Sunday 28 February 2016

ஞானப்பானா-கிருஷ்ண்கீதை 28

ஞானப்பானா-கிருஷ்ண்கீதை 28

அத்தியாயம் 28

பாரத மகிமை

கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


യുഗമ് നാലിലുമ് നല്ല കലിയുഗമ്
സുഖമേതെന്നു മുക്തി വരുത്തുവാന്
ക്രുക്ഷ്ണ,ക്രിഷ്ണ,മുകുന്ദ, ജനാര്ദ്ദന,
ക്രുഷ്ണ, ഗോവിന്ദ, രാമായെന്നിന്ഗനെ
തിരുനാമസന്ഗീര്ത്തനമെന്നി മ-
റ്റേതുമില്ല പ്രയത്നമറിന്ജ്ന്ജാലുമ്
അതു ചിന്തിച്ചു മറ്റുള്ല ലോകന്ഗള്
പതിനാലിലുമുള്ള ജനന്ഗളുമ്
മറ്റു ദ്വീപുകളാറിലുമുള്ളോരുമ്
മറ്റു ഖണ്ഡന്ഗളിലെട്ടിലുമുള്ളോരുമ്
മറ്റു യുഗന്ഗള് മൂന്നിലുള്ളോരുമ്
മുക്തി തന്ഗള്ക്കു സാധ്യമല്ലായ്കയാല്
കലികാലത്തെ ഭാരതഖ്ണ്ഡത്തെ
കലിതാദരമ് കൈ വണന്ഗീടുന്നു.
അതില് വന്നൊരു പുല്ലായിട്ടെന്ഗിലുമ്
ഇതുകാലമ് ജനിച്ചുകൊണ്ടീടുവാന്
യോഗ്യത വരുത്തീടുവാന് തക്കൊരു
ഭാഗ്യമ്പോരാഥെ പോയല്ലോ ദൈവ്മേ!
ഭാരതഖണ്ഡത്തില് പിറന്നോരു
മനുഷര്ക്കുമ് കലിക്കുമ് നമസ്കാരമ്!.
എന്നെല്ലാമ് പുകഴ്ത്തീടുന്നു മറ്റുള്ളോര്
എന്തെന്നിനു നാമ് പറന്ജീടുന്നു?

யுகம் நாலிலும் நல்ல கலியுகம்
ஸுகமேதென்ன முக்தி வருத்துவான்
க்ரிஷ்ண,க்ரிஷ்ண, முகுந்த, ஜனார்தன.
க்ரிஷ்ண, கோவிந்த,ராமாயென்னிங்கனெ
திருனாமஸங்கீர்தனமென்னி ம-
ற்றேதுமில்ல ப்ரயத்னமறிஞ்சாலும்

நாலு யுகங்களுள்ளும் மேலான கலியுகத்தில் முக்தி அடைவதற்கு பகவத் நாம சங்கீர்தனம் ஒன்று தான் வழி.அதுவும் பாரத தேசத்தில் பிறந்தவர்களுக்கு அது மிகவும் சுலபம் எங்கிறார் பூந்தானம்.ஆகவே தான் மற்ற தேசத்தில் வாழுகின்ற எல்லோரும், மற்ற யுகங்களில் வாழ்ந்த எல்லோரும் பாரத தேசத்தில் பிறந்த நம்மைப் பார்த்து வியக்கிறார்கள்; பொறாமைப் படுகிறார்கள்.

அது சிந்திச்சு மற்றுள்ள லோகங்கள்
பதிமூன்னிலுமுள்ள ஜனங்களும்
மற்று த்வீபுகளாறிலுமுள்ளோரும்
மற்று கண்டங்களெட்டிலுமுள்ளோரும்
மற்று மூன்னு யுகங்களிலுள்ளோரும்
முக்தி தங்கள்க்கு ஸாத்யமல்லாய்கயால்

மற்ற பதின்மூன்று லோகங்களிலும் வாழ்கிறவர்களுக்கும் முக்தி பெறுவது இயலாத காரியமாக இருக்கிறது.பதின்மூன்று லோகங்கள் எவை? ஸத்ய லோகம்,தபோலோகம்,ஜனலோகம்,மஹர்லோகம்,ஸ்வர்லோகம், புவர்லோகம்,அதலம், விதலம், ஸுதலம்,தலாதலம்,மஹாதலம்,ரஸாதலம்,பாதாலம்,என்பவையே அந்த பதின்மூன்று லோகங்கள்.மட்டுமல்ல ஆறு தீவுகளில்,(ப்லாக்ஷ த்வீபம்,ஶலாமல த்வீபம்,குஸ த்வீபம், க்ரௌன்ச த்வீபம்,ஷாகத்வீபம் மற்றும் புஷ்கர த்வீபம்)வாழுவுபர்களுக்கும், மற்ற ஆறு கண்டங்களில் வாழுவர்களுக்கும்(இலவிரதம்,பத்ரசவம்,ஹிரன்மயம்,குரு,கிம்புருஷம்)மற்ற மூன்று யுகங்களில் ( க்ருதா யுகம்,த்ரேதா யுகம், த்வாபர யுகம்) வழ்ந்தவர்களும் முக்தி சாத்தியமில்லை என்று புரிந்து மிகவும் மரியாதையுடன் நம்மை நோக்குகிறார்கள்
குறிப்பாக மேற்கண்ட மூன்று யுகங்களைக் குறித்து சில விஷயங்களை சொல்ல வேண்டியுள்ளது.
நமது வேதாந்த கிரந்தங்கள் தர்மத்தை ரிஷபமாக-காளைமாடாக உருவகப் படுத்துகின்றன.க்ருதா யுகத்தில் அதற்கு நான்கு கால்கள் உள்ளன.அவை முறையே தபா, சௌசா, தயா, ஸத்யா என்பவையாகும். தபா என்றால் தார்மீக எளிமை,தூய்மை,பூத தயை, மற்றும் சத்தியம் என்பவையாகும்.நான்கு கால்களில் நிற்கின்ற தர்மம் அந்த யுகத்தில் சஞ்சலமற்றிருந்தது.மனிதர்களும் ஸாத்விக குண்முடையவர்களாகவே இருந்தார்கள் கடும் தவத்தின் மூலம் தான் பிரம்மத்தை அறிய முடிந்தது; முக்தி பெற முடிந்தது.
த்ரேதா யுகத்தில் தர்ம்ம் எனும் ரிஷபத்தின் ஒரு கால் காணாமல் போய்விட்டது.தவம் அல்லது தார்மீக எளிமை காணாமல் போய்விட்ட்து. படாடோபம் தலை தூக்கியது. இருந்தாலும் தர்மம் அழியவில்லை.ஆகவே ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கு கடுமையான மன சுத்தமும் சாரீரிக சுத்தமும் பரிபாலிக்க வேண்டிவந்தது.பூத தயையும் கருணையும் உண்மையும் இன்றியமையததாக இருந்தது. பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் மிகவும் அத்தியாவசியமான குணமாக கருதப்பட்டது.
த்வாபர யுகத்தில் இன்னும் ஒரு கால் இல்லாமல் போய்விட்ட்து.சௌசம் காணாமல் போய்விட்ட்து.தயையும் சத்தியமும் நிலைத்து நின்றது. ஆகவே ஆத்மசாக்ஷாத்காரத்திற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
இன்று தர்மத்திற்கு ஒரே கால் தான் உள்ளது.ஸத்தியம் மட்டும்.தர்மம் நிற்பதற்கு முடியாமல் தடுமாறுகிறது.இன்று ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைப்பதற்கு பகவன் நாம ஸக்கீர்தனம் ஒன்றே வழி.அது மிகவும் எளிதான வழியாகவும் தென்படுகிறது.ஆகவே மனிதர்கள் இந்த கலியுகத்தில் பாரத வர்ஷ்த்தில் பிறப்பதை பாக்கியமாக கருதுகிறார்கள்.

கலிகாலத்தெ பாரதக்ண்ட்த்தெ
கலிதாதரம் கைவணங்கீடுன்னு.

ஆகவே கலிகாலத்தில் பாரத தேசத்தில் பிறந்தவர்களை மிகுந்த ஆதரவுடன் பிற தேசத்தவர் வணங்குகிறார்கள்

அதில் வன்னொரு புல்லாயிட்டெங்கிலும்
இதுகாலம் ஜனிச்சுகொண்டீடுவான்
யோக்யத வருத்தீடுவான் தக்கொரு
பாக்யம் போராதெ போயல்லோ தெய்வமே!

இந்த யுகத்தில் பாரத தேசத்தில் ஒரு புல் செடியாகவேனும் பிறக்க தகுதி இல்லாமல் போய்விட்டதே என்று தெய்வத்தை மனம் உருகி வேண்டுகிறார்கள்.

பாரத கண்ட்த்தில் பிறன்னோரு
மானுஷர்க்கும் கலிக்கும் நமஸ்காரம் !
என்னெல்லாம் புகழ்த்தீடுன்னு மற்றுள்ளோர்
என்னதெந்தினு நாம் பறஞ்சீடுன்னு ?

‘அப்படி பிறக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையென்றாலும் பாரத தேசத்தில் பிறந்தவர்களை வணங்கி புகழ்ந்து பாடுகிறார்கள்’  என்கிறார் பூந்தானம்.
பாரத தேசம் அப்படி என்ன புண்ணியம் செய்ததூ? இந்த தேசத்தில்தான் உபனிஷத்துக்களும் வேதங்களும் ஜனித்தன. இந்த மண்ணில்த்தான் வியாசர், வால்மீகி,சங்கரர், பகவான் ரமணர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் அவதரித்தார்கள். அப்படிப்பட்ட மண்ணில் பிறந்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள் என்று கூறுவதில் என்ன தவறு?
அந்த புண்ணியம் நீடிக்க பாடுவோம் பகவன் நாமம்:

கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே





No comments:

Post a Comment