Sunday 7 February 2016

ஞானப்பானா –கிருஷ்ண்கீதை 26

ஞானப்பானா –கிருஷ்ண்கீதை 26

அத்தியாயம் 26

நிஷ்காமிய கர்மம்

கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

ലവണാമ്ബുധിമദ്ധ്യേ വിളന്ഗുന്ന
ജമ്ബുദ്വീപൊരു യോജന ലക്ഷവുമ്
സപ്തദ്വീപുകളുള്ളതിലെത്രയുമ്
ഉത്തമമിസ്ഥലമെന്നു വാഴ്ത്തുന്നു
ഭൂപത്മത്തിനു കര്ണികയായിട്ടു
ഭൂധരേന്ദ്രനിതലല്ലോ നില്ക്കുന്നു
ഇതിലൊമ്ബതുഖണ്ഡന്ഗളുണ്ടല്ലോ
അതിലുത്തമമ് ഭാരതഭൂതലമ്
സമ്മതരായ മാമുനിശ്രേഷ്ട്ന്മാര്
കര്മക്ഷേത്രമെന്നല്ലോ പറയുന്നു
കര്മബീജമിതീന്നു മുളയ്കേണ്ടു
ബ്രഹ്മലോകത്തിരിക്കുന്നവര്കള്ക്കുമ്
കര്മബീജമ്വരട്ടിക്കളന്ജ്ന്ജുടന്
ജന്മനാശമ് വരുത്തേണമെന്ഗിലുമ്
ഭാരതമായ ഖണ്ഡമൊഴിന്ജുള്ള
പാരിലെന്ഗുമെളുതല്ല നിര്ണയമ്
അത്ര മുഖ്യമായുള്ളൊരു ഭാരത-
മിപ്രദേശ്മെന്നല്ലാരുമോര്ക്കണുമ്

லவணம்புதிமத்யே விளங்குன்ன
ஜம்புத்வீபொரு யோஜனலக்ஷவும்
ஸப்தத்வீபுக்க்களுள்ளதிலெத்ரயும்
உத்தமமிஸ்தலமென்னு                            வாழ்த்துன்னு
பூபத்மத்தினு கர்ணிகாயாயிட்டு
பூதரேந்த்ரனிதிலல்லோ நில்க்குன்னு
               இதிலொம்பது            கண்டங்களுண்டல்லோ
அதிலுத்தமம் பாரத பூதலம்
             ஸம்மதராய              மாமுனிஸ்ரேஷ்டன்மார்
கர்மக்ஷேற்றமென்னல்லோ                           பறயுன்னு
கர்மபீஜமிதீன்னு முளைக்கேண்டு
ப்ர்மலோகத்திரிக்குன்னவர்கள்க்கும்
கர்மபீஜம் வரட்டிக்களஞ்சுடன்
ஜன்மனாசம் வருத்தேணமெங்கிலும்
பாரதமாய கண்டமொழிஞ்சுள்ள
பாரிலெளுதல்ல நிர்ணயம்
அத்ர முக்யமாயுள்ளொரு பரத-மிப்ரதேசமென்னல்லாருமோர்க்க்கணம்

முந்தைய வரிகளில் பூந்தானம் சத்கர்மங்களாகட்டும் பாபகர்மங்களாகட்டும் எதுவாக இருந்தாலும் இந்த பூமியில் வந்து தான் எல்லோரும் அவரவர் பிராப்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று சொன்னார். இப்பொழுது பூமியில் அதுவும் பாரத தேசத்தில் பிறப்பதின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.
நமது புரணங்கள் பூமியின் விஸ்தீரணத்தை மிகவும் துல்லியமாக விவரித்துள்ளன. அதிலும் பாகவதம் ஐந்தாம் ஸ்கந்தம் பதினாறாவது அத்தியாயத்தில் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இவை நமது மாமுனிகள் ஞானக்கண்ணினால் கண்டு எழுதியவை. பூமண்டலத்தை ஒரு தாமரையுடன் அவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். இந்த பூமண்டலம் ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ளது. அப்படி சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ள பூமி ஏழு கண்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவையில் உப்புக்கடலால்-லவணாப்தியால் சூழப்பட்டுள்ளது ஜம்புத்வீபு. இந்த ஏழு தீவுகளிலும் உத்தமமானது ஜம்பு தீவு.பூமியாகின்ற தாமரையின் மகரந்தகோசம் போல் விளங்கும் ஸுமேரு பர்வதம் இந்த தீவிலுள்ளது.இந்த ஜம்பு தீவு ஒன்பது வர்ஷங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் மிகவும் உத்தமமானது பாரதவர்ஷம். நமது முன்னோர்களாய மாமுனிகள்- சத் என்றால் எது என்ற கண்டறிந்த ரிஷி வரியர்கள் பாரத தேசத்தை கர்ம க்ஷேதிரம் என்றழைத்தார்கள். ஏனென்றால் இங்கே ஆற்றப்படுகின்ற கர்மங்களின் பயனாகத்தான் மனிதாத்மாக்கள் மற்ற லோகங்களுக்கு போகிறார்கள். அதே போல் கர்ம பீஜத்தை அடியோடு நாசமடைய செய்து முக்தி நேடுவதும் இந்த பூலோக வாழ்க்கையில்த் தான்.வேறு எந்த உலகத்திலும் அது முடியாது என்று பூந்தானம் அறுதியிட்டு கூறுகிறார்.ஆகவே பரத தேசம் மஹத்தானது என்பதை யாரும் ஒருபொழுதும் மறக்கலாகாது என்கிறார்.பூந்தானம்.  
பூந்தானம் ஏறக்குறைய 20 வரிகளாக மிகவும் தெளிவாக எடுத்துரைத்ததின் சாரம் இது தான்:” கர்மங்கள் செய்தால் அதன் பலனை அனுபவித்துத் தான் ஆகவேண்டும். கர்மம் செய்யாமலும் இருக்க முடியாது. பாப கர்மமோ புண்ணிய கர்மமோ எதுவாக இருந்தாலும் அவை இந்த பூலோகத்தில் தான் ஆற்றப்படுகின்றன.அவையின் பலனை அனுபவிப்பதும் இந்த பூவுலகில்த் தான்.  நமது கர்மங்கள் சுவரில் அடிக்கப்பட்ட பந்து போல் திரும்ப திரும்ப நம்மை வந்து தாக்குகின்றன நாம் செய்கின்ற கர்மங்கள். நாம் எறியும் சக்திக்கு அனுசரித்து வேகமாகவோ வேகம் குறைவாகவோ நம்மிடம் வருகிறது. இன்பமோ துன்பமோ நம் கர்மங்களின் பலன்களை அனுசரித்து இருக்கும். ஆனால் கர்ம பலன்களிலிருந்து தப்பிக்க முடியாது “என்பது தான்.
இதே கருத்துக்கள் பகவத் கீதையும் கூறுகிறது. கீதையின் நாலாம் சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர்  தெளிவு பட சொல்லுகிறார்:
புருஷன்-அதாவது ஜீவாத்மாக்கள் தங்கள் கருமங்களை அனுஷ்டிக்காமல் சன்னியாசம் வாங்கமுடியாது. பூ காயாகி கனியாகி பக்குவப்பட்டால்த் தான் பழமாகி மற்றவர்களுக்கு பலனளிக்கிறது

ந நைஷ் கர்ம்யம் புருஷோஅஸ்னுதே !
ந ச ஸன்யஸனாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி !!

பிறகு நாம் என்னதான் செய்வது?
ஆத்ம ஞானம் பெறுவது ஒன்று தான் கர்ம பீஜ நாசத்திற்கு வழி என்கிறார் பூந்தானம். கர்ம பீஜம் நசித்துவிட்டால் இறப்பு-பிறப்பு எனும் சக்கர சுழற்சியிலிருந்து தப்பிக்க முடியும். விதை நசித்து விட்டால் மரம்-செடி முளைக்காதல்லவா? இதற்கான வெவ்வேறு மார்க்கங்களை நமது வேத-வேதாந்தங்கள் காட்டுகின்றன.
விவேகம், வைராக்யம், துறவு .முதலிய வழிகளில் ஞானம் பெற்றவர்கள் ஆத்ம சொரூபத்தை   நேரடியாக கிரகித்துக் கொள்கிறார்கள்.. இதை ஞானயோக மார்க்கம் என்று புரிந்துகொள்ளலாம்
கர்மனுஷ்டானங்களை முறையாக செய்து அறிவு தெளிவடைய,, ஆத்மசொருபம் விள்ங்குவது கர்மயோகம் எனப்படுகிறது.  
கீதை  நாலாம் அத்தியாயம் ஏழாம் சுலோகத்தில் அறிவுறுத்துகிறது::
யஸ்த்விந்திரியாணி மனசா நியம்யாரபதே அர்ஜுனா !
கர்மேந்திரியை: கர்மயோகமஸ்த ஸ விசிஷ்யதே !1
ஆனால் இந்திரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று கர்மேந்திரியங்களை கொண்டு கர்மயோகம் செய்வதே மேல்.
மனதை அடக்க முடியாமல் இந்திரியங்களை மட்டும் அடக்கி வாழ்வபன் பொய்யான ஒழுக்கத்திற்கு உதாரணமாகிறான்

பகவான் ரமணரும் நம்து சந்தேகத்திற்கு பதிலளிக்கிறார்.:
“ ஜீவாத்மாக்கள் இந்த உலகத்திற்கு வரும்பொழுதே அவர்களது பூத உடல் என்ன என்ன அனுபவிக்க வேண்டும் என்று தீருமானிக்கப் பட்டு விடுகிறது. ஆகவே ஜீவத்மாவிற்கு எந்த கர்மத்தை ஏற்றுக் கொள்வது எதை நிராகரிப்பது என்பதற்கான சுதந்திரம் கிடையாது.செய்ய வேண்டியவைகளை செய்தே ஆக வேண்டும்;அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே ஆக வேண்டும். அவனுக்குள்ள சுதந்திரமெல்லாம் தன் மனதை உள்முகமாக திருப்பி மனதளவில் அந்த கர்மங்களை எற்றுக்கொள்ளவோ,நிராகரிக்கவோ செய்யலாம்.
அதாவது கர்ம பலன்களின் மீதுள்ள பற்றுதலை தக்க வைத்துக் கொள்ளலாம்,அல்லது பகிஷ்கரித்து விடலாம். ஏன் அப்படி என்றால் அது இயற்கையின் நியதி அல்லது தெய்வ நிச்சயம் என்று தான் சொல்ல வேண்டும்”.
     கன்மம் பயன்றரல் கர்த்தன தாண்யாற்
     கன்மங் கடவுளோ வுந்தீபற
     கன்மஞ் சடமதா லுந்தீபற
     வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
     வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
     வீடுதரலிலை யுந்திபற
மேற்கூறியது  பகவானின் உபதேசவுந்தியார்” எனும் நூலின் முதல் சுலோகம்.
இதையே தான் பகவத் கீதயில் கிருஷ்ணரும் கூறுகீறார்.
     ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் !
     கார்யதே ஹ்யவச: கர்ம சர்வ: ப்ரக்ருதிஜைர்குணை !!
                                     ப.கீ அத் 3 சுலோ 5
“யாரும் இந்த உலகில் செயலாற்றாமலிருப்பதில்லை.ஏனென்றால் பிரகிருதி யிலிருந்து ஒவ்வொரு ஜீவாத்மாக்களும் பலதரப்பட்ட குணங்களை பெறுகிறார்கள்.ஒவ்வொரு உயிரினமும் தன் வயமின்றி கர்மம் செய்விக்கப்படுகின்றார்கள்.” என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.
உண்பது ,உறங்குவது,எல்லாமே கர்மங்கள் தான்.இயற்கையில் கர்மத்தை விடும் சுதந்திரம் கிடையாது.
மூன்றாம் அத்தியாயம் ஒன்பதாம் சுலோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:
     யக்ஞார்த்தாத் கர்மணோ அன்யத்ர லோகோயம் கர்மபந்தன:: !
     ததர்த்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: சமாசர: !!
“யக்ஞ கர்மத்தை தவிர மற்ற கர்மங்களெல்லாம் நம்மை பந்தனத்திற்குள்ளாக்கிறது. ஆகவே கௌந்தேயா,  நீ யக்ஞ கர்மங்களை மட்டும் செய், அதுவும் பற்றற்ற மனத்துடன் செய் ” என்கிறார் பரமன்
யக்ஞ கர்மம் என்றால் என்ன?
பகவத் கீதை கூறுகிறது:

.कार्य्मित्येव यत् कर्म नियतम् क्रियतेअर्जुना !
सन्गम् त्य्क्त्वा फ़लम् चैव स त्याग: सात्विको मत: !

கார்யமித்யேவ யத் கர்ம்ம நியதம் க்ரியதே அர்ஜுன !
ஸங்கம் த்யக்த்வா ஃபலம் சைவ ஸ த்யாக: ஸாத்விகோ மத:
                                                          ப்.கீ 18-9
‘நாமெல்லோரும் கர்மங்கள் செய்ய விதிக்கப்பட்டவர்களாதலால் கர்மங்கள் செய்கிறோம் .ஆனால் பற்றுதல் இல்லாமலும் பலனை எதிர்பார்க்காமலும் செய்தால் அது சாத்விக கர்மம் எனப்படும்”.இது தான் யக்ஞ கர்மம்.

மூன்றாம் அத்தியாயம் ஒன்பதாவது சுலோகத்திலிருந்து தான் கீதையின் இதய கவாடம் திறக்கப்படுகிறது..கீதையின் இதயம் விஸ்வானர தத்துவத்தை அதிஷ்டிதமாக கொண்டுள்ளது.
     யக்ஞார்தாத் கர்மணோ-அன்யத்ர லோகோயம்  கர்மபந்தன:!
     ததர்த்தம் கர்ம கௌந்தேய முக்தஸன்க: சமாசர: !!
யக்ஞத்தை அடிப்படையாக கொள்ளாத கர்மங்கள் நம்மை பந்தனத்திற்குள்ளாக்குகின்றன.
யஜ என்றால் சம்ஸ்கிருதத்தில் கொடுப்பது-தானம் செய்வது என்று பொருள். யஜனம் என்றால் அம்மாதிரியான செயல்கள் என்று பொருள்.
கர்மங்கள் மூன்று வகைப் படும்: பறித்தல்,பங்கிடுதல்,கொடுத்தல் அல்லது படைத்தல்.
சக பிராணிகளின் உணவை,இருப்பிடத்தை, அவைகளுக்கு உரிய பொருள்களை தன் நன்மைக்காக தட்டிப் பறிப்பது, தன்னுடைய உடைமைகளை சக பிராணிகளுடன் பகிர்ந்து அனுபவித்தல் ( என் குழந்தை பருவத்தில் எங்கள் கிராமத்தில் கீரை விதையை வெயிலில் காய வைப்பார்கள்.அப்பொழஉது எங்கள் அம்மா கீரை விதையுடன் கொஞ்சம் அரிசியையும் கலந்து காயப் போடுவார்கள். கேட்டால் உணவைத் தேடி வருகின்ற எறும்புகள் ஏமாந்து போகக்கூடாது ,பார்,;அதற்காகத்தான் அரிசியை கலக்கிறேன்.அவை அரிசியை எடுத்துக் கொண்டு போகும். என்பார்கள்)
இன்னொரு சம்பவம்: எங்கள் வீட்டு கொல்லையில் ஒரு பலா மரம் இருந்தது. அது வரிக்கை பலா. பலாப்பழம் வெட்டும் காலத்தில் எங்கள் வீட்டு வேலைக்காரிக்கும் நாலைந்து சுளை கொடுப்பார்கள் எங்கள் அம்மா. வேலைக்காரி வீட்டில் விட்டு விட்டு வந்துள்ள தன் பையனுக்காக அதை தன் சேலை தும்பில் முடிந்து கொள்ள தொடங்கும் போது அம்மா சொல்வாள்: “ நீ இதை சாப்பிடு.கோவிந்தனுக்கு நீ போகும் பொழுது வேறே தரேன்” இது பகிர்ந்துண்ணுதலுக்கு அந்தக்கால பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.)
இன்றோ நாம் கீரை விதையை எறும்பு தின்னாமலிருக்க பூச்சி மருந்தை கலந்து வைக்கிறோம்.இது நமது வளர்ச்சி. தண்ணீர் தேடி வரும் யானைகளை தடுக்க மின்சார வேலிகள் அமைக்கிறோம். இது நமது சுய நலத்தில் ஊன்றி நிற்கும் கலாச்சாரம்.
மூன்றாவது வகை கர்மம் தனக்கு இருக்கிறதோ இல்லையோ மற்றவர்களுக்கு படைத்து அவர்கள் அடையும் சந்தோஷத்தை தன் சந்தோஷமாக அனுபவிக்கின்ற மனோபாவம் இதுதான் யக்ஞம். இந்த மனோபாவத்துடன் செய்கின்ற கர்மங்களெல்லாம் யக்ஞம். அவையே நிஷ்காமிய கர்மம்.
பொது நலத்தில் தன் நலம் அடங்கியிருக்கிறது என்ற அசையாத நம்பிக்கை,தியாகபுத்தியோடு செய்யும் சேவை, உலகத்தின் நன்மைக்கென்றே செய்யப்படுகின்ற கர்மங்கள் இவையெல்லாம் ஈசுவர ஆராதனைக்கு ஒப்பாகும்;அவை யக்ஞ்ங்களே. கௌந்தேயா நீ இந்த மாதிரி யக்ஞங்கள் மூலம் இசுவரனை காண்பாயாக, என்கிறான் கண்ணன் கீதையில்.
அப்படி கர்மங்கள் ஆற்றினால் கர்மபலனகளின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் மீண்டும் சந்திப்போம் அடுத்த மடலில்.
அதுவரை:

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே!

என்று பகவன் நாமம் சொல்லிப் பாடுவோம்.


No comments:

Post a Comment