Monday 7 December 2015

ஞானப்பானா 12 –கிருஷ்ணகீதை

ஞானப்பானா 12 –கிருஷ்ணகீதை


அத்தியாயம் 12- நிர்குண பிரம்மத்திலிருந்து சகுண பிரம்மம்

 

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

 

 

ഒന്നൊന്നായി നിനക്കുമ് ജനങ്ങൾക്ക്

                                                ഒന്നുകൊണ്ടറിവാകുന്ന വസ്തുവaയ്

                                                ഒന്നിലുമറിയാത്ത ജനങ്ങൾക്ക്

                                                ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

                                                 ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്


ഒന്നൊന്നായി നിനക്കുമ്

ജനങ്ങൾക്ക്

ഒന്നുകൊണ്ടറിവാകുന്ന 

വസ്തുവായ്


ஒன்னொன்னாயி நினக்கும்ஜனங்கள்க்கு
ஒன்னுகொண்டறிவாகுன்ன வஸ்துவாய்

,'இதுவா நான், இதுவா நான், இது இல்லை, இது இல்லை, இது இல்லை' என்று விசாரம் செய்து கடைசியில் நான் யார்என்று உணரும்பொழுதுஇருப்பது ஒன்றே” ,’அதை தவிர்த்து வேறொன்றில்லைஎன்று உணருகிறோம்.

ஏகமேவாத்விதீயம்

சாந்தோக்ய உபனிஷத் கூறுகிறது.’உள்ளது ஒன்றே, இரண்டாவது ஒன்றில்லை’
எல்லையில்லாத-அனந்தமான-,எவ்வித குண  நலன்களையும் கூறமுடியாத, என்றென்றும் அழியாத, உணர்வுகளற்ற,ஒன்று தான் ‘அது’
நாம்-ரூபங்களுக்கெல்லாம் அதீதமான,விவரிக்க இயலாத நிர்குண பிரம்மம் தான்’அது’.

                                                நாஸதாஸீண்ணோ ஸதாசீல்

                                                ஆ நீத வாதம் ஸ்வ்தயா ததேகம்

                                                தஸ்மாத்தான்யன்னபர: கிசே நாஸ

                                ரிக்வேதம் 10-129-1.2
அதை உணருகின்ற நேரத்தில், ‘அசத்’ பாவம் இராது; ‘சத் பாவமும்’ இராது.அதாவது ‘இல்லை’ என்பதும் இல்லை; ‘உண்டு’ என்பதும் இல்லை.’அது வெறும் சாக்ஷி மாத்திரமாக இருந்து கொண்டிருக்கும்.
‘அதுவே எல்லாம்; அதினுள்ளேயே எல்லாமும்” என்ற நிலை.
இருள் என்ற ஒன்றில்லையென்றால் பகலும் கிடையாது; இரவும் கிடையாது.அங்கே அனந்தபூரணனான சத்சிதானந்தன் மட்டும் தான் இருப்பான்.
இதைத்தான் ‘ஸ்வேதாசுவதரோபனிஷத்தில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது

                                                த்வே அக்ஷரே ப்ரம்மபரே தன்வந்தே

                                                வித்யாரே வித்யேனிஹிதே யத்ர கூடே

நாசமில்லாத,எல்லையில்லாத-வரையறுக்க முடியாத, உன்னதமான,பிரம்மத்தில் ஞானமும் அஞ்ஞானமும் உள்ளடங்கியிருக்கிறது.
எண்ணிக்கைகளுக்கு புறம்பான,’அது’ ஒரு சப்தத்தில் அடக்கமாயுள்ளது.
‘அது’ என்ன என்ன என்று கேட்ட நசிகேதஸ்ஸுக்கு யமதர்ம ராஜன் அளித்த பதில் எல்லாவற்றையும் விளக்குகிறது.
நசிகேதாசு கேட்டான்:

                                                அன்யத்ர தர்மாதன்யத்ராதர்மால்

                                                அன்யத்ராஸ்மால் க்ருதாக்ருதால்

                                                அன்யத்ர பூதாச்ச

யத்தல் பஸ்யசி தத்வத

தர்மத்திலிருந்து மாறுபட்ட,அதர்மமுமல்லாத,ஆற்றப்பட்ட செயல்களிற்கும் ஆற்றப்படாத செயல்களுக்கும் அன்னியமாக செயலுகள் ஆற்றக்கூடிய சக்திக்கும், ஆற்ற இயலாத சக்தியின்மைக்கும் அன்னியமான ஏதொன்று இருக்கிறதோ அதை எனக்கு உபதேசிபீர்களாக,” என்று நசிகேதசு எமதர்மரஜனிடம் கேட்பதாக கடோபனிஷத்தில் (1.2.14) வருகிறது.
யமதர்ம ராஜன் அப்பொழுது சொல்வான்:

                                                    ஸர்வே வேதா யல்பதமாமனந்தி

                        தபாம்ஸி ஸர்வாணி ச ய த்வதந்தி

                        யதிச்சந்தோ ப்ரம்மசர்யம் சரந்தி

                                                      தத்தே பதம் சங்க்ரஹணே ப்ரவீமி,

                        ஓம் இத்யேதல்

                        ஏதத்யே வாக்ஷரம் ப்ரம்ம

                        ஏத தேவாக்ஷரம் பரம்

‘எந்த ஒரு சொல்லை சகல வேதங்களும் போற்றுகின்றனவோ, யாதொன்றை தபசிகள் எல்லொரும் தியானம் செய்கிறார்களோ யாதொன்றிற்காக மனிதர்கள் பிரம்மசரியம் அனுஷ்டிக்கிறார்களோ, அது ஓம்காரம் என்பதாகும். அந்த அக்ஷரமே பிரம்மம்.அதுவே பரமோன்னதமானது.”
"ஓம்” என்பது தான் ஆதியும் மத்தியும் அந்தமும். இது மூன்று அக்ஷரங்களின் கூட்டு. .’அ’ ‘உ’ ‘ம்’ என்பதே அவை.
அதற்கு நிகரான வேறொன்று இல்லை.அது ஸ்ருஷ்டி , சம்ரக்ஷணை, சம்ஹாரமூர்த்திகளின் மொத்த உருவம்.
‘ஓங்காரம்” ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளையும் குறிக்கிறது.
 “அ’.என்ற எழுத்து வைஸ்வாநரனையும் ‘உ’ தைஜசனையும் ‘மகாரம்’ ப்ரஞ்சா’ ஸ்திதியையும் குறிப்பிடுகிறது என்று மாண்டூக்ய உபனிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
வைஸ்வா நரன் ஜாக்ரத்தையும், தைஜசன் ஸ்வப்னாவஸ்தையையும், ப்ரஞ்சானன் சுஷுப்தி அவஸ்தையும் பிரதிபலிக்கின்றது.
இந்த மூன்றின்சங்கமம் தான் ஆத்மா-
இப்படிப்பட்ட ஆத்மா தான் பரமாத்மா,. அது நமக்கு மிகவும் அருகில்—தவறு, தவறு- நம்முள்ளேயே இருக்கிறது.அதனால்த் தான் மாண்டுக்கியத்தில் ‘அயமாத்மா
பிரம்மம்’ என்று கூறப்பட்டுள்ளது.
சாந்தோக்யத்திலும் ஸர்வம் கல்விதம் பிரம்மஎன்று கூறப்பட்டுள்ளது. நாம் காணுகின்ற எல்லா பொருள்களும் பிரம்மமே.
இந்த பிரபஞ்சமே ‘பிரம்மம்’ தான். ஏனென்றால் ‘தஜ்ஜலானிதி’ –அதிலிருந்து தோன்றி அதனால் வளர்க்கப்பட்டு அதிலேயே லயிக்கின்றது.”தத்ர ஜாயதே, லீயதே, அனிதி”
இப்படிப்பட்ட பிரம்மத்தைதான் எல்லோரும் அறிந்து கொள்ள உண்ர்ந்துகொள்ள தவமிருகிறார்கள்.அறிந்துகொண்டாலோ நித்ய சாந்தி-பரமானந்தம் தான் என்று ஸ்ருதிகள் கூறுகின்றன.
இதை உணரவில்லையென்றால்

ഒന്നിലുമറിയാത്ത ജനങ്ങൾക്ക്

                                                ഒന്നുകൊണ്ടുമ് തിരിയാത്ത വസ്തുവായ്

                                                 ഒന്നുപോലെയൊന്നില്ലാതെയുള്ളത

ന്നൊന്നായുള്ളൊരു ജീവസ്വരൂപമായ്


                                         ஒன்னிலுமறியாத்த ஜனங்கள்க்கு

                                         ஒன்னுகொண்டும் திரியாத்த வஸ்துவாய்

                                          ஒன்னுபோலயொன்னிதயுள்ளத

                                         ந்னொன்னாயுள்ளொரு ஜீவஸ்வரூபமாய்


இதை அறிந்தவர்கள் ‘எல்லாம் ஒன்றே’ என்று உணருகிறார்கள். அறியாதவர்கள் ஒன்றைப் போல் மற்றொன்றில்லையே ஆகவே; அது வேறு , இது வேறு என்று வேற்றுமை பாராட்டி விருப்பிற்கும் வெறுப்பிற்கும் ஆளாகிறார்கள். இனபத்தையும் துன்பத்தையும் அனுபவிக்க ஏதுவாகிறது. இந்த பிரபஞ்சத்தின் ஏற்ற-தாழ்வுகளுக்குள் அடைக்கப்படுகிறார்கள்.
ஏன் இந்த நிலைமை? எப்படி இந்த ‘இரட்டை’ ( துவித) மனோபாவம் வந்து  சேருகிறது? ஏன் இந்த அறியாமை?
 ஸ்ருதி இதையும் சொல்லியிருக்கிறது”

                        ஏதத்வை ஸத்யகாம பரப்ஜாபரஞ்ச ப்ரம்ம யதோங்கார:”

சத்யக்மா, இந்த ஓங்காரம் தான் பர- நிர்குண பிரம்மம்; அதுவே தான் அபர- சகுண ப்ரம்மம்.

                  

ஒன்றே  பலதாக தோன்றுவது சகுண பிராம்மத்தின் செயல். அவித்யையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஒன்றையே-நிர்குண பிரம்மத்தையே  பலரூபத்திலும் நாமங்களிலும் காண்கிறார்கள்..இது எப்படி நிகழ்கிறது?

                        “ த்வே வாவ ப்ரம்மணோ ரூபே ம்மூர்த்தஞ்சை வாமூர்த்தஞ்ச மர்த்த்யஞ்ச ஸ்திதஞ்ச ய்ச்ச ஸச்ச த்யச்ச”

மேற்கூறிய ஸ்ருதிவாக்கியத்தின் பொருள் என்னவென்றால், ‘ பிரம்மத்திற்கு இரண்டு நிலைகள் உள்ளன,;ரூபாவஸ்தை, அரூபாவஸ்தை. மாற்றத்திற்கு உள்ளாவது, மாற்றமில்லாதது, எல்லையுள்ளது, எல்லையில்லாதது, சத் பாவம் ,அசத் பாவம்’  என்பதேயாகும்.
சொரூபமும் விகாரமுமுள்ள பிரம்மம் வேறொன்றா? இல்லை அது நிராகார, நித்ய, சத் பிரம்மமே தான்,அதன் இன்னொரு அவஸ்தாந்தரம் தான்.அதுவே சகுண பிரம்மம் எனப்படுகிறாது.
 நிர்குணத்தின் மறுபக்கமான சகுணத்தின் தோற்றத்தை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். அது வரை பூந்தானத்தின் சொல்படி பகவத் நாம சங்கீர்த்தனம் செய்வோம்

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


 பின் குறிப்பு:

பகவான் இரமணரை உலகிற்கு காட்டிய சேஷாத்திரி சுவாமிகள் ஒருமுறை ஒரு கழுதையும் இன்னொரு முறை எருமை மாட்டையும் நமஸ்கரிப்பதைக் கண்ட பக்தர்கள் ,' ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு சுவாமிகள் சொன்னார்: ' நான் நீங்கள் சொல்வதை எதையும் காணவில்லை. என் முன்னால் பிரம்மம் மட்டுமேயுள்ளது'

No comments:

Post a Comment