Sunday 7 February 2016

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 24



ஞானப்பானா-கிருஷ்ணகீதை 24


அத்தியாயம் 24

புனரபி ஜன்னம், புனரபி மரணம்

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


 നരകത്തില് കിടക്കുന്ന ജീവന് പോയ്
ദുരിതന്ഗളൊടുന്ഗി മനസ്സിന്റെ
പരിപാകവുമ് വന്നു ക്രമത്താലെ
നരജാതിയില് വന്നു പിറന്നിട്ടു
സുക്രുതമ് ചെയ്തു മേല്പോട്ടു പോയവര്
സുഖിച്ചീടുന്നു സ്ത്യലോകത്തോളമ്
സ്ത്കര്മ്മമ് കൊണ്ടു മേല്പോട്ടു പോയവര്
സ്വര്ഗത്തിന്ഗലിരുന്നു രമിച്ചുടന്
സുഖിച്ചന്ഗനെ പോയിടുമ് കാലവുമ്
സുക്രുതന്ഗളുമൊക്കെയൊടുന്ഗിടുമ്
പരിപാകമൊരെള്ളോളമില്ലവര്
പതിച്ചീടുന്നു നമ്മുടെ ഭൂമിയില്

நரகத்தில் கிடக்குன்ன ஜீவன் போய்
துரிதங்களொடுங்கி மனஸ்ஸின்றெ
பரிபாகவும் வன்னு கர்மத்தாலெ
நரஜாதியில் வன்னு பிறன்னிட்டு
ஸுக்ருதம் செய்து மேல்போட்டு போயவர்
ஸுகிச்சிடுன்னு ஸத்யலோகத்தோளம்
ஸத்கர்மம் கொண்டு மேல்போட்டு போயவர்
ஸ்வ்ர்கத்திலிருன்னு ரமிச்சுடன்
ஸுகிச்சங்கனெ போயிடும் காலவும்
ஸுக்ருதங்களுமொக்கெயொடுங்கிடும்
பரிபாகமெள்ளோளவுமில்லவர்
பதிச்சீடுன்னு நம்முடெ பூமியில்

ஜீவாத்மா செய்கின்ற பாபகர்மனங்களின் விளைவாக நீசயோனிகளில் பிறந்து கொடிய வேதனைகள் அனுபவிக்கிறது,. அப்படி  பாப மூட்டையெல்லாம் கழிந்து போகும் பொழுது  மனம் ஓரளவு பக்குவமாகி விடுகிறது..நீண்டகாலம் பக்குவமடைந்த மனதுடன் இந்த பிரபஞ்சத்தில் வாழுகின்ற ஜீவாத்மா கடைசியில் மனித உடலில் பிரவேசித்து இந்த பூமியில் பிறக்கின்றது. மனிதப்பிறவியெடுத்த ஆத்மா சத் கர்மங்கள் செய்து சுகமான வாழ்க்கை வாழுகின்றது. 

பூந்தானம் சொல்கிறார்,’ சுக்ருதம் செய்த அந்த ஆத்மாக்கள் மேல் லோகத்திற்கு சென்று ஸ்வர்கானுபவம் பெறுகிறார்கள்.” என்று. சுவர்க்க லோகம் செல்கிறார்கள் என்று அலங்காரமொழியில் கூறுகிறார் என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஆனால் சத் கர்ம பலன்களின் கையிருப்பு குறைந்துகொண்டே வரும். முடிவில் சத் கர்ம பலன்களின் இருப்பு வற்றிவிடும்பொழுது அந்த ஆத்மாக்கள் மீண்டும் பூமியில் இறங்கி வரத்தான் வேண்டும். குடும்ப ஆஸ்தியை விற்று  சுகம் தேடுபவர்கள் ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பத்தானே வேண்டும். அது போல் இன்ப துன்பங்கள் நிறைந்த யதார்த்த வாழ்விற்கு திரும்ப வந்து தான் ஆக வேண்டியுள்ளது. யாரும் சத் கர்மங்கள் மட்டுமே செய்து கையிருப்பை வற்றாமல் பார்த்துக்கொள்ள முடியாது. இகலோக வாழ்வு என்பது புண்ணிய-பாப கர்மங்களின் கலைவையான ஒரு வாழ்க்கை.

ദുരിതമ് ചെയ്തുചെയ്തവര് പിന്നെപ്പോയ്
നരകന്ഗളില് വെവ്വേറെ വീഴുന്നു
സുരലോകത്തില് നിന്നൊരു ജീവന് പോയ്
നരലോക മഹീസുരനാകുന്നു.
ചണ്ടകര്മന്ഗള് ചെയ്തവന് ചാകുമ്ബോള്
ചണ്ടാലകുലത്തിന്ഗല് പിറക്കുന്നു.
അസുരന്മാര് സുരന്മാരായിടുന്നു
അമരന്മാര് മരന്ഗളായിടുന്നു
അജമ് ചത്തു ഗജമായ് പിറക്കുന്നു
നരി ചത്തു നരനായ് പിറക്കുന്നു
നാരി ചത്തുടനോരിയായ് പോകുന്നു.
ക്രുപ കൂടാതെ പീഡിപ്പിച്ചീടുന്ന
ന്രിപന് ചത്തു ക്രിമിയായ് പിറക്കുന്നു
ഈച്ച ചത്തൊരു പൂച്ചയായിടുന്നു.
ഈശ്വരന്റെ വിലാസന്ഗളിന്ഗനെ

துரிதம் செய்துசெய்தவர் பின்னெ போய்
நரகங்கலில் வெவ்வேறெ வீழுன்னு.
ஸுரலோகத்தில் நின்னொரு ஜீவன் போய்
நரலோக மஹீஸுரனாகுன்னு
சண்டகர்மங்கள் செய்தவர் சாகும்போள்
சண்டாலகுலத்தில் பிறக்குன்னு.
அஸுரன்மார் ஸுரன்மாராகுன்னு
அமரன்மார் மரங்களாகுன்னு.
அஜம் சத்து கஜமாய் பிறக்குன்னு
நரி சத்து நரனாய் பிறக்குன்னு
நாரி சத்துடனோரியாய் போகுன்னு
க்ரிப கூடாதெ பீடிப்பிச்சீடுன்ன
ந்ரிபன் சத்து க்ரிமியாய் பிறக்குன்னு
ஈச்ச சத்தொரு பூச்சயாயீடுன்னு
ஈசுவரன்றெ விலாஸங்களிங்கனெ.

பாப கர்மங்கள் செய்கின்றவர் நரக வாழ்க்கை வாழ வேண்டிவருகிறது. சுவர்க்க லோக சுகானுபவங்கள் நேற்று வரை அனுபவித்து வந்த ஜீவன் ஒரு நாள் திடீரென இகலோகத்திலேயே பாபிகளின் வாழ்வு வாழ வேண்டி வருகிறது. பாபகர்மங்கள் மட்டுமே செய்கின்றவர் இறக்கும்பொழுது சண்டால குலத்தில் பிறக்க வேண்டி வருகிறது. அதாவது ஒரு பிறவியில் பாபங்கள் மட்டுமே செய்கின்றவர் அடுத்த பிறவியில் மிகுந்த கஷ்ட ஜீவனம் நேரிட வேண்டி வருகிறது.
அசுரர்கள் தேவர்களாகிறார்கள்; அமரர்கள்-தேவர்கள் மரங்களாகிறார்கள்.அஜம்-ஆடு இறந்து யானையாகப் பிறக்கிறது, நரி மறுபிறவியில் நரன்-மனிதனாகப் பிறக்கிறது; நாரி- பெண் ஓரியாக பிறக்கிறாள்.
கரூணை-தயை எனும் குணம் லவ லேசமும் இல்லாத ந்ரிபன்-மன்னன் மறு பிறவியில் கிருமியாகிறான் ;ஈ இறந்து பூனையாய் பிறக்கிறது.
என்னே, பகவானின் மாயா விலாசங்கள் ! என்று பூந்தானம் வியக்குகிறார்.அந்த வியப்பின் வழியாக நாம் ஆற்றும் புண்ணிய பாப கர்மங்களின் விளைவுகளை மிகுந்த கவி நயத்துடன் எழுதியுள்ளார். அது மட்டுமல்ல; இந்த இகலோக வாழ்வில் சுகம் மட்டும் என்பதில்லை;துக்கமும் கூடவே வருகிறது; இன்று சுவர்க்கமென்றல் நாளை நரகம் எங்கிறார் பூந்தானம்
‘புனரபி ஜன்னம், புனரபி மரணம்’ என்று மட்டு மல்ல, இறப்பு-பிறப்பு நியதி நமது கர்மபலன்களைப் பொறுத்து நம்மை நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ, ஆறறிவு படைத்த மனிதனாகவோ, ஓரறிவு மட்டுமேயுள்ள மற்ற ஜந்துக்களாகவோ, அல்லது வாயில்லா செடி-கொடிகளாகவோ பிறக்க வைக்கின்றது.
இயற்கையின் இந்த கோரப்பிடியிலிருந்து முக்தியடைவது எப்படி?
பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில்
அதுவரை கிருஷ்ண நாமம் ஜபிப்போம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே



No comments:

Post a Comment