Sunday 28 February 2016

ஞானப்பானா- கிருஷ்ண்கீதை 29

ஞானப்பானா- கிருஷ்ண்கீதை 29

அத்தியாயம் 29

                     എന്തിന്റെ കുറവ്?

நமுக்கென்ன குறை?

 

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


   കാലമിന്നു കലിയുഗമല്ലിയോ?
   ഭാരതമിപ്രദേശവുമല്ലയോ?
    നമ്മെളെല്ലാമ് നരന്മാരുമല്ലയോ?
   ചെമ്മേനന്നായ് നിരൂപിപ്പിനെല്ലാരുമ്

காலமின்னு கலியுகமல்லியோ?
பாரதமிப்ரதேசவுமல்லயொ?
நம்மெளெல்லாம் நரன்மாருமல்லயோ?
செம்மேனன்னாய் நிரூபிப்பினெல்லாரும்.

 ഹരിനാമന്ഗളില്ലാതെ പോകയോ?
  നരകന്ഗളില് പേടികുറകയോ?
  നാവു കൂടാതെ ജന്മമതാകയോ?
 നമുക്കിന്നി വിനാശമില്ലായ്കയോ?

ஹரி நாமங்களில்லாதெ போகயோ?
நரகங்களில் பேடி குறகயோ?
நாவு கூடாதெ ஜன்மமதாகயோ?
நமுக்கின்னி வினாசமில்லாய்கயோ?

 കഷ്ടമ് കഷ്ടമ് നിരൂപണമ് കൂടാതെ
 ചുട്ടു തിന്നുന്നു ജന്മമ് പഴുതെ നാമ്

கஷ்டம் கஷ்டம் நிரூபணம் கூடாதெ
சுட்டு தின்னுன்னு ஜன்மம் பழுதெ நாம்.

    இதற்கு முன்னாலுள்ள வரிகளில் பூந்தானமெனும் பக்த ஞானி பாரத தேசத்தின் பெருமையும், கலிகாலத்தின் விசேஷங்களையும், மனித ஜன்மத்தின் மேன்மையும் குறித்து விவரித்தார். உலகமே பாரத தேசத்தின் தார்சனிக பாரம்பரியத்தை  புகழ்ந்து பாடுகின்றனர் என்று சொன்னார்.மேற்கத்தியர் லௌகீக சுக போகங்களின் பின்னால் ஓடி ஓடி களைத்துப் போய், பௌதிக வஸ்துக்கள் நிரந்தர சாந்தியை அளிப்பதில்லை என்று புரிந்து கொண்டு பாரதத்தை நோக்கி வருகிறார்கள்.ஏன்? இங்கு சொல்லப் படும் வேத கோஷங்களும் மந்திரோச்சாடனங்களும் பகவத் நாம் கீர்த்தனங்களும் இந்த பூமியை புண்ணிய பூமியாக்கியுள்ளது என்பதால்த் தானே! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று இந்த தேசத்தில் கால் வைத்தாலே சாந்தி கிடைத்து விடும் என்று நம்பித் தானே எல்லோரும் பாரதத்தை நோக்கி வருகிறார்கள்!
ஆனால் நாம் என்ன செய்கிறோம்? .நமது பாரம்பரியத்தை மறந்து விட்டு, நமது வேதங்களும் உபனிஷத்துக்களும் காட்டும் பாதையை விட்டு விலகி லௌகீக சுக போகத்தின் பின்னால் ஓடுகிறோம். எதை மேற்கத்தியர் உதாவக்கரை என்று உதறித் தள்ளிவிட்டு நம் தேசத்தை நோக்கி ஓடி வருகிறார்களோ,அதை வாரியணைத்து மகிழ நாம் முயலுகிறோம். நமக்கு என்ன ஆயிற்று என்று வியக்குகிறார் பூந்தானம் இந்த வரிகளில்.
அந்த ஞானி கேட்கிறார்:
‘இது கலிகாலம் என்பது நமக்கு மறந்து போய் விட்டதா? நாம் பிறந்திருப்பது பாரத தேசம் தானே? நாம் மனித ஜன்ம தானே எடுத்துள்ளோம்? சற்றே யோசியும் பிள்ளாய்’    என்கிறார் பூந்தானம்
‘இங்கு பகவன் நாமத்திற்குத்தான் பஞ்சம் வந்து விட்டதா?’ விஷ்ணு சஹஸ்ர நாமம் போன்ற எத்தனை சஹஸ்ர நாமங்களை நமது ஆச்சாரியர்கள் நமக்கு அளித்துள்ளார்கள்? வேண்டாம்; கஷ்டமான பெயர்களை சொல்ல வேண்டாம்; ‘ராமா’ என்ற இரு எழுத்துக்களைச் சொன்னால் போதுமே! அதைச் சொல்லக்கூட அச்சமா? ‘நான்’ என்ற அகம்காரம் பகவன் நாமத்தை உரக்கச் சொல்லுவதை தடுக்கிறதா?
இல்லை; நரகங்களைக் கண்டு பயமில்லாமல் போய்விட்டதா? சுகத்திற்கு ஆசைப்படுகிறவர்கள் துக்கத்தைக் கண்டு அச்சப் பட வேண்டுமல்லவா? இல்லை நமது நாவு தன் செயலிழந்து விட்டதா? பகவன் நாமம் சொல்ல முடியாமல்.
இல்லை இனி இறப்பே கிடையாது; நாம் முக்தியடைந்து விட்டோம் என்ற பொய்யான இறுமாப்பா? ஏன் பகவன் நாமத்தை சொல்ல மாட்டோமென்கிறோம்?
இப்படி நமக்கு கிடைத்துள்ள அரிதான வாய்ப்பை நழுவ விட்டு விட்டு, நம் ஜன்மத்தையே வீணடிக்கிறோமே என்று பூந்தானம் வருந்துகிறார்.’சிந்தியுங்கள், சிந்தியுங்கள்’ என்று அறைகூவல் விடுகிறார்.

ஆகவே நாமும் அவருடன் சேர்ந்து பாடுவோம்:

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே





No comments:

Post a Comment