Sunday 7 February 2016

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 27

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 27

அத்தியாயம் 27

 யக்ஞ கர்மம்


கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

முன் அத்தியாயத்தின் கடைசியில் நாம் பகவத் கீதையில் கிருஷ்ணர் ,” யக்ஞ ரூபமாக செய்யும் கர்மங்களின் பலன் உன்னை பாதிக்காது” என்று கூறியதைக் கண்டோம். யக்ஞம் என்பதற்கான பொருளை கீதையில்  பல சுலோகங்கள் மூலம் பகவான் நமக்கு தெளிவு படுத்துகிறார்.அவையில் சிலதை இங்கு பார்ப்போம்.
பகவத் கீதை மூன்றாம் அத்தியாயம் பத்தாம் சுலோகத்தில் பகவான் கீழ்க் கண்டவாறு சொல்லுகிறார்:
    
     ஸஹயஞா: ப்ரஜா:ஸ்ருஷ்டா புரோவாச ப்ரஜாபதி !
     அனேன ப்ரஸவிஷ்யத்வமேஷவோஸ்த்விஷ்ட காமதுக் !!
                             ப.கீ அத்த்.3 சுலோ 10
பிரம்மதேவன் இந்த உலகில் ஜீவராசிகளை படைக்கும் பொழுது ஒரு யக்ஞ சங்கல்பத்தோடு படைத்து, நீங்கள் இந்த பிறவியை அந்த சங்கல்பத்தோடேயே வாழ்ந்து வாருங்கள். அந்த யக்ஞ சங்கல்பம் உங்களுக்கு ஒரு காமதேனுவாக இருந்து எல்லா சுகத்தையும் அளிக்குமாறாகட்டும் என்று அருளி நம்மை இங்கே அனுப்பிவைத்தார்.
ப்ரஜாபதி- உலகிலுள்ள எல்லா விதமான பிராணனுகளுக்கும் பதியாக இருப்பவன்-பிரம்மா –என்ன பெயரிட்டு வேணுமானாலும் அழையுங்கள்-இயற்கை, அரூபமான சக்தி என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள்- யாராக இருந்தாலும் அவன் அந்த சக்தி நம்மை படைக்கும் போதே ஒரு யக்ஞ ஸங்கல்பத்துடன் படைத்துள்ளான்.அந்த ஸங்கல்பத்திலிருந்து வழுவாமல் கர்மம் ஆற்றினால் நமக்கு எல்லா சுகமும் ஆனந்தமும் கிடைக்கும் என்று இந்த சுலோகத்தில் பரமாத்மா அருளுகிறான்
ஒரு ஹோமகுண்டம் ஜடராக்னியாக நம்முள்ளே எரிந்து கொண்டிருக்கிறது. அந்த அக்னி  நாம் உண்ணும் உணவையெல்லாம்-அவை வெண்டைக் காயாகட்டும், பாகற்காயாகட்டும்,அரிசியுணவோ கோதுமையோ எதுவாக இருந்தாலும் அவைகளை எரித்து, ,ஜீரணம் செய்து சாரம் வேறு, மலம் வேறு என்று பிரிக்கிறது.பல விதமான என்சைமுகளும் (enzymes). ஹார்மோண்களும் (Harmones)  நாம் உண்ணும் உணவை மஜ்ஜையாக மாமிசமாக, தசைகளாக எலும்புகளாக, மலமாக, மூத்திரமாக ,சுக்கிலமாக மாற்றி நம் இந்திரியங்களுக்கு வலு சேர்க்கின்றது. வெளியேறும்  மலமும் மூத்திரமும் பஞ்சபூதங்களான பூமியோடும் வாயுவோடும் நீரோடும் கலந்தும் கலக்காமலும் மற்ற ஜீவராசிகளுக்கு உணவாகின்றது. ஆணின் சுக்கிலம் பெண்ணின் கருமுட்டையில் பிரவேசித்து ம்ற்றொரு உயிரை படைக்கின்றது. சிருஷ்டி சக்கரம் சுழலுகிறது.
இதே தத்துவம் விசுவம் முழுவதற்கும் பொருந்தும்.இந்த விசுவம் முழுவதும் ஒரு ஜீவனாக உருவகப்பட்டு ஹோமகுண்டங்களிருந்து எழுகின்ற கரியமில வாயு ( carbondieoxide)  செடிகொடிகளுக்கு உணவு சமைக்க உதவுவது போல் நாம் செய்கின்ற ஒவ்வொரு  கர்மங்களும் மற்ற உயிரினங்களுக்கு சாதகமாகவொ பாதகமாகவோ முடிவடையும்.. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு பொறுப்பு உள்ளது.அவரவர் தம் தம் பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றுவதற்காக கர்மங்கள் ஆற்றினால் விசுவா நரனுக்கு ஆபத்தில்லை.
என்று  நாம் நமது பொறுப்பிலிருந்து பிறழுகிறோமோ  நமது கர்மங்கள் அந்த யக்ஞ சங்கல்பத்திலிருந்து விலகிச் செல்லுகிறதோ அன்று சர்வ நாசம் சம்பவிக்கும்.
பகவத் கீதையின் இந்த சுலோகம் நம்மை பிரமன் தந்துள்ள அந்த யக்ஞ சங்கல்பத்திலிருந்து நாம் வழுவாமலிருக்க அறிவுறுத்துகிறது. யக்ஞ சங்கல்பம் நமக்கு ஒரு காமதேனு. அதை பொறுப்புடன் போற்றி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஜீவராசியின் பொறுப்பாகும்.அவ்வாறு கர்மம் ஆற்றினால் கர்மபலன்கள் நம்மை பாதிக்காது.
போட்டியும் பொறாமையும் நம்மை அழிவின் பக்கம் இழுத்துச் செல்லும். வாழ்க்கையை ஒரு யக்ஞமாக  பிறருக்கு உதவியாக, பிறருக்குத் துன்பம் பயக்காதபடி வாழ்ந்தோமென்றால் ஒரு பொழுதும் துன்பம் வராது. சுகம் கைக்கூடும்.குறைந்த பட்சம் பிராரப்த கர்மத்தின் தீவிரம் குறைந்து நாம் மேலும் கர்மச்சுமையை ஏற்றாத படி அமையும்.
மேலும் பகவான் பதினொன்றாம் சுலோகத்தில்  கூறுகிறார்:
     தேவான்பாவயதானேன தே தேவா பாவயந்து வ: !
     பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத !!
வார்த்தைகளின் அர்தத்தை மட்டும் வைத்து பார்த்தால் இந்த சுலோகத்தின் அர்த்தம் “நீங்கள் தேவர்களை பேணுங்கள்;அவர்கள் உங்களைப் பேணி உங்களுக்கு சகல சுக சௌகரியங்களையும் அளீப்பார்கள்.” என்று வரும்.
ஆனால் இதன் உள்ளே பொதிந்து கிடக்கும் ஒரு மகத்தான தத்துவத்தை சற்று ஆழமாக சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்
நமது ஒவ்வொரு இந்திரியங்களுக்கும் ஒரு அதிஷ்டான தேவதை  உண்டு. திருசிய அவயவமான கண்களுக்கு அக்னி, ஸ்ரவண இந்திரியமான காதுகளுக்கு வாயு, ஸ்பரிசத்திற்கு பிருத்வி இப்படி ஒவ்வொரு இந்திரியத்திற்கும் ஒரு அதிஷ்டான தேவதை உண்டு. நாம் உண்ணும் உணவு இந்த அதிஷ்டான தேவதைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்;அவைக்கு வலு சேர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் தவறினால் நமது இந்திரியங்கள் அதன் வேலையை செய்யாது ;வாழ்க்கையில் துன்பப் பட நேரிடும்
நமது உணவு சமனாக (Balanced Diet) இருக்க வேண்டும் என்று ஒரு அர்த்த்மும் கொள்ளலாம்.
இன்னொரு வித்த்தில் நோக்கினால் எல்லா இந்திரியங்களும் சமமான மதிப்புடையவை. ஒன்றைவிட ஒன்று மேல் கிடையாது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒருமுறை இந்திரியங்களுக்குள் ஒரு போட்டியேற்பட்ட்து –யார் மேலானவன் என்று.கண் ,காது ஒவ்வொன்றும் நான் தான் மேலானவன் என்று கூறியது.
அவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாத்தால் அவைகள் எல்லாம் பிராணனை அணுகின. பிராணன் அல்லது அந்தர்யாமியான ஆத்ம சைதன்யம்- ஆன்மா கூறியது, “நான் யார் தீர்ப்பு கூற? உங்களில் ஒருவர் ஒரு ஆறு மாத்த்திற்கு வேலை செய்ய்யாமலிருந்து பாருங்களேன். அப்பொழுது தெரியும் என்னாகிறது என்று.”
கண்கள் முதலில் வேலையிலிருந்து தாற்காலிகமாக ஓய்வெடுத்துக் கொண்டது..ஆறு மாதம் கழித்து கண்கள் மீண்டும் வேலையில் சேர்ந்தது.கண்கள் மற்றவர்களிடம் கேட்ட்து,” நான் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டீர்களல்லவா? ஒன்றுமே செய்ய்ய முடியாமலிருந்திருக்குமே?”
“ ஒருவிதமான கஷ்டமும் படவில்லை.எத்தனையோ பேர் பிறப்பிலேயே கண்ணில்லாமல் பிறக்கிறார்கள்.அவர்களெல்லாம் வாழவில்லையா?”
இதே போல் காதுகள்,வாய் எல்லாம் ஓய்வெடுத்தும் வாழ்க்கை சக்கரம் ஓடிக்கொண்டேயிருந்த்து.
ஆனால் பிராணன் விடை பெறவேண்டிய நாள் வந்த்தும் எல்லா இந்திரியங்களும் உபயோகமில்லாமல் போயிற்று.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எல்லோரையும் ஒருங்கிணைத்து கொண்டு போகின்ற ஜீவ சக்தியிருக்கும் வரைத் தான் தனிப்பட்ட இந்திரியங்களுக்கு மதிப்பு.
அந்த கூட்டாட்சி பழுதடையும் பொழுது வாழ்க்கை சக்கரம் நின்றுவிடும்.
இதுவே உலகவாழ்வின் யக்ஞ சங்கல்பமும்.
பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவராசிகளும் சொருமிப்பாக இயங்கிக்
கொண்டிருந்தால்  எல்லோரும் ஆன்ந்தமாக இருக்க முடியும்.அந்த சமன்  நிலை தவறும் பொழுது பிரபஞ்சம் சர்வ நாசத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்.
இன்று மனித வர்க்கம் இயற்கையை அழித்து தன் சுக சௌகரியங்களை தேடிக்கொள்கிறது..காடுகள் அழிக்கப்படுக்கின்றன; பக்ஷி மிருகாதிகளுக்கு
அவர்களது இயற்க்கையான இருப்பிடம் நஷ்டமாகிறது, உண்ண உணவு கிடைப்பதில்லை,குடிக்க தண்ணீர் கிடைப்பதில்லை. அவைகள் மனித குடியிருப்புக்களில் புகுந்து நாசம் விளைவிக்கிறது. மனிதன் அவைகளை மேலும் ஆக்கிரமிக்கிறான்; துன்பத்திற்காளாக்கிறான்.. ஒருவிதமான  பீதியுடன் எல்லா ஜிவராசியும் வாழ்கிறது. ஒரு ஆபத்தான ‘சாக்கிரியம்” ( vicious cycle)  உண்டகின்றது.
 மற்ற ஜிவராசிகளை மட்டுமல்ல;மனிதனை மனிதனே நாசப்படுத்துகிறான். தனக்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்களை ,கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே பிறருக்கு அடுத்த நாடுகளிற்கு விற்கிறான்; இல்லை தானமாக கொடுக்கிறான். எலிகளையும், நாய்களையும் ஏன்,மனிதர்களையும் கூட  ரசாயன சோதனைக்கு உள்ளாக்கிறான். தவார வர்க்கங்களின் மரபணுக்களை மாற்றி விஷத்தை அவைகளில் ஜனிப்பிக்கிறான்,-அவை மனித வர்க்கத்திற்கு நாளடைவில் நாசம் விளைவிக்கும் என்று தெரிந்தே தாற்காலிகமான இலாபத்திற்காக, சுயநலத்தால் உந்தப்பட்டு.செயல்படுகிறான்.
இயற்கை நமக்கு அளிப்பதை நாம் நம் சஹ ஜீவிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பதேயில்லை  கொடுப்பதில் ஒரு ஆனந்தம் உண்டு என்று தெரிவதில்லை.எடுப்பதிலேயே மகிழ்ச்சியடைகிறான்.
இவ்வாறு கர்மங்கள் ஆற்றினால் நமது கர்மபலங்களின் சுமை ஏறிக்கொண்டே போகும். பிறப்பு-இறப்பு எனும் சக்கர சுழற்சியிலிருந்து தப்பிக்கவே முடியாது..
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தானோ என்னவோ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அன்றே பகவத் கீதையில் கூறினார்,” நீங்கள் தேவர்களை பேணுங்கள்,அவர்கள் உங்களை பேணுவார்கள்.பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் . உதவியாக இருந்து ஆனந்தம் அடைவீர்கள்.”
அந்த பாரஸ்பரியம் இன்று காணாமல் போய்விட்டது
இந்த பாரஸ்பரியத்தை மேலும் விளக்குவதற்காகத்தான் பகவான் கிருஷ்ணர் பதினாலாம் சுலோகத்தில் சொல்லுகிறார்: “:
     அன்னாத் பவந்தி பூதானி பர்ஜன்யாதன்னஸம்பவ: !
     யக்ஞாத்பவதி பர்ஜன்யோ யக்ஞ: கர்மஸமுத்பவ: !!

இதன் பொருள் அன்னத்திலிருந்து உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன என்பதாகும். அந்த அன்னமோ மழையிலிருந்து உண்டாகின்றது. மழை நீரை தன் வேர்கள் மூலம் உள்ளே இழுத்து, சூரிய ஒளியின் உதவியுடனும், ஹோமகுண்டங்களிலிருந்தும் நாம் எரியவைக்கின்ற குப்பைகளிலிருந்தும் எழுகின்ற புகை வடிவமான கரியமில வாயுவின் உதவிகொண்டும் தாவரங்கள் தண்டாகவும் இலையாகவும் காயாகவும் கனியாகவும் நமக்கு உணவு படைக்கின்றன. .அந்த தாவரங்கள் வெளியே உமிழ்கின்ற பிராண வாயு நம்மை உயிர் வாழ வைக்கின்றன. இந்தக்கருத்தை தான் பகவான்பர்ஜன்யாதன்ன ஸம்பவ:” என்றார்.
இது தான் ய்க்ஞத்தை அடிப்படையாககொண்ட கர்மங்களின் நியதி.இந்த நியதியிலிருந்து வழுவாமல் கர்மங்கள் ஆற்றுவதன் மூலம் மட்டுமே நாம் முக்தி பெற முடியும்.
இப்படி யக்ஞ அதிஷ்டிதமான கர்மங்கள் செய்வதன் மூலம் ப்ராரப்த கர்மங்களின் தாக்கத்தை குறைக்கலாம்;ஆகாமி கர்மங்களிலிருந்து காப்பாற்றப் படலாம்.
ஆகவே சன்னியாசம் எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், இந்த சம்சார வாழ்க்கையில் இருந்துகொண்டே கீதையில் கூறியுள்ள யக்ஞ சங்கல்பத்திலிருந்து வழுவாமலிருந்தால் ஆனந்தத்தை அடையலாம்.பரமாத்மாவை தரிசிக்கலாம். அவன் அருளால் ஆத்ம- சாக்ஷத்காரம் அடையலாம்.
இந்தக் கருத்தைத்தான் பூந்தானமும் கர்ம பீ நாசம் அடைந்தால் மட்டுமே முக்தி என்கிறார்.
இது மிகவும் கடினமான காரியம் தான்.அதற்கு மனம் பக்குவப் பட வேண்டும்.மனம் பக்குவப்பட பகவத் நாம சங்கீர்த்தனம் ஒரு எளிய வழி. முதலில் சொன்னது கர்ம மார்க்கம் என்றால் பூந்தானம் சொல்வது பக்தி மார்க்கம்.ஆகவே நாமும் பூந்தானத்துடன் சேர்ந்து பாடுவோம்:

கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே




No comments:

Post a Comment