Sunday 7 February 2016

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 23

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 23

அத்தியாயம் 23

அகர்மம் சாத்தியமா?      

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


    

                           ബ്രഹ്മാവാദിയായീച്ചയെറുമ്ബോളമ്

                          കര്മ്മബന്ദന്മാരെന്നതറിന്ഗാലുമ്

                                                                                                     ப்ரஹ்மாவாதியாயீச்சயெறும்போளம்

                           கர்மபந்தனமாரென்னதறிஞ்சாலும்

                                  

                                   ഭുവനന്ഗളെ സ്രുശ്ടിക്കയെന്നതു

                                   ഭുവനാന്ത്യ പ്രളയമ് കഴിവോളമ്

                                  കര്മ്മപാശത്തെ ലന്ഘിക്കയെന്നതു

                                  ബ്രഹ്മാവിനുമെളുതല്ല നിര്ണയമ്

                             

                                  புவனங்களெ ஸ்ருஷ்டிக்கயென்னது

                                  புவனாந்த்ய ப்ரளயம் கழிவோளம்

                                  கர்மபாசத்தெ லங்கிக்கயென்னது

                                 ப்ரஹ்மாவினுமெளுதல்ல நிர்ணயம்

 

ദിക്പാലന്മാരുമവണ്ണമോരോരോ

                           ദിക്കുതോറുമ് തളച്ചു കിടക്കുന്നു

                         അല്പകര്മ്മികളാകിയ നാമെല്ലാമ്

                          അല്പകാലമ് കൊണ്ടൊരോരോ ജന്തുക്കള്

                          ഗര്ഭപാത്രത്തില് പുക്കുമ് പുറപ്പെട്ടുമ്

                                               കര്മമ്മ് കൊണ്ടുകളിക്കുന്നതിന്ഗനെ

                            

                      திக்பாலன்மா ருமவண்ண்மோரோரோ

                       திக்குதோறும் தளச்சு கிடக்குன்னு

                       அல்பகர்மிகளாகிய நாமெல்லாம்

                      அல்பகாலம் கொண்டோரோரோ ஜந்துக்கள்

                        கர்பபாத்திரத்தில் புக்கும் புறப்பெ ட்டும்

                      கர்மம் கொண்டுகளிக்குன்னதிங்கனெ


முந்தைய அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் , ’கர்மங்கங்கள் எதுவாக இருந்தாலும் மமதாகாரம் அல்லது அஹந்தை எனும் கர்த்ருத்துவ மனோ பாவத்துடன் ஆற்றப்படுவதால் அவை நம்மை பௌதிக உலகத்துடன் பந்திக்கத்தான் செய்கிறது’ என்று கண்டோம். சங்கிலி தங்கத்தால் ஆனதாக இருந்தாலும் பந்தம் பந்தனமே என்றும் கண்டோம். ஆகவே நாம் கர்மங்களே இயற்றாமல் இருந்து விடலாமா? அது இயலுமா என்ற கேள்வியுடன் அந்த அத்தியாயம் முடிந்தது.
பூந்தானம் தொடருகிறார்:’ பிரம்மாவாகட்டும், ஈ எறும்புகளாகட்டும் எல்லாமே கர்மபந்த்த்தால் கட்டுண்டுதான் பிரபஞ்சத்தில் காணப்படுகிறது. பிரம்மா, தான் பரமாத்மாவிலிருந்து உருவானது முதல் பிரளயம் வரை ( பிரளயம் என்றால் பிரமாதமான லயம்—பிரபஞ்சம் சர்வஸவும் பரமாத்மாவில் லயின்ற காலம் வரை ) சிருஷ்டி கர்மத்தை தொடர்நு கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஒரு நொடி கூட ஓய்வு எடுக்க இயலாது. எவ்வாறு மரணம் எல்லா நேரங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றதோ அதே போல் ஜனனமும் நடந்து கொண்டேயிருக்கிறது. பிரம்மாவாகட்டும் சிவனாகட்டும் சிருஷ்டிக்காமலும் அழிக்காமலும் ஓய்ந்திருக்கவே முடியாது. சிருஷ்டியும் சம் ஹாரமும் அவர்களது கர்மங்கள். அந்த கர்மங்கள் அவர்களை பந்திக்கின்றது. அந்த கட்டை முறிப்பது பிரம்மாவிற்கும் எளிதல்ல.
அதே போல் அஷ்ட திக் பாலகர்களாகிய சூரிய சந்திர முதலிய தேவர்களும் பிரபஞ்சத்தை நான்கு திசைகளிலிருந்து வருகின்ற அபாயத்திலிருந்து காக்கும் கர்மத்தில் விழிப்புடன் மூழ்கி இருக்கிறார்கள். அவர்களுக்கும் அந்த கர்ம பந்தத்திலிருந்து முக்தி கிடையாது. அவர்களோடு ஒப்பிடும்பொழுது நாமெல்லாம் வேறும் அற்ப ஜீவிகளே.சிறிதே காலம் உயிருடன் இருந்து கோடானுகோடி கர்ப்பாத்திரங்களில்  உருவாய் கோடானுகோடி யோனிகள் வழியாக இந்த பிரபஞ்சத்தில் அரங்கேற்றமாகின்ற நாம் நாடகத்தின் திரை விழும்பொழுது மறையவேண்டியவர்களே. அப்படியிருக்கின்றபொழுது நாம் எப்படி கர்மங்களிலிருந்து தப்பிப்பது? நமக்குத் தரப்பட்டுள்ள வேஷத்திற்கேற்ற கர்மங்களை ஆற்றியே ஆகவேண்டும் என்கிறார் பூந்தானம் ”

 ஜீவாத்மாக்கள் கர்மங்கள் செய்யும்பொழுது அதற்கு ஒரு லக்ஷ்யம் உண்டு. இலக்கு இல்லாமல் கர்மம் செய்பவர்கள் மன விப்ராந்தியுடையவர்களாயிருப்பார்கள். ஆகவே நாம் கர்ம்ம் ஆற்றாமல் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல; லக்ஷ்யமில்லாத கர்மும் இயற்ற இயலாது. சிலர் புகழுக்காக கர்மம் ஆற்றுவார்கள்;சிலர் செல்வம் வேண்டும் என்பதற்காக கர்மம் செய்வார்கள். மற்றும் சிலர் அதிகார மோஹத்தால் கர்மம் ஆற்றுவார்கள். இன்னும் சிலர் சொர்க்கம் வேண்டும் என்று கர்ம்மாற்றுவார்கள்; சிலர் மரணத்திற்குப் பின் தன் பெயரும் புகழும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக கர்மம் ஆற்றுவார்கள்.சீனாவில் மனிதர்களுக்கு அங்கீகாரம் மரணத்திற்குப் பின் தான் அளிப்பார்கள்.சிலர் பிராயச்சித்த ரூபேண கர்ம்ம் செய்கிறார்கள்.
மனுஸ்மிரிதி கூறுகிறது:
                                     अकामस्य क्रिया काचिद् द्रुश्यते नेह कर्चित्
                                          यद्य्द्डि कुरुते किम्चित् तत्तत् कामस्य चेष्टितम्

                                          அகாமஸ்ய க்ரியா காசித் த்ரிஸ்யதே நேஹ கர் ஹிசித்

                                          யுத்த்தி குருதே கிம்சித் தத்தத் காமஸ்ய சேஷ்டிதம்


காமமில்லாமல்( ஆசையில்லாமல்) கர்ம்ம் ஒருகாலத்திலும் நடந்ததில்லை. ஏதாவதொன்று யாரேனும் செய்தால் அது ஆசையின் உந்துதலால்த்தான்.
ஆனால் கர்மம் அனுஷ்டிக்காமலே இருந்து விடலாமா? அப்பொழுது பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுதலை கிடைக்குமா?
பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்: அது நடவாது; ஏனென்றால்:
                                न कर्मणामनारम्भान्नईष्करम्य पुरुषोन्श्नुते !
                                    न च शन्यश्नातेव सिद्धि समधिगच्छति !!
                                    கர்மணாமனாரம்பாக்னைஷ்கர்ம்யம் புருஷோஅஸ்னுதே !
                                 ந ச சன்யஸ்னாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி !!
                                                ப்.கீ.அத்.3-சு.4

‘புருஷன், அதாவது மானுடன் கர்மங்களை அனுஷ்டிக்காமையினால் கர்மாதீதத்தை அடைவதில்லை.வெறும் ஸன்யாஸத்தால்- உலக சுக போகங்களிலிருந்து விட்டு இருப்பதால் மட்டும் முக்தி கிடைப்பதில்லை”.
முழுவதும் பக்குவம் அடையாமல் பழத்தை மரத்திலிருந்து பறித்தால் பழத்தின் பயன் கிடைப்பதில்லை.பழம் மரத்திலேயே பழுத்தால் அதன் முழுப் பயனும் கிட்டும்.ஞான முதிர்ச்சியடையாமல் ஸன்யாஸம் வரிப்பதில் எந்த பயனும் இல்லை.மனம் பக்குவப்படும் வரை கர்மங்கள் செய்துகொண்டே தான் இருக்க வேண்டும்.
அடுத்த சுலோகத்தில் பகவான் மேலும் கூறுகிறார்:
                                न हि कस्चित्क्षणमपि जातु तिशट्कर्मक्रुरुत् !
                                    कार्यते ह्यवश: कर्म सर्व: प्रक्रुतिन्जर्गुणै: !!

                                    ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் !

                                  கார்யதே ஹ்யவச: கர்ம ஸர்வ: ப்ரக்ருதினஜர்குணை !!

“ யாரும் கணப்பொழுதும் செயலற்று இருப்பதில்லை; ஏனென்றால் பிரக்ருதியினின்று உதித்த குணங்கள் எல்லோரையும் தன் வயப்படுத்தி செயலாற்ற வைக்கின்றது..பிரகிருதி முக்குணமயமானது. சத்வம், ரஜஸ், தமஸ் என்கின்ற முக்குணங்களின் கர்ம சொரூபம் தான் பிரகிருதி. இந்த முக்குணங்களினால் பந்திக்கப் பட்டிருப்பவர்கள் கர்மம் செய்தே ஆக வேண்டும். உண்பது, உறங்குவது, ஏன் சுவாசிப்பது கூட கர்மம் தான். அணு முதல் அண்டம் வரை எல்லாம் அசைந்து கொண்டே இருக்கின்றது. அணுவினுள் நுழைந்து பார்த்தால் அங்கும் சலனம் காண்கிறோம். இது தான் நடராஜ நடனம் எனப்படுகிறது. அந்தமில்லாத சத் சிதானந்தனின் நிருத்தியம்.ஆனால் நாமோ அற்ப ஜீவிகளான மானிடர். நாம் ஆற்றுகின்ற கர்மங்களும் அற்ப கர்மங்களே.ஆகவே நாம் பிறப்பு- இறப்பு என்ற சக்கர சுழற்சியில் அகப்பட்டு அவஸ்தைப்படுகிறோம்..
பிறகு எப்படி விடுதலை பெறுவது? அடுத்த அத்தியாயத்தில்ப் பார்ப்போம்.அதுவரை பகவன் நாமம் ஜபிப்போம்

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!
கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!
அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!
ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே





No comments:

Post a Comment