Sunday 28 February 2016

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 31

ஞானப்பானா –கிருஷ்ணகீதை 31


அத்தியாயம் 31 மனிதனின் இழி நிலை

 கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே


 நீர்க்குமிழி போன்ற இந்த நசுவரமான வாழ்வை நித்தியம் என்று எண்ணி மனிதர்கள் ஆடுகின்ற கோமாளி செய்கைகளை நகைச்சுவையுடன் விமரிசிக்கிறார் பூந்தானம் அடுத்த சில வரிகளில்.
സ്ഥാനമാനന്ഗള് ചൊല്ലിക്കലഹിച്ചു
നാണമ് കെട്ടു നടക്കുന്നിതു ചിലര്
മദമത്സരമ് ചിന്തിച്ചു ചിന്തിച്ചു
മതികെട്ടു നടക്കുന്നിതു ചിലര്
ஸ்தானமானங்கள்  சொல்லிக்கலஹிச்சு
நாணம் கெட்டு நடக்குன்னிது சிலர்
மதமல்ஸரம் சிந்திச்சு சிந்திச்சு
மதிகெட்டு நடக்குன்னிது சிலர்
பதவி,அதிகாரம் போன்றவைகளால் தன்னை மறந்து அகந்தையால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு காலத்தைக் கழிக்கின்றனர் சிலர். அவர்களுக்குத் தெரிவதில்லை இன்றி மாட மாளிகைகளில் வசிப்பவரை ஒரு நொடியில் குப்பை மேட்டிற்கு கொண்டு வருவதும் தெருவில் இருப்பவனை அரசகட்டிலில் உட்கார வைப்ப்பதும் அந்த கிருஷ்ணனின் லீலா விலாசம் என்று.வெட்கம், மானம் எதுவும் இல்லாமல் ‘நானே பெரியவன்’ ‘நானே அறிவாளி” என்று மதிகெட்டு நடக்கிறார்கள்

ചന്ചലാക്ഷിമാര് വീടുകളില് പുക്കു
കുന്ചിരാമനായാടുന്നിതു ചിലര്
കോലകന്ഗളില് സേവകരായിട്ടു
കോലമ് കെട്ടി ന്ജെളിയുന്നിതു ചിലര്
சஞ்சலாக்ஷிமார் வீடுகளில் புக்கு
குஞ்சிராமனாயாடுன்னிது சிலர்
கோலகங்களில் ஸேவகராயிட்டு
கோலம் கெட்டி ஞெளியுன்னிது சிலர்.
இன்னும் சிலரோ அழகிய மாதர் பின் சென்று அவர்களால் குரங்காட்டம் ஆடுகிறார்கள். எப்படி குரங்காட்டி ஒரு கம்பை வைத்துக்கொண்டு குரங்கை இதைத் தாண்டு, இதைத் தாண்டு, இப்படிக் குதி, அப்படிக் குதி என்று சொல்வதற்கெல்லாம் மறு பேச்சு பேசாமல் ஆடுமோ அது போல் சில மனிதர்கள் அழகிய கண்களையுடைய விலைமாதர் தம் கண் அசைவிற்க நுசரணையாக காரியங்கள் ஆற்றுகிறார்கள்.
சில மதி கெட்ட மாந்தர் அரச மாளிகைகளில் சேவகம் செய்துகொண்டு, வெளியே சீமாங்கள் போல் நெளிந்து நடமாடுகிறார்கள்.
ശാന്തി ചെയ്തു പുലര്ത്തുവാനായിട്ടു
സന്ധ്യയോളമ് നടക്കുന്നിതു ചിലര്
അമ്മൈക്കുമ് പുനരച്ചനുമ് ഭാര്യയ്ക്കുമ്
ഉണ്മാന്പോലുമ് കൊടുക്കുന്നില്ല ചിലര്
சாந்தி செய்து புலர்த்துவானாயிட்டு
சந்த்ய்யோளம் நடக்குன்னிது சிலர்
அம்மைக்கும் புனரச்சனும் பார்யைக்கும்
உண்மான்போலும் கொடுக்குன்னில்லது சிலர்
மற்ரு பலர் கோயில்களில் பூஜை செய்து காலை முதல் இரவு வரை பகவத் கைங்கரியம் செய்து பிழிப்பு நட்த்துகிறார்கள்.ஆனால் பெற்ற தாய்க்கும் தகப்பனுக்கும் மனைவிக்கும் உணவிற்கான பொருள் கூட கொடுப்பதில்லை. என்னே அவர்கள் பக்தி ! அவர்களது பக்தியின் பொய்மையை பூந்தானம் எள்ளி நகையாடுகிறார் இங்கு.
അഗ്നിസാക്ഷ്ണിയായൊരു പത്നിയെ
സ്വപ്നത്തില്പോലുമ് കാണുന്നില്ല ചിലര്
அக்னிஸாக்ஷிணியாயொரு
பத்னியெ
ஸ்வப்னத்தில் போலும் காணுன்னில்ல சிலர்
அப்படிப்பட்டவர்கள் அக்னி சாக்ஷியாய் கைபிடித்த மனைவியை கனவில்க் கூட காண்பதில்லை.இவர்களா பக்திமானகள்?
സത്തുക്കള് കണ്ടു ശിക്ഷിച്ചു ചൊല്ലുമ്ബോള്
ശത്രുവെപ്പോലെ ക്രുദ്ധിക്കുന്നു ചിലര്
വന്ദിതന്മാരെക്കാണുന്ന നേരത്തു
നിന്ദിച്ചത്രേ പറയുന്നിതു ചിലര്
ஸத்துக்கள் கண்டு சிக்ஷிச்சு சொல்லும்போள்
சத்ருவெப் போலெ க்ருத்திக்குன்னு சிலர்
வண்திதன்மாரெக்காணுன்ன நேரத்து
நிந்திச்சத்ரே பறயுன்னிது சிலர்
இதைக் கண்டு யாராவது நல்ல மனிதர்கள் கடிந்து கொண்டாலோ அவர்களை எதிரியாக பாவித்து கொடுஞ்சொற்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.
കാണ്ക നമ്മുടെ  സമ്സാരമ് കൊണ്ടത്രേ
വിശ്വമീവണ്ണമ് നില്പുവെന്നുമ് ചിലര്
ബ്രാഹ്മണ്യമ് കൊണ്ടു കുന്തിച്ചു കുന്തിച്ചു
ബ്രഹ്മാവുമെനിക്കൊക്കായെന്നുമ് ചിലര്
காண்க நம்முடெ ஸம்ஸ்காரம் கொண்ட்த்ரெ
விஸ்வமீவண்ணம் நில்பூவென்னும் சிலர்
ப்ராஹ்மண்யம் கொண்டு குந்திச்சு குந்திச்சு
ப்ரஹ்மாவுமெனிக்கொக்காயென்னும் சிலர்
வேறு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் “இந்த பிரபஞ்சமே என்னால்த் தான் வாழுகின்றது; நான் பண்ணுகின்ற பிராமண்ய கர்மங்களால் நான் பிரம்மாவிற்கும் மேலானவன்” என்று கொக்கரிக்கிறார்கள்
അര്ത്ഥാശക്കു വിരുതു വിളിപ്പിപ്പാന്
അഗ്നിഹോത്രാദി ചെയ്യുന്നിതു ചിലര്
സ്വര്ണന്ഗള് നവരത്നന്ഗളെ ക്കൊണ്ടുമ്
എണ്ണമ് കൂടാതെ വില്ക്കുന്നിതു ചിലര്
മത്തേഭമ് കൊണ്ടു കച്ചവടമ് ചെയ്തുമ്
ഉത്തമ തുരന്ഗന്ഗളതു കൊണ്ടുമ്
അത്രയുമല്ല കപ്പല് വച്ചിട്ടു
മെത്ര നേടുന്നിതര്ത്ഥമ് ശിവ! ശിവ!
அர்தாசக்கு விருது விளிப்பான்
அக்னிஹோத்ராதி செய்யுன்னிது சிலர்
ஸ்வர்ணங்கள் நவரத்ன்ங்களெக் கொண்டும்
எண்ணம் கூடாதெ வில்க்குன்னிது சிலர்
மத்தேபங்களெக் கொண்டு கச்சவடம் செய்தும்
உத்தம துரங்கங்களது கொண்டும்
அத்ரயுமல்ல கப்பல் வச்சிட்டு
எத்ர நேடுன்னிதர்த்தம். சிவ! சிவ!
பெயருக்கும் புகழுக்குமாக சிலர் பொருள் சலவு செய்து அக்னிஹோத்திரம் போன்ற யாகங்கள். செய்கிறார்கள்.குதிரைகள், யானைகள் வியாபரம் செய்து பொருளீட்டுகிறார்கள். கப்பல் விட்டுக்கூட பொருள் தேடுகிறார்கள். அவர்கள் நேடுகின்ற பொருளினால் என்ன பயன்?
அனித்தியமான இந்த பிரபஞ்சத்தில் நித்தியமான அந்த பிரம்மத்தைத் தேடாமல், பெண், பொன், பொருள், புகழ், ப்தவி, பெயர் எங்கின்ற அனித்தியமான பொருள்களின் பின்னால் ஓடுகிறார்கள்.என்னே பரிதாபம்1 என்று வியக்குகிறார் பூந்தானம்.
இவர்கள் ஒரு முறையாவது பகவத் நாம்ம் சொல்லியிருந்தால் முக்தி கிடைத்திருக்குமல்லவா? இந்த பிரபஞ்சத்தில் மறுபடியும்  பிறக்க வேண் டியிராதல்லவா?அவர்க்கள் பாப ஜன்மங்கள் !
நாமாவது அப்படியில்லாமல் பகவன் நாம்ம் சொல்லிப்ம் பாடுவோம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே



No comments:

Post a Comment