Monday 14 December 2015

ஞானப்பானா-கிருஷ்ண கீதை 14

ஞானப்பானா-கிருஷ்ண கீதை 14

அத்தியாயம் 14 பிரகிருதி

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணாகோவிந்தாநாராயாண ! ஹரே!

அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

                            ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

 

ഒന്നൊന്നായി നിനക്കുമ് ജനങ്ങൾക്ക് 

                                                ഒന്നുകൊണ്ടറിവാകുന്ന വസ്ഥുവായ്

                                                ഒന്നിലുമറിയാത്ത ജനങ്ങൾക്ക് 

                                                ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

                                           ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്

ഒന്നിലുമൊരു  ബന്ധ്മില്ലാഥെയായ്

നിന്നവന് തന്നെ വിശ്വമ് ചമച്ഛുപോല്

മൂന്നുമൊന്നിലടന്ഗുന്നു പിന്നെയുമ്

ഒന്നുമില്ലപോല് വിശ്വമന്നേരത്ത്

தமிழில்

ஒன்னொன்னாய் நினக்கும் ஜனங்கள்க்கு

                                                ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்துவாய்

                                                ஒன்னிலுமறியாத்த ஜனங்கள்க்கு

                                                ஒன்னுகொண்டுமறியாத்த வஸ்துவாய்

                                                ஒன்னுபோலெயின்னில்லாதெயுள்ளத

                                                ன்னொன்னாயுள்ளொரு ஜீவஸ்வரூபமாய்

                                                ஒன்னிலொரு பந்தமில்லாதெயாய்

                                                நின்னவன் தன்னெ விசுவம் சமச்சுபோல்

                                                மூன்னுமொன்னிலடங்குன்னு பின்னெயும்

                                                ஒன்னுமில்லபோல் விசுவமன்னேரத்து

நாம் முன் அத்தியாயங்களில் பூந்தானத்தின் மேற்கண்ட கவிதா வரிகளின் பொருளை விரிவாகபார்த்துக்கொண்டிருந்தோம்மேலே போவதற்கு முன், வியாக்கியானத்தின் தொடர்ச்சிக்காக நாம் கண்ட பொருளை  சுருக்கமாக பார்ப்போம்.
‘ இதுவா பிரம்மம், இதுவா பிரம்மம் என்று ஒன்றொன்றாக விசாரித்து நாமே பிரம்மம், எல்லாமே பிரம்மம், பிரம்மத்தை தவிர வேறொன்றில்லை;  இந்த அறிவே பிரம்ம ஞானம் .
ஆனால் இப்படிப்பட்ட ஞானம் பெறாத பாமரர்களோ பிரம்மம் எது என்று தெரியாத நிலையில், இந்த தேகமே நான், தேகத்திற்குண்டாகின்ற சுக-துக்கங்கள் ‘நானுக்கு’ உண்டானதாக எண்ணி, ஒரு மாய வலையில் சிக்கி பிறப்பு-இறப்பு என்ற சக்கர சுழற்சியில் மாட்டிக்கொண்டு அவதிப் படுகிறார்கள் ஒன்றே பலதாக தோன்றுகின்ற மாயையில் சிக்கி அவித்யாவினால் அவதிப்படுகிறார்கள்.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும்’ ஒரே பிரம்மத்தின் இருபக்கங்கள் தான்.ஜீவாத்மா பிரகிருதி எனும் மாயையினால் மூடப்பட்டு
ஏகத்துவத்திலிருந்து நானாத்துவம் தோன்றி இந்த பிரபஞ்சம் ஆவிர்பவிக்கின்றது என்று கண்டோம்.’
இந்த அத்தியாயத்தில் பிரகிருதியின் குணங்களை பார்ப்போம். ஏனென்றால் பிரகிருதி மாத்ரு பாவத்துடன் தோன்றுகின்றது. சகுண பிரம்மத்தின் மூடுபடமாக பிரகிருதி அமைகிறது. அந்த சகுண-பிரகிருதி சேர்க்கையினால் இந்த பிரபஞ்சம் தோன்றுவதால் மாத்ரு குணங்கள் பிரபஞ்சத்தில் அதிகமாக தென்படுகிறது. 
பிரகிருதி முக்குணங்களுடையது. குணங்கள் என்று சொல்வதன் மூலம் அது பிரகிருதியின் தனித்தன்மை, விசேஷ பிரபாவம் என்று நினைக்க வேண்டாம் இந்த குணங்களே அதன் இயற்கை. இந்த குணங்கள் இல்லாவிட்டால் ‘அது’ பிரம்மமாகிவிடும்.
இந்த மூன்று குணங்கள் தமோ குணம், ரஜோகுணம், சத்துவ குணம் என்பவையாகும்.
தமோ குணம் என்பது சாதாரணமாக, இருள், அறியாமை என்று பொருள் பட பேசப்படுகிறது. அது சரியல்ல.தமோ குணத்தின் விளைவுகளைக்கொண்டு அப்படி வியாக்கியானிக்கப் படுகின்றது. தமோ குணம், பிரகிருதியின் திடத்தன்மையை, உறுதியை, ஸ்திரத்தன்மையை குறிக்கின்றது.அது எதிர்ப்பு சக்தியைக் குறிக்கின்றது. இது தான் பிரபஞ்ச வஸ்துக்களுக்கு உருவத்தை அளிக்கின்றது. இதை ‘ஜாட்ய’ குணம் என்றும் கூறுவார்கள்.ஜாட்ய குணம் ஜடத்தன்மையை கொடுக்கின்றது. தமோ குணம் மட்டுமுள்ள வஸ்துக்கள் சலனமின்றி அசையாப் பொருள்களாக இருக்கின்றது.
ரஜோகுணம் பிரகிருதி-புருஷ சம்யோஜனத்தால் உருவான பொருள்களுக்கு உயிரோட்டத்தை கொடுக்கின்றது. சம்ஸ்கிருத மொழியில் ’ஊர்ஜம்’ என்றால் சக்தி ( energy) என்று பொருள்.இந்த சக்திபாவம் முந்தி நிற்கின்ற பொழுது பிரபஞ்ச வஸ்துக்கள் அசையும் பொருளாகிறது.
சத்துவ குணம் ‘லயத்தை’ குறிக்கின்றது.
இந்த மூன்று குணங்களின் சேர்க்கையில் ஏற்படுகின்ற ஏற்றத் தாழ்வுகளின் காரணமாக பிரபஞ்ச வஸ்துக்களில் சுபாவ பேதம் உண்டாகின்றது. அதை சற்று பின்னால் பார்ப்போம்.
இப்படிபட்ட குண நலன்களுடைய பிரகிருதியை தோற்றுவித்த ஈசுவர சக்தியை மாயை என்று கூறுகிறார்கள் .மாயை பிரம்மத்திலிருந்து  வேறல்ல; ஈசுவர தேஜஸ்ஸே மாயை. ஈசுவரனையும் மாயையும் வேர்பிரிக்க முடியாது. பிரபஞ்ச சிருஷ்டியில் ஈசுவரனுக்கும் மாயைக்கும் சம பங்குண்டு.
நீலகண்டாசாரியன் தேவீ பாகவதத்திற்கு வியாக்கினம் எழுதும்பொழுது கூறுவார்:

“ பிரம்மன் அல்லது ஈசுவரனுக்கும் மாயைக்கும் உள்ள பந்தம் நிலாவிற்கும்சந்திரனுக்கும்நிலா ஒளிக்கும் என்பதைப் போலவும் அக்னிக்கும் அதன் ஜ்வலன சக்திக்கும் உள்ளதுபோலவும் தான்

தேவீ பாகவதம்-ஸ்கந்தம் 6-அத்தியாயம் 15-சுலோகம் 49
இதே கருத்து தேவீ பாகவதத்தில் வேறு பல இடங்களிலும் காணப்படுகிறது.
உதாரணமாக:

                                                                        தஸ்ய சேச்சாஸ்ம்யஹம் தைத்ய !

                                                                        ஸ்ருஜாமி ஸகலம் ஜகல்

                                                                        ஸ மாம் பஸ்யதி விசுவாத்மா-

                                                                        தஸ்யாஹம் ப்ரக்ருதி: சிவா.

“தைத்யா, நான் புருஷோத்தமனான பிரம்மத்தின் இச்சா சக்தியாக   இருக்கிறேன். எல்லா ஜகத்தையும் நான் சிருஷ்டிக்கிறேன். விசுவத்தினுடைய ஆத்மாவான அந்த பிரம்மன் என்னை காண்கிறான். நான் அவருடைய இச்சையின் படி வர்த்திக்கின்றேன்”
இந்த சக்தி ஈசுவரனை நோக்கி இருக்கும்பொழுது அது ‘ மஹா வித்யா’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஈசுவரனிலிருந்து மாறுபட்டு, பிரம்மத்திலிருந்து விலகி இருக்கும் பொழுது ‘அவித்யா’ என்று அறியப்படுகிறது.
ஆகவே மாயையே இரண்டு பெயரால் அழைக்கப்படுகிறது
அத்யாத்ம ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது.

                                                                        ராம மாயா த்விதா பாதி

                                                                        வித்யா அவித்யேதி தே ஸதா !

‘ ராமா, மாயை இரண்டு விதத்தில் தோன்றுகிறது;அந்த இரண்டு ரூபங்கள் வித்யையும் அவித்யையும் ஆக இருக்கிறது
ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில் சொல்லுவார்:

                                                                        பூமிராபோ அனலோ வாயு:

                                                                        கம் மனோ புத்திரேவ ச

                                                                        அஹங்கார இதீயம் மே

                                                                        பின்னா ப்ரக்ருதிரஷ்டதா

                                                                                    அபரேயம்------

                                                ப்,கீ அத் 7 சுலோ 4-5
பூமி, ஜலம், அக்னி, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்  என்ற எட்டு விதமாக தோற்றங்களும் என்னுடைய ப்ரக்ருதியே; இது அபரா பிரக்ருதி ஆகின்றது”
மேலும் கூறுவார் கிருஷணர்:

                                                                        -----அன்யாம்ப்ரக்ருதிம்வித்திமேபராம்

                                                                        ஜீவபூதாம் மஹாபாஹோ !

                                                                        யயேதம் தார்யதே ஜகத்

‘மஹா சக்திமானான அர்ஜுனா, என்னுடைய இன்னொரு பிரக்ருதி உன்னதமானதும், ஜீவனுக்கு காரணமாகவும் இந்த உலகை பரிபாலித்து வருகின்றதும் ஆக இருக்கிறது.”
இந்த இன்னொரு பிரகிருதியை பகவான் 9 ஆம் அத்தியாயம் 13 ஆம் சுலோகத்தில் ‘ மம தெய்வீ பிரக்ருதி” என்று வருணிக்கிறார். இதை ‘யோக மாயை’ என்றும் கூறுவார்கள்.
மாயையின் குண நலன்களை தேவீ பாகவதத்தில் பல   இடங்களில் சிலாகித்து சொல்லப்பட்டிருக்கிறது: அதை அடுத்தஅத்தியாயத்தில் பார்ப்போம்அதுவரை நாம் பகவத் நாமம் ஜபிப்போம்

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணாகோவிந்தாநாராயாண ! ஹரே!

அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


ஞானப்பானா-கிருஷ்ண கீதை 13

ஞானப்பானா-கிருஷ்ண கீதை 13

அத்தியாயம் 13 ஸகுண பிரம்மம்

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!                      

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

                                            

 

ഒന്നിലുമറിയാത്ത ജനങ്ങള്ക്ക്

                                                     ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

                                             ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്

ഒന്നിലുമൊരു  ബന്ധ്മില്ലാതയായ്

നിന്നവന് തന്നെ വിശ്വമ് ചമച്ഛുപോല്

இதற்கு முந்தின அத்தியாயத்தின் முடிவில் சகுண பிரம்மம் நிர்குண பிரம்மத்தின் மறுபக்கம் தான் என்று சொன்னோம்..இன்னும் சற்று ஆழமாக சென்று பார்ப்போம்.
சகுண பிரம்மம் ‘ஒன்று’ என்ற பதத்தின் மூலம் வேதங்களிலும் ஸ்ருதிகளிலும் அடையாளம் காட்டப்படுகிறது. நிர்குண பிரம்மமோ எண்ணிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. எல்லாமே நிர்குண பிரம்மம் தான். அதற்கு ‘ஏகாத்வமோ” ( ஒருமை) ‘நானாத்வமோ’’(பன்மையோ) அடைமொழியாக கொடுக்க முடியாது.
சகுண பிரம்மத்தின் தோற்றத்தை மனுஸ்மிரிதியில் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
                     ஆஸீதிதம் தமோ பூதம்
                     அப்ரஞ்சாதமலக்ஷணம்
                     அப்ரதர்க்யமவிஞ்சேயம்
                     ப்ரஸுப்தமிவ ஸர்வத:
                    
                     தத: ஸ்வயம்பூர்பகவான்
                     அவ்யக்தோ       வ்யஞ்சயன்னிதம்
                     மஹாபூதாதி வ்ருத்தௌஜா:
                     ப்ராதுராஸீத்தமோனுத:

                     யோஆஸாவதீந்த்ரியக்ராஹ்ய:
                     ஸூக்ஷ்மோஅவ்யக்த: ஸனாதன:
                     ஸர்வபூத்மயோஆசிந்த்ய:
                     ஸ ஏவ ஸ்வயமுத்பபௌ
                           *********************
                     யத்தல் காரணமவ்யக்தம்
                     நித்யம் ஸதஸதாத்மகம்
                     தத்விஸ்ருஷ்ட: ஸ புருஷோ
                     லோகே ப்ரம்மேதி கீர்த்த்யதே
‘இந்த பிரபஞ்சம் தமோ ரூபமாக உள்ளது. அறிந்து கொள்ள முடியாததாக, எந்த இலக்கணத்திற்குள்ளும் அடைபடாத, மனோ விருத்தியால்-சிந்தித்து அறிந்து கொள்ள முடியாத,எவ்விதத்திலும் தெரிந்துகொள்ள முடியாத, எல்லாம் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பது போல் இருந்தது.
பரமாத்மா யாருக்கும் தெரியாத ஒரு சக்தியாக இருந்து கொண்டிருந்தாலும், பஞ்ச பூதங்களாலான இந்த பிரபஞ்சமாக ஆவிர்பவித்தான்; தோன்றினான்.தன்னை ஆவரணம் செய்திருந்த இருளை நாசம் செய்து,,அதுவரை இந்திரியங்களுக்கு அப்பாற்ப்பட்டவனாக, ஸூக்ஷ்ம ரூபியாக, ஸனாதனாக, சர்வ பூத ரூபியாக,சிந்தனைகளுக்கெல்லாம் மேலானவனாக இருக்கும் அவர் பிரபஞ்ச உருவமாக தோன்றினார். ஸ்வயமுத்பவ
அவ்யக்தமாக, நித்தியமானவனாக’,ஸத்’ ஆகவும் அஸத் ஆகவுமிருந்த,எல்லாவற்றினுடைய காரணகர்த்தாவான பரபிரம்மம் பிரம்மா என்ற புருஷனை ஸ்ருஷ்டித்தார்.( மனு ஸ்ம்ரிதி (1.5.6. 7-11)
இதில் கவனத்தில் கொள்ளவேன்டிய வாக்கியம் ஏவ ஸ்வயமுத்பபௌ’ என்பதாகும். தானே தோன்றினார். யாராலும் உருவாக்கப் படவில்லை.
இதைத்தான் பூந்தானமும்
                   നിന്നവന് തന്നെ വിശ്വമ് ചമച്ഛുപോല്
         “நின்னவன் தன்னெ விஸ்வம் சமச்சுபோல்.”
அவனே இந்த விசுவத்தை உருவாக்கினான் போலும் என்கிறார். பிரபஞ்சம் தோன்றும் முன் அந்த பரபிரம்மம் மட்டும் இருந்தது என்று கூறிவிட்டு அந்த பிரம்மம் பிரபஞ்சத்தை சிருஷ்டித்தது என்று சொன்னால் எதிலிருந்து-எதைக்கொண்டு சிருஷ்டித்தது என்ற கேள்வி எழும்புகிறது. மண்பானக் கலைஞன் மண்பாண்டங்கள் செய்தான் என்றால் அவனுக்கு மண் மூலப் பொருளாக( rawmaterial) உளது.. அது போல் பிரம்மம் பிரபஞ்சத்தை உணுபண்ணியது என்றால் மூலப்பொருள் எது? அது தன்னிலேயே அந்த மூலப்பொருளை கண்டது.ஆகவே தன்னிலுள்ள மூலப்பிரகிருதியிலிருந்து பிரபஞ்சத்தை சிருஷ்டித்தது.    
‘தமோ ரூபம்’ என்ற சொற்றொடர் மூலபிரகிருதி என்ற பொருளில் மனுஸ்மிருதியில் பயன் படுத்தப் பட்டுள்ளது.இப்படி உண்டாகின்ற தோற்றத்திற்கு ( ஆவிர்பாவத்திற்கு) ஒரு மறை வேண்டியிருந்தது. அது தான் ‘பிரகிருதி’ (இயற்கை) எனப்படுகிறது. இந்த பிரகிருதிக்கு ஸசேதனத்வம்( உயிரூட்டுதல்) புருஷ உதவியில்லாமல் முடியாது.
இரண்டானாலும் உண்மையில் ஒன்றே ஆன,சுபாவத்தில் ‘சத்’ ஆகவும் ‘அசத்’ ஆகவும் தானே ஜீவனாகவும் ஜீவனை தாங்கி நிற்கின்ற ஒரு உபாதியாகவும் இருக்கின்ற புருஷ-பிரகிருதியின் சேர்க்கையில் உருவானது தான் இந்த பிரபஞ்சனைத்தும்.
இந்த சகுண பிரம்மம் தான் எல்லா ஜீவராசியிலும் காணப்படுகின்றது
இந்த பிரம்மம், யாருக்கும், தென்படாமல் ஆனால் எல்லாவற்றையும் கண்டுகொண்டும்,., யாராலும் கேட்க முடியாதவனாகவும் ஆனால் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும், தான் எந்த சித்த விருத்திக்கும் ஆளாகாமல் ( சிந்தனைகளற்ற) எதையும் தெரிந்துகொள்ளாமல் தெரிந்துகொண்டு அந்தர்யாமியாக,நாசமில்லாதவனாக நம்முள் வசித்து வருகிறான்.அவன் தான் ஆத்மா.
இதை பிரஹதாரண்யக உபனிஷத் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறது:

                                                                                                அத்ருஷ்டோ த்ருஷ்ட:,  ஸ்ருத: ஸ்ரோதா, மதோ மந்தா, அவிஞ்சாதோ விஞ்சாதா,  நான்யோ அதோ அஸ்மி  திருஷ்டா நான்யோஅதோ அஸ்தி ஸ்ரோதா நான்யோஅதோஅஸ்மி மந்தா,னான்யோ அதோஸ்மி விஞ்சாதைஷத ஆத்மாந்தர்யாம்யம்ருதோ அதோ அன்யதார்த்தம்.

(பிர.உப. 3. 7 23)
பக்வத் கீதையில் பகவான் கிருஷ்ணன்  இவனை ‘ஸர்வ பூதாசயஸ்திதன்” என்று கூறுகிறார்..எல்லோருடைய இதயத்திலும் குடிகொண்டிருப்பவன் அவனே.அதாவது ‘சகுண பிரம்மம்’ தான் ஜீவாத்மா என்கிறார் கிருஷ்ணன். இதுவே எல்லா ஜீவராசிகளுடைய ‘அஹம்’ புத்தியும் .ஆதியும் அந்தமும் இல்லாத புருஷன் என்றும் பரமாத்மா என்றும் அறியப்படுகிறது., சகல ஜீவன்களிலும் குடிகொள்ளுகின்ற ஆத்மாவும்,’அஹம்’ புத்தியோடுகூடிய ஜீவாத்மாவும் ஒன்றே என்று புரிந்து கொண்டுவிட்டோமென்றால்,மூலபிரகிருதியின்- அனாத்மாவாயிருக்கின்ற- தேஹத்தின் சுபாவம் என்ன என்று பார்க்க முயலலாம்.
ஆத்மா ஏக பாவத்துடன் இருக்கின்றபொழுது, அனாத்மாவான தேகம்-பிரகிருதி அனேக பாவத்துடன் இருக்கின்றது. பரமாத்மா பித்ரு பாவத்துடனும், பிரகிருதி மாத்ரு பாவத்துடனும் வர்த்திக்கின்றது.
பிரகிருதி கர்ப்பத்தை தாங்கி நிற்பதால் அதுவே எல்லாவற்றின் உற்பத்தி ஸ்தானமும்.
பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லுவார்:

                                                                மம யோனிர்ம்மஹல் ப்ரம்ம

                                                                தஸ்மின் கர்ப்பம் ததாம்யஹம்

‘என்னுடைய உற்பத்தி ஸ்தானம் மஹல்(மஹத்) பிரம்மம் அதாவது பிரகிருதி தான்.
இந்த பிரகிருதியின் குண நலன்கள் சகல ஜீவராசிகளிலும் ப்ரத்யக்ஷமாகிறது. ஆகவே பிரகிருதியின் குணங்கள் யாவை என்று அறிய வேண்டியது அவசியமாகிறது. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.அதுவரை பகவன் நாமம் சொல்லுவோம்.
            கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
            கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
                    அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
                 ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே