Sunday 7 February 2016

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 25

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 25


அத்தியாயம் 25

பூலோக சொர்க்கம்

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே



കീഴ്മേലിങനെ മണ്ടുന്ന ജീവന്മാറ് 
ഭൂമിയിന്നത്രെ നേടുന്നു കറ്മങ്ങൾ
സീമയില്ലാതോളമ് പല കര്മന്ഗള്
ഭൂമിയിന്നെത്രെ നേടുന്നു ജീവന്മാര്

கீழ்மேலிங்கனெ மண்டுன்னு ஜீவன்மார்
பூமியின்னத்றெ நேடுன்னு கர்மங்கள்
ஸீமயில்லாதோளம் பல கர்மங்கள்
பூமியின்னெத்றெ நேடுன்னு ஜீவன்மார்

முன் அத்தியாயத்தில் கண்ட்து போல் ‘புனரபி ஜன்னம், புனரபி மரணம்’ என்று ஒரு பிறவியிலிருந்து மறு பிறவிக்கு தாவும் பொழுது சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் மாறி மாறி மேலும் கிழும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது ஜீவாத்மாக்கள்.பூமியில் வந்து பிறந்து கர்மங்கள் பல ஆற்றுகின்றன; அதன் பலனாக பாப-புண்ணியங்களையும் சம்பாதித்துக் கொள்கின்றன.அந்தமில்லாத கர்ம சேஷ்டையால் பூலோக வாழ்க்கையும் அந்தமில்லாததாக இருக்கிறது.விடிவு என்பது கண்களுக்கு புலப்படுவதில்லை.


അന്ഗനെ ചെയ്തു നേടി മരിച്ചുടന്
അന്യലോകന്ഗളോരോന്നിലോരോന്നില്
ചെന്നിരുന്നു ഭുജിക്കുന്നു ജീവന്മാര്
തന്ഗള് ചെയ്തഒരു കര്മന്ഗള് തന് ഫലമ്

அங்கனெ செய்து நேடி மரிச்சுடன்            
அன்யலோகங்களிலோரோன்னிலிரோன்னில்
சென்னிருன்னு புஜிக்குன்னு ஜீவன்மார்
தங்கள் செய்தொரு கர்மங்கள் தன் ஃபலம்

அவ்வாறு கர்மங்கள் ஆற்றுவதன் பலனாக இறந்தவுடன் செய்த கர்மங்களிற்கேற்றார்ப்போல் சுவர்க்க வாசமோ நரக வாசமோ கிட்டுகின்றது.அப்படிக் கிடைக்கின்ற சுவர்க்க-நரக வாழ்வில் அவரவர் கர்மபலங்களை அனுபவித்துத் தீர்க்கிறார்கள். அந்த் பிராரப்த்த்திலிருந்து முக்தி கிடையாது.

ഒടുന്ഗീടുമതൊട്ടു നാള് ചെല്ലുമ്ബൊള്
ഉടനെ വന്നു നേടുന്നു പിന്നെയുമ്
തന്റെ തന്റെ ഗ്രുഹത്തിന്ഗല് നിന്നുടന്
കൊണ്ടുപോന്ന ധനമ് കൊണ്ടു നാമെല്ലാമ്
മറ്റെന്ഗാനുമൊരേടത്തിരുന്നിട്ടു
വിറ്റൂണെന്നു പറയുമ് കണക്കിനെ.

ஒடுங்கீடுமதொட்டு நாள் செல்லும்போள்
உடனெ வன்னு நேடுன்னு பின்னெயும்
தன்றெ தன்றெ க்ருஹத்திங்கல் நின்னுடன்
கொண்டுபோன்ன தனம் கொண்டு நாமெல்லாம்
மற்றெங்கான்மொரேடத்திருன்னிட்டு
விற்றூணென்னு பறயும் கணக்கினெ.

காலசக்கரம் உருண்டோடி அவர்கள் கர்மபலன்களும் முடிவிற்கு வரும்பொழுது மீண்டும் அந்த ஆத்மாக்கள் பூமியில் வந்து பிறக்கிறார்கள். கைவசமிருந்த செல்வம் தீரும்பொழுது வெளியே போனவர்கள் வீடு திரும்பித்தானே ஆகவேண்டும். பூர்வ ஜன்ம புண்ணியங்கள் முடிவிற்கு வரும்பொழுது மீண்டும் புண்ணியம் தேடித்தானே ஆக வேண்டும். முன்னோர்கள் சேர்த்து வைத்த செல்வம் எவ்வளவு நாள் வரும்?பூமியில் வந்து பிறந்து மீண்டும் கர்மங்கள் ஆற்றும்பொழுது புண்ணிய-பாபச் சுமை மேலும் ஏறுகிறது..

കര്മന്ഗള്കു വിള്നിലമാകിയ
ജന്മദേശ്മിഭൂമിയറിന്ജാലുമ്
കര്മനാശമ്                         വരുത്തേണെമെന്ഗിലുമ്
ചെമ്മേ മറ്റെന്ഗുമ് സാധിയാ           നിര്ണയമ്
கர்மங்கள்க்கு விலனிலமாகிய
ஜன்மதேசமிபூமியறிஞ்சாலும்
கர்மனாசம் வருத்தேணெமெங்கிலும்
செம்மே மற்றெங்கும் ஸாதியா  
                                                     நிர்ணயம்
கர்மங்களின் உறைவிடமே- ஊற்றுக்கண்ணே இந்த பிரபஞ்சம் தான்.ஆகவே கர்மங்களுக்கும் கர்ம பலன்களுக்கும் ஒரு முடிவு காண வேண்டுமென்றால்
அது பிரபஞ்ச வாழ்வில்த் தான் முடியும்.வேறெங்கு சென்றும் இயலாது.அதற்குத் தான் முந்தைய பகுதியில் மன பக்குவம் வர வேண்டும் என்று பூந்தானம் கூறினார். மனபக்குவம் என்றால் விவேகம் வர வேண்டும். விவேகம் என்றால் நித்தியா-அனித்தியா விவேகம் ;எது நித்தியமானது ,எது அனித்தியமானது என்ற பகுத்தறிவு வேண்டும்.உடல் சம்பந்தப் பட்ட எல்லாம் அனித்தியம் ; நாசமடையக் கூடியது; ஆன்மா ஒன்று தான் நித்திய சத்தியம்.அதுவே அழிவில்லாதது என்ற உண்மை புரிய வேண்டும்.அதுவும் இந்த பூமியில் இருக்கும் பொழுது தான் கிட்டும்.

ഭക്തന്മാര്കുമ് മുമുക്ക്ഷു                        ജനന്ഗള്കുമ്
സക്തന്മാരായ വിശയീജനന്ഗള്കുമ്
ഇച്ചിച്ചീടുന്നതൊക്ക്വ്ക്കൊടുത്തീടുമ്
വിശ്വമാതാവു ഭൂമിയറിന്ജാലുമ്

பக்தன்மார்கும் முமுக்ஷு                          ஜன்ங்கள்க்கும்
ஸக்தன்மாராய                               விஷயீஜன்ங்கள்க்கும்
இச்சிச்சீடுன்னதொக்கெ                           கொடுத்திடும்
விஸ்வமாதாவு                           பூமியென்னறிஞ்சாலும்

பக்தியோடு பரமனை அணுகுபவர்களுக்கும், ஞானம் வேண்டும், விவேகம் வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த மனபக்குவத்தை பூமி மாதா அளிக்கிறாள்..அதே நேரத்தில் விஷய சுகங்களில் ஆஸக்தியுடையவர்களுக்கு-இச்சை உடையவர்களுக்கு அதையும் நேடிக் கொடுக்கிறாள் பூமாதா.நாம் எதை விரும்புகிறோமோ அது கிடைக்கும். விவேகம் விரும்பினால், ஞானம் வேண்டினால் அது கிடைக்கும்; விஷய சுகம் வேண்டினால் அதுவும் கிடைக்கும்..முன்னது விரும்பினால் முக்தி கிடைக்கும்.இறப்பு-பிறப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். பின்னது வேண்டினால் இந்த பிரபஞ்சத்திலேயே உழல வேண்டியது தான்.

വിശ്വനാധന്റേ മൂലപ്രക്രുതിതാന്
പ്രത്യക്ഷേണവിളന്ഗുന്ന ഭൂമിയായ്
അവനീതല പാലനത്തിനല്ലോ
അവതാരന്ഗളുമ്                      പലതോര്ക്കുമ്ബോള്

விஸ்வனாதன்றே மூலப்ரக்ருதிதான்
ப்ரத்யக்ஷேண விள்ங்குன்ன                                பூமியாய்
அவனீதல பாலனத்தினல்லோ
அவதாரங்களும்                         பலதோர்க்கும்போள்

பரமாத்மாவினுடைய பிரத்தியக்ஷ வெளிப்பாடு தான் பிரபஞ்சம் பிரபஞ்ச பாலனத்திற்காகத்தான் பரமனும் பல பல அவதாரங்கள் எடுக்கிறான்.

അതുകൊണ്ടു വിശേഷിച്ചുമ്                           ഭൂലോകമ്
പതിന്നാലിലുമുത്തമമെന്നല്ലോ
വേദവാദികളായ മുനികളുമ്
വേദവുമ് ബഹുമാനിച്ചു ചൊല്ലുന്നു

 அதுகொண்டு விசேஷிச்சும்                               பூலோகம்.
பதின்னாலிலுமுத்தம்மென்னல்லோ
வேத வாதிகளாய முனிகளும்
வேதவும் பஹுமானிச்சு                             சொல்லுன்னு.

ஆகவே பதினாலு உலகத்திலும் இப்பூலோகம் தான் விசேஷமானது; இதை வேதமும் வேத விற்பன்னர்களும் பெருமையுடன் கூறுகிறார்கள். இந்த பூலோக வாழ்விலேயே முக்திக்கு வழி தேடுவோம். மீண்டும் அடுத்த அத்தியாயத்தில்
அதுவரை:

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே






No comments:

Post a Comment