்று பார்க்க முயலலாம்.
ஆத்மா ஏக பாவத்துடன் இருக்கின்றபொழுது, அனாத்மாவான தேகம்-பிரகிருதி அனேக பாவத்துடன் இருக்கின்றது. பரமாத்மா பித்ரு பாவத்துடனும், பிரகிருதி மாத்ரு பாவத்துடனும் வர்த்திக்கின்றது.
பிரகிருதி கர்ப்பத்தை தாங்கி நிற்பதால் அதுவே எல்லாவற்றின் உற்பத்தி ஸ்தானமும்.
பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லுவார்:

                                                                மம யோனிர்ம்மஹல் ப்ரம்ம

                                                                தஸ்மின் கர்ப்பம் ததாம்யஹம்

‘என்னுடைய உற்பத்தி ஸ்தானம் மஹல்(மஹத்) பிரம்மம் அதாவது பிரகிருதி தான்.
இந்த பிரகிருதியின் குண நலன்கள் சகல ஜீவராசிகளிலும் ப்ரத்யக்ஷமாகிறது. ஆகவே பிரகிருதியின் குணங்கள் யாவை என்று அறிய வேண்டியது அவசியமாகிறது. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.அதுவரை பகவன் நாமம் சொல்லுவோம்.
            கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
            கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
                    அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
                 ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


Monday, 7 December 2015

ஞானப்பானா 12 –கிருஷ்ணகீதை

ஞானப்பானா 12 –கிருஷ்ணகீதை


அத்தியாயம் 12- நிர்குண பிரம்மத்திலிருந்து சகுண பிரம்மம்

 

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

 

 

ഒന്നൊന്നായി നിനക്കുമ് ജനങ്ങൾക്ക്

                                                ഒന്നുകൊണ്ടറിവാകുന്ന വസ്തുവaയ്

                                                ഒന്നിലുമറിയാത്ത ജനങ്ങൾക്ക്

                                                ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

                                                 ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്


ഒന്നൊന്നായി നിനക്കുമ്

ജനങ്ങൾക്ക്

ഒന്നുകൊണ്ടറിവാകുന്ന 

വസ്തുവായ്


ஒன்னொன்னாயி நினக்கும்ஜனங்கள்க்கு
ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்துவாய்

,'இதுவா நான், இதுவா நான், இது இல்லை, இது இல்லை, இது இல்லை' என்று விசாரம் செய்து கடைசியில் நான் யார்என்று உணரும்பொழுதுஇருப்பது ஒன்றே” ,’அதை தவிர்த்து வேறொன்றில்லைஎன்று உணருகிறோம்.

ஏகமேவாத்விதீயம்

சாந்தோக்ய உபனிஷத் கூறுகிறது.’உள்ளது ஒன்றே, இரண்டாவது ஒன்றில்லை’
எல்லையில்லாத-அனந்தமான-,எவ்வித குண  நலன்களையும் கூறமுடியாத, என்றென்றும் அழியாத, உணர்வுகளற்ற,ஒன்று தான் ‘அது’
நாம்-ரூபங்களுக்கெல்லாம் அதீதமான,விவரிக்க இயலாத நிர்குண பிரம்மம் தான்’அது’.

                                                நாஸதாஸீண்ணோ ஸதாசீல்

                                                ஆ நீத வாதம் ஸ்வ்தயா ததேகம்

                                                தஸ்மாத்தான்யன்னபர: கிசே நாஸ

                                ரிக்வேதம் 10-129-1.2
அதை உணருகின்ற நேரத்தில், ‘அசத்’ பாவம் இராது; ‘சத் பாவமும்’ இராது.அதாவது ‘இல்லை’ என்பதும் இல்லை; ‘உண்டு’ என்பதும் இல்லை.’அது வெறும் சாக்ஷி மாத்திரமாக இருந்து கொண்டிருக்கும்.
‘அதுவே எல்லாம்; அதினுள்ளேயே எல்லாமும்” என்ற நிலை.
இருள் என்ற ஒன்றில்லையென்றால் பகலும் கிடையாது; இரவும் கிடையாது.அங்கே அனந்தபூரணனான சத்சிதானந்தன் மட்டும் தான் இருப்பான்.
இதைத்தான் ‘ஸ்வேதாசுவதரோபனிஷத்தில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது

                                                த்வே அக்ஷரே ப்ரம்மபரே தன்வந்தே

                                                வித்யாரே வித்யேனிஹிதே யத்ர கூடே

நாசமில்லாத,எல்லையில்லாத-வரையறுக்க முடியாத, உன்னதமான,பிரம்மத்தில் ஞானமும் அஞ்ஞானமும் உள்ளடங்கியிருக்கிறது.
எண்ணிக்கைகளுக்கு புறம்பான,’அது’ ஒரு சப்தத்தில் அடக்கமாயுள்ளது.
‘அது’ என்ன என்ன என்று கேட்ட நசிகேதஸ்ஸுக்கு யமதர்ம ராஜன் அளித்த பதில் எல்லாவற்றையும் விளக்குகிறது.
நசிகேதாசு கேட்டான்:

                                                அன்யத்ர தர்மாதன்யத்ராதர்மால்

                                                அன்யத்ராஸ்மால் க்ருதாக்ருதால்

                                                அன்யத்ர பூதாச்ச

யத்தல் பஸ்யசி தத்வத

தர்மத்திலிருந்து மாறுபட்ட,அதர்மமுமல்லாத,ஆற்றப்பட்ட செயல்களிற்கும் ஆற்றப்படாத செயல்களுக்கும் அன்னியமாக செயலுகள் ஆற்றக்கூடிய சக்திக்கும், ஆற்ற இயலாத சக்தியின்மைக்கும் அன்னியமான ஏதொன்று இருக்கிறதோ அதை எனக்கு உபதேசிபீர்களாக,” என்று நசிகேதசு எமதர்மரஜனிடம் கேட்பதாக கடோபனிஷத்தில் (1.2.14) வருகிறது.
யமதர்ம ராஜன் அப்பொழுது சொல்வான்:

                                                    ஸர்வே வேதா யல்பதமாமனந்தி

                        தபாம்ஸி ஸர்வாணி ச ய த்வதந்தி

                        யதிச்சந்தோ ப்ரம்மசர்யம் சரந்தி

                                                      தத்தே பதம் சங்க்ரஹணே ப்ரவீமி,

                        ஓம் இத்யேதல்

                        ஏதத்யே வாக்ஷரம் ப்ரம்ம

                        ஏத தேவாக்ஷரம் பரம்

‘எந்த ஒரு சொல்லை சகல வேதங்களும் போற்றுகின்றனவோ, யாதொன்றை தபசிகள் எல்லொரும் தியானம் செய்கிறார்களோ யாதொன்றிற்காக மனிதர்கள் பிரம்மசரியம் அனுஷ்டிக்கிறார்களோ, அது ஓம்காரம் என்பதாகும். அந்த அக்ஷரமே பிரம்மம்.அதுவே பரமோன்னதமானது.”
"ஓம்” என்பது தான் ஆதியும் மத்தியும் அந்தமும். இது மூன்று அக்ஷரங்களின் கூட்டு. .’அ’ ‘உ’ ‘ம்’ என்பதே அவை.
அதற்கு நிகரான வேறொன்று இல்லை.அது ஸ்ருஷ்டி , சம்ரக்ஷணை, சம்ஹாரமூர்த்திகளின் மொத்த உருவம்.
‘ஓங்காரம்” ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளையும் குறிக்கிறது.
 “அ’.என்ற எழுத்து வைஸ்வாநரனையும் ‘உ’ தைஜசனையும் ‘மகாரம்’ ப்ரஞ்சா’ ஸ்திதியையும் குறிப்பிடுகிறது என்று மாண்டூக்ய உபனிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
வைஸ்வா நரன் ஜாக்ரத்தையும், தைஜசன் ஸ்வப்னாவஸ்தையையும், ப்ரஞ்சானன் சுஷுப்தி அவஸ்தையும் பிரதிபலிக்கின்றது.
இந்த மூன்றின்சங்கமம் தான் ஆத்மா-
இப்படிப்பட்ட ஆத்மா தான் பரமாத்மா,. அது நமக்கு மிகவும் அருகில்—தவறு, தவறு- நம்முள்ளேயே இருக்கிறது.அதனால்த் தான் மாண்டுக்கியத்தில் ‘அயமாத்மா
பிரம்மம்’ என்று கூறப்பட்டுள்ளது.
சாந்தோக்யத்திலும் ஸர்வம் கல்விதம் பிரம்மஎன்று கூறப்பட்டுள்ளது. நாம் காணுகின்ற எல்லா பொருள்களும் பிரம்மமே.
இந்த பிரபஞ்சமே ‘பிரம்மம்’ தான். ஏனென்றால் ‘தஜ்ஜலானிதி’ –அதிலிருந்து தோன்றி அதனால் வளர்க்கப்பட்டு அதிலேயே லயிக்கின்றது.”தத்ர ஜாயதே, லீயதே, அனிதி”
இப்படிப்பட்ட பிரம்மத்தைதான் எல்லோரும் அறிந்து கொள்ள உண்ர்ந்துகொள்ள தவமிருகிறார்கள்.அறிந்துகொண்டாலோ நித்ய சாந்தி-பரமானந்தம் தான் என்று ஸ்ருதிகள் கூறுகின்றன.
இதை உணரவில்லையென்றால்

ഒന്നിലുമറിയാത്ത ജനങ്ങൾക്ക്

                                                ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

                                                 ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്


                                         ஒன்னிலுமறியாத்த ஜனங்கள்க்கு

                                         ஒன்னுகொண்டும் திரியாத்த வஸ்துவாய்

                                          ஒன்னுபோலயொன்னிதயுள்ளத

                                         ந்னொன்னாயுள்ளொரு ஜீவஸ்வரூபமாய்


இதை அறிந்தவர்கள் ‘எல்லாம் ஒன்றே’ என்று உணருகிறார்கள். அறியாதவர்கள் ஒன்றைப் போல் மற்றொன்றில்லையே ஆகவே; அது வேறு , இது வேறு என்று வேற்றுமை பாராட்டி விருப்பிற்கும் வெறுப்பிற்கும் ஆளாகிறார்கள். இனபத்தையும் துன்பத்தையும் அனுபவிக்க ஏதுவாகிறது. இந்த பிரபஞ்சத்தின் ஏற்ற-தாழ்வுகளுக்குள் அடைக்கப்படுகிறார்கள்.
ஏன் இந்த நிலைமை? எப்படி இந்த ‘இரட்டை’ ( துவித) மனோபாவம் வந்து  சேருகிறது? ஏன் இந்த அறியாமை?
 ஸ்ருதி இதையும் சொல்லியிருக்கிறது”

                        ஏதத்வை ஸத்யகாம பரப்ஜாபரஞ்ச ப்ரம்ம யதோங்கார:”

சத்யக்மா, இந்த ஓங்காரம் தான் பர- நிர்குண பிரம்மம்; அதுவே தான் அபர- சகுண ப்ரம்மம்.

                  

ஒன்றே  பலதாக தோன்றுவது சகுண பிராம்மத்தின் செயல். அவித்யையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஒன்றையே-நிர்குண பிரம்மத்தையே  பலரூபத்திலும் நாமங்களிலும் காண்கிறார்கள்..இது எப்படி நிகழ்கிறது?

                        “ த்வே வாவ ப்ரம்மணோ ரூபே ம்மூர்த்தஞ்சை வாமூர்த்தஞ்ச மர்த்த்யஞ்ச ஸ்திதஞ்ச ய்ச்ச ஸச்ச த்யச்ச”

மேற்கூறிய ஸ்ருதிவாக்கியத்தின் பொருள் என்னவென்றால், ‘ பிரம்மத்திற்கு இரண்டு நிலைகள் உள்ளன,;ரூபாவஸ்தை, அரூபாவஸ்தை. மாற்றத்திற்கு உள்ளாவது, மாற்றமில்லாதது, எல்லையுள்ளது, எல்லையில்லாதது, சத் பாவம் ,அசத் பாவம்’  என்பதேயாகும்.
சொரூபமும் விகாரமுமுள்ள பிரம்மம் வேறொன்றா? இல்லை அது நிராகார, நித்ய, சத் பிரம்மமே தான்,அதன் இன்னொரு அவஸ்தாந்தரம் தான்.அதுவே சகுண பிரம்மம் எனப்படுகிறாது.
 நிர்குணத்தின் மறுபக்கமான சகுணத்தின் தோற்றத்தை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். அது வரை பூந்தானத்தின் சொல்படி பகவத் நாம சங்கீர்த்தனம் செய்வோம்

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


 பின் குறிப்பு:

பகவான் இரமணரை உலகிற்கு காட்டிய சேஷாத்திரி சுவாமிகள் ஒருமுறை ஒரு கழுதையும் இன்னொரு முறை எருமை மாட்டையும் நமஸ்கரிப்பதைக் கண்ட பக்தர்கள் ,' ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு சுவாமிகள் சொன்னார்: ' நான் நீங்கள் சொல்வதை எதையும் காணவில்லை. என் முன்னால் பிரம்மம் மட்டுமேயுள்ளது'