Friday, 1 January 2016

ஞானப்பானா ---கிருஷ்ணகீதை 16

ஞானப்பானா ---கிருஷ்ணகீதை 16

அத்தியாயம் 16 ஒன்றும் மூன்றும்

                     

ஞானப்பானா ---கிருஷ்ணகீதை 16

அத்தியாயம் 16 ஒன்றும் மூன்றும்   



                        கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                                      கிருஷ்ணா கோவிந்தாநாராயாண ! ஹரே!

                                      அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

                          ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

        

மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

                

இந்த வரிகளில் பூந்தானம் இரண்டு பதங்களை கையாண்டு நம்மையெல்லாம் வியப்பிலாழ்த்துகிறார். ‘மூன்றும் ஒன்றில் அடங்கிவிடுகிறது; அப்பொழுது எதுவுமே இல்லாமல் ஆகிவிடுகிறது’ என்கிறார் பூந்தானம்.
எந்த மூன்று? எந்த ஒன்று?
ஒன்று என்பது பரமாத்மனைக் குறிக்கும். பரமாத்மன் அல்லது பர பிரம்மம் ஏகன், அத்விதீயன், அவனன்றி வேறொன்றில்லை, ஓங்காரஸ்வரூபன்,அக்ஷரன்( நாசமில்லாதவன்), ஆதியும் அந்தமும் இல்லாதவன், அவ்யக்தன், அவனே நிர்குணன், சகுணன், நித்தியன், சுயம் பிரகாசிக்கின்றவன், சர்வ வியாபி, சர்வ சக்தன், சர்வஞ்சன், சத்-சித்-ஆனந்தன் என்றெல்லாம் முன் அத்தியாயங்களில் சொன்னோம். அவனை பட்டினத்தார் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:

                    ஓத எளிதோ? ஒருவர் உணர்வரிதோ?

                   பேதமற எங்கும் விளங்கும் பெருமையங்காண்.

                    வாக்கு மனமுங்கடந்த மனோலயங்காண்.

                   நோக்க அரியவங்காண்,நுண்ணியரில்                                                       நுண்ணியன்காண்

                  சொல்லுக்கடங்கான்காண்,! சொல்லிறந்து நின்றவன்                                                       காண்!

                   கல்லு ளிலிருந்த கனலொளிபோ நின்றவங்காண்!

“ஓதுவதற்கு எளிதல்ல; அவனைப்பற்றி சொல்ல வார்த்தைகள் போரா.;யாராலும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியாதவன்; பேதமில்லாமல் எல்லா ஜீவராசிகளிலும் அசேதனங்களிலும் ஒருங்கே காணப்படுபவன்; வார்த்தைகளினாலோ மனத்தாலோ உருவகப்படுத்தமுடியாத அவைகளை கடந்து நம்மில் லயித்துள்ளவன்; காண்பதற்கு எளிதில் கிடைக்காதவன்,சிறிய அணுவிலும் சிறியவனாக அணுக்களில் காண்பவன்,சொல்லுக்கடங்காதவன்; அவனைக்கண்டுவிட்டாலோ சொல்லின்றி நம்மை வாயடைத்து போக செய்கிறவன்;கல்லுக்குள்( மலையில்) அக்னிப்பிழம்பாகத்  தோன்றியவன்.”
அப்படிப்பட்ட ஒருவனில்-ஒன்றில் மூன்றும் லயிக்கின்றது.
எந்த மூன்று?
நமது வேத உபனிஷத்துக்கள் நிறைய ‘மூன்றுகள்’ குறிப்பிட்டுள்ளது.
·         பரமாத்மா ( நிர்குணபிரம்மம், ஸகுண பிரம்மம்), பிரகிருதி( மஹா மாயா, யோக மாயா, லோக மாயா),ஜீவாத்மா   
·         மும்மூர்த்திகள்
·         முப்பெரும் தேவிகள்
·         சிருஷ்டி, பாலனம், சம் ஹாரம்
·         பிரகிருதியின் முக்குணங்கள்
·         ஜீவாத்மாவின் அவஸ்தாத்ரயம்  
·         ஞாதா, ஞேயம், ஞானம்     
·         பூதம், நிகழ்காலம், வருங்காலம்
முதல் மூன்றைக் குறித்து முன் அத்தியாயத்தில் நிறைய சொல்லப்பட்டுவிட்டது.
சகுண பிரம்மத்தின் மூன்று தோற்றங்களான மும்முர்த்திகளைக்குறித்து சற்றே பார்ப்போம்.
விஷ்ணு புராணத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“ஏகனாயிருக்கின்ற பகவான் ஜனார்த்தனன் சிருஷ்டி-ஸ்திதி-சம் ஹாரங்களை ஆற்றுவதற்காக பிரம்மா, விஷ்ணு, மஹேசுவரன் என்ற மூன்று பெயர்களை தனதாக்கிக் கொள்கின்றான்.’
சர்வாத்மகனான, கால-தேசங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவனான நிர்குண்பிரம்மம், சிருஷ்டி-ஸ்திதி-சம் ஹார கர்மங்களை அனுஷ்டிப்பதற்காக காலதேசமாறுபாடுகளுக்கு உட்பட்டு, சகுணனாக மூர்த்தி திரயமாக ( மும்மூர்த்திகளாக) தோற்றம் எடுக்கின்றது.
இன்னொரு விதத்தில் சொல்லப் போனால் சர்வேசுவரனுடைய இச்சா, ஞான, க்ரியா சக்திகள் தான் மும்முர்த்திகள் எனப்படுவர்.
மும்மூர்த்திகள் முப்பெரும் தேவிகளுடன் இணை பிரியாமல் இருந்து அவரவர்களின் கருமங்களை ஆற்றுகிறார்கள்.
பிரம்மா சிருஷ்டிக்கு அதிபதி.அவருடைய சக்தி ஞான ஸ்வரூபிணியான ஸரஸ்வதி-கலைமகள் என்றறியப்படுகிறாள்.ஞானத்தின் அதிஷ்டான தேவதையாக இருக்கின்ற கலைமகளின் உதவியில்லாமல் பிரம்மாவால் சிருஷ்டி கர்மத்தை செயலாக்க முடியாது. அவர் நான்முகன்- நாலு முகங்களையுடவர். ஏனென்றால், நாலாப்பக்கமுமள்ள சகல வஸ்துக்களையும் அவர் சிருஷ்டிக்கிறார் என்பதால்.
அவரது வாஹனம் அன்னம்-ஹம்ஸம். ஹம்ஸம்  என்பது சம்ஸ்கிருதத்தில் “ஸ:: அஹம்”—அதாவது ஸோஹம் என்பதின் மறு உருவம். ‘அஹம் புத்தியோடுள்ள ஜீவராசிகளை சிருஷ்டிப்பதால் அவர் ஹம்ஸத்தை வாஹனமாக கொண்டுள்ளார்.
விஷ்ணு பகவான் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்படுகின்ற எல்லா ஜீவராசிகளையும் பரிபாலித்து-காத்தல்,தனது கருமத்தை ஆற்றுகிறார்.
அவர் எப்பொழுதும் அந்தர்யாமியாக-எல்லோர் உள்ளிலிருந்துகொண்டு,பிரபஞ்சத்தை நடத்திக்கொண்டு செல்கிறார். அதற்கான சக்தி, எல்லா செல்வங்களுக்கும் அதிகாரியான சாக்ஷாத் மஹாலக்ஷ்மியிடமிருந்து அவருக்கு கிடைக்கிறது.அதனால் அவர் ஸ்ரீனிவாசனாக பேசப்படுகிறார். ’ஸ்ரீ’ அவரிடம்-அவரது மார்பில் எப்பொழுதும் குடிகொண்டிருக்கிறாள். நாலாபக்கமும் இருக்கின்ற ஜீவராசிகளை காக்க வேண்டியுள்ளதால் நான்கு கைகளை கொண்டவராயிருக்கிறார்  
.’காத்தலுக்கு’ அவசியம் வேகமும் விவேகமும். இது இரண்டும் பொருந்திய கருடன் அவரது வாஹனமாக இருக்கிறான்.
சிவன் என்றோ மஹா தேவன் என்றோ மஹேசுவரன் என்றோ அழைக்கபடுகின்ற சகுண பிரம்மாவதாரம் தான் சம் ஹாரமூர்த்தி. ‘சம் ஹாரம்” என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு பொருள் அழித்தல் என்பதல்ல; திரும்பப் பெற்றுக்கொள்ளுதல், உற்பத்தி ஸ்தானத்திற்கே திரும்புவதல்; லயித்தல் என்று கொள்ளலாம். பிரம்மா, விஷ்ணு, மஹாதேவன் மூன்றும் பரபிரம்மத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டால் மஹாதேவனின் செயலின் பொருள் நமக்கு தெளிவாகப் புரியும்..
மஹாதேவன் நம்மை இந்த இஹலோக பந்தங்களிலிருந்து விடுவித்து பரமனுடன் சேர்த்துவைக்கின்ற  கர்மத்தின் அதிபதியாக விள்ங்குகிறார்.அவர் நம்மிலுள்ள அவித்யயை நாசமடைய செய்து நமக்கு முக்திக்கு வழிகாட்டுகிறார். அவர் நமக்கு நித்திய சாந்தியை தருகிறார்.அவருக்கு துணையாக இருப்பதோ உமா தேவியெனப்படும் இச்சா சக்தியின் பிரதீகமாயிருக்கின்ற,பிரம்ம வித்யா தான். அவள் நமக்கு பிரம்மத்தை காண்பதற்கும் அதிலேயே லயித்து நித்திய சாந்தியை பெறுவதற்கும் ஏதுவாகிறாள்.
மஹாசிவனோ சன்னியாசி கோலத்தில் காட்சியளிக்கிறார். அவர் ‘சர்வசங்க ப்ரிதியாகம்’ செய்த முனிவர்களின் பக்திக்கு பாத்திரமானவர் என்பதை அவரது வேஷ விதானங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அவரது வாஹனமோ ரிஷபம் அல்லது காளைமாடு.அது மனதையும் ஸ்தூல பிரகிருதியையும் ஞாபகப்படுத்துவதாக உள்ளது. ரிஷப வாஹனன் மனோஜயன் என்பதைக் குறிக்கிறது. புலித்தோல் அவர் காமனை தஹனம் செய்தவர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. காமன் காமனைகளின்—ஆசைகளின் பிரதிபலிப்பு. ஆசைகள்- ராகம் தான் சம்சார பந்தங்களுக்கெல்லாம் மூல காரணம். அதிலிருந்து தான் துவேஷமும், குரோதமும் வெறுப்பும் மனவிப்ராந்தியும் உளவாகின்றது.இவைகளை வென்று பரமான்ந்த ஸ்வரூபியாக காட்சியளிக்கும் ஈசுவரனை மஹேசுவரன், மஹா தேவன் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை.
மேற்கூறிய விவரணங்களெல்லாம் பரப்பிரம்மம் மாயையால் ஆவரணம் செய்யப்பட்டு சிருஷ்டி-ஸ்திதி-சம் ஹார கர்மங்களை ஆற்றுகின்றது என்பதை ஆலங்காரிகமாக குறிப்பிடுவதாகும். மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவிகளும் ஒரே பிரம்மத்தின் வெவ்வேறு உருவகங்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்.
இனி அடுத்த அத்தியாயத்தில் பிரகிருதியின் முக்குணங்களை பார்ப்போம்.அதுவரை பகவத் நாம சங்கீர்த்தனம் செய்வோம்

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே




ஞானப்பானா—கிருஷ்ணகீதை 15

ஞானப்பானா—கிருஷ்ணகீதை 15


அத்தியாயம் 15 -மாயா

                

                      கிருஷ்ணா! கிருஷ்ணாமுகுந்தா!

                       ஜனார்தனா!கிருஷ்ணாகோவிந்தாநாராயாண ! ஹரே!

                      அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

                                  ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

தேவீ பகவதம்

                                       ஏஷா பகவதீ தேவீ

                                    சர்வேஷாம் காரணம் ஹி ந:

                                    மஹாவித்யா மஹாமாயா

                                    பூர்ண்ணா ப்ரக்ருதிரவ்யயா

                                --------------------------------------------

                                    இச்சா பராத்மன: காமம்

                                    நித்யானித்ய ஸ்வரூபிணீ

                                --------------------------------------------

                                    வேதகர்பா விசாலாக்ஷீ

                                    ஸர்வேஷாமாதிரீஸ்வரீ

                                    ஏஷா ஸம்ருத்ய ஸகலம்

                                    விசுவம் க்ரீடதி ஸம்க்ஷயே

                                    லிங்கானி ஸர்வஜீவானாம்

                                    ஸ்வசரீரே நிவேஸ்ய ச

                                ------------------------------------------

                                    மூலப்ரக்ருதிரேவைஷா

                                    ஸதா புருஷ சங்கதா

                                    ப்ரம்மாண்டம் தர்ஸ்யத்யேஷா

                                    க்ருத்வா சை பரமாத்மனே.

                                    தஸ்யஷா காரணம் ஸர்வா

                                    மாயா ஸர்வேஸ்வரீ சிவா.

‘”இந்த சக்தியாகப்பட்டவள் பகவதியாகவும் தேவியாகவும் இருக்கிறாள். இவளே நம்முடைய பிறவிக்கு காரணமாகவும், மஹாவித்யாவாகவும் மஹாமாயையாகவும் பரிபூரணமானவளாகவும் நாசமில்லாதவளாகவும் இருக்கிறள்.இவளே பிரகிருதி.
பரமாத்மாவுடைய இச்சாசக்தியும் இவளே.இவள் நித்யானித்ய ஸ்வரூபிணி..
வேதத்தை உற்பத்தி ஸ்தானமாக கொண்டவளும் விசாலாக்ஷியும், சர்வேசுவரியும் அவளே.
இந்த சக்திதான் பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளையும் சம்ஹரித்து, சர்வ ஜீவாத்மாக்களையும் தன்னுள் இழுத்து வைத்து பரிபாலிக்கிறாள்.
இந்த ஜகன்மாதா சதா பரம்புருஷனோடு பிரகிருதி எனப்படுபவள்.இந்த சக்தி தான் பிரம்மாண்ட்த்தை சிருஷ்டித்து பரமனிடம் காண்பிக்கிறது.
எல்லாவற்றின் மூல காரணமும் இவளே.இவள் சர்வயும் மாயையும், சர்வேசுவரியும் சிவயும் ஆகிறாள்.”( தேவீ பாகவதம் 3-3-51-61)
தேவி பாகவத்த்தில் இந்த மாயயை மோக்ஷ காரிணி என்றும் அவித்யா என்றும் ஒரே நேரத்தில் கூறப்பட்டுள்ளது.ஈசுவர சாக்ஷாத்காரத்திரற்கு இவள் வித்யா ரூபத்தில் வழிகாட்டுகிறாள். கடைசியில் இந்த மாயையானது பரமனில் லயிக்கிறாள்.அப்பொழுது  ஆத்மபோதம் அடைந்து முக்தி கிடைக்கிறது.
அதே நேரத்தில் ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரித்து காண்பிக்கின்ற ‘பேத புத்தி’ யை ஜீவாத்மாவில் உளவாக்கி, ‘நீ வேறு’ நான் வேறு ‘என்ற உணர்வை உளவாக்கி, விருப்பு வெறுப்புகளுக்கு காரணமாகிறாள் இந்த மாயை அவித்யா ரூபத்தில் வர்த்திக்கின்றபொழுது.

                              பேதபுத்திஸ்து ஸம்ஸாரே

                              வர்த்தமானா பரவர்த்த்தே.

                              அவித்யேயம் மஹாபாக!

                              வித்யா அவித்யேசவிஞ்சேயே

                              சர்வதெய்வ விசக்ஷணை:

                              வினாஅதபம் ஹி ச்சாயாயா

                              ஜாயதே ச கதம் சுகம்

                              அவித்ய்யா வினா த்த்வல்

                              கதா வித்யாம் ச வேத்தி சை

வேற்றுமை மனோபாவம் ஆளுவதால் ஜீவாத்மாக்கள் சம்சாரத்தில் தத்தளிக்கிறார்கள். இது அவித்ய்யின் காரணமாக நிகழ்கிறது. மஹாபாகா ! இதிலிருந்து உன்னை விடுவிப்பது வித்யா தான். ஆத்மபோதமுள்ள்வர்கள் வித்யையும் அவித்யையும் தெரிந்துள்ளார்கள்.ஏனென்றால் எல்லோரிலும் இரண்டும் ஒரே நேரத்தில் வசிக்கின்றது.ஒன்றில்லையென்றல் மற்றொன்றில்லை. வெயில் இருந்தால் தான் நிழலின் அருமை தெரியும்.
இதே கருத்து அத்யாத்ம ராமாயணத்தில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:

                              ப்ரவ்ருத்திமார்க்கனிரதா

                              அவித்யாவசவர்த்தின:

                              நுவ்ருத்திமார்க்கனிரதா

                              வேதாந்தார்த்தவிசாரகா:

                                அ.ராமாயணம் ஆரண்யகாண்டம் 3-320
பிரவிருத்திமார்க்கத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அவித்யையால் ஆளப்பட்ட்வர்களாகிறார்கள்; நிவிருத்தி மார்க்கத்தை அடைந்தவர்கள் வித்யாவின் ஆளுகையினால் வேதாந்த விசாரமுடையவர்களாக இருக்கிறார்கள்.
எப்பொழுதெல்லாம் ஜீவாத்மா பிரகிருதியின் ஆணைக்கு ஆட்ப்பட்டு கர்மங்களை ஆற்றுகின்றதோ அப்பொழுதெல்லாம் மாயை அவித்யாரூபத்தில் அவர்கள் மீது ஆட்சி செலுத்துகின்றது. எப்பொழுது ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கி செல்கின்றதோ அப்பொழுது மாயா வித்யாரூபத்தில் தோன்றி அவர்களை முக்தியை நோக்கி  செலுத்துகின்றது. அந்த நேரங்களில் ஜீவாத்மாவிற்கு மாயையின் மஹத் சக்தியும் தேவீ பாவமும் கிடைக்கப் பெற்று பரமாத்மாவுடன் ஜீவாத்மா லயிக்க ஏதுவாகின்றது.இதுவே மோக்ஷம்; முக்தி.
இதுவரை கடந்த சில அத்தியாயங்களாக நாம் வியாக்கியானம் செய்த  பிரம்ம்ம், நிர்குண-சகுண பிரம்ம்ம், பிரகிருதி, மாயை என்பதை சுருக்கமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்:
Ø  பிரம்ம்ம் அல்லது பரபிரம்ம்ம் அல்லது பரமாத்மா-----ஒன்றானவன்; அவனன்றி வேறில்லாதவன், அனசுவரன்( நாசமில்லாதவன்) ஆதியும் அந்தமில்லாதவன்,சர்வ வியாபி, சர்வஞ்சன், சர்வ சக்தன், அப்பிரத்தியக்ஷன்( காணக்கிடைக்காதவன்), நிர்குணன்,
பூந்தானத்தின் வார்த்தைகளில்

ഒന്നൊന്നായി നിനക്കുമ് ജന്ഗള്ക്കു

                                                          ഒന്നുകൊണ്ടറിവാകുന്ന വസ്ഥുവായ്

                                                          ஒன்னொன்னாய் நினைக்கும் ஜன்ங்கள்க்கு

                                                          ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்து

ஒவ்வொன்றாக விசாரித்து கடைசியில் எல்லாம் ஒன்றே ஏன்று அறியும் அது பிரம்ம்ம்

 

                             ഒന്നിലുമറിയാത്ത ജനന്ഗള്ക്കു

                              ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

ஒன்னில்லுமறியாத்த ஜங்கள்க்கு

ஒன்னுகொண்டும் திரியாத்த வஸ்துவாய்

இந்த ஆத்மபோதம் பெற முடியாதவர்களுக்கு இது என்ன என்றே தெரிந்துகொள்ள முடியாமல் ஒரு அவ்வியக்தமான பொருளாக தெரிகிறது பிரம்ம்ம்

Ø  ஸகுண பிரம்ம்ம்-------------------------------------------------  ஏகன், ஈசுவரன், ஆத்மா, புருஷன், ஸத், சிதான்ந்தன்,
Ø  மூல பிரகிருதி--------------------------------------------------------அனாத்மா, அஸத், முக்குண ங்களையுடையவள், ஈசுவரோனோடு சேர்ந்து பிரபஞ்சத்தை படைத்தவள்

ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്

ഒന്നിലുമൊരു  ബന്ധ്മില്ലാഥെയായ്

നിന്നവന് തന്നെ വിശ്വമ് ചമച്ഛുപോല്

                                ஒன்னுபோலெயின்னில்லாதெயுள்ளத

                                 ன்னொன்னாயுள்ளொரு ஜீவஸ்வரூபமாய்

                                 ஒன்னிலொரு பந்தமில்லாதெயாய்

                                நின்னவன் தன்னெ விசுவம் சமச்சுபோல்


Ø  மாயா------------------------------------------------------------------------ஈசுவரனின் க்ரீயாசக்தி, இச்சாசக்த
Ø  பிரபஞ்சம்-------------------------------------------------------------------இகலோகத்தில் காண்கி ன்ற பௌதிக வஸ்துக்கள்.

முன்னொரு அத்தியாயத்தில் பிரகிருதி முக்குணமுடையாள் என்று கூறினோம்.பூந்தானம் சொல்லுகிறார்:

                        மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

                        ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

இந்த குண வேறுபாடுகளையெல்லாம், ஜீவாத்மா பரமாத்மாவுடன் லயிக்கும்  பொழுது ஆத்ம சாக்ஷாத்காரம் உளவாகின்றபொழுது  பிரகிருதி தன்னுள்ளே வாங்கிக்கொண்டு தான் சிருஷ்டித்த விசுவத்தையே-பிரபஞ்சத்தையே இல்லாதாக்கிவிடுகிறாள்.
இந்த முக்குணங்களை சற்று விரிவாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்
அதுவரை பூந்தானத்துடன் சேர்ந்து பகவத் நாம சங்கீர்த்தனம் செய்வோம்.
                                  கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!                                                                     கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!                                                                        அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!                                                    ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே