Monday 9 November 2015

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 3

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 3


அத்தியாயம் 3 குரு வந்தனம்-கால லீலை


ഹരി: ശ്രീ ഗണപതയേനമ:

                                                                        അവിഘ്നമസ്തു

മന്ഗളാചരണമ്

                        ഗുരുനാഥ൯ തുണ്ചെയ്ക സന്തത൦

തിരുനാമങ്ങൾ നാവിന്മേലെപ്പോഴു൦

                        പിരിയാതെയിരിക്കണ൦ നമ്മുടെ

 നരജന്മ൦ സഫലമാക്കിടുവാ൯

            കാലലീല     

ഇന്നലെയോളമെന്തെന്നറിഞ്ഞീല

ഇനി നാളെയുമെന്തെന്നറിഞ്ഞീല

                        ഇന്നിക്കണ്ടതടിക്കു വിനാശവു

മിന്നനേരമെന്നതുമറിഞ്ഞീല

                       

மங்களாசரணம்

               குருநாதன் துணசெய்க சந்ததம்
திருனாமங்கள் நாவின்மேலெப்போழும்
                            பிரியாதெயிரிக்கணம் நம்முடெ
                 நரஜன்மம் ஸஃபலமாக்கிடுவான்

 கால லீலை                     

இந்னலெயோளமெந்தென்னறிஞ்சீல
             இனினாளெயுமென்தன்னறிஞ்சீலா
                             இன்னிக்கண்டதடிக்கு வினாசவு
மின்ன நேரமென்னதுமறிஞ்சீலா

“என்றும் நாராயணனின் திரு  நாமம் என் நாவில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும்; அதற்கு குரு நாதன் எனக்கு துணை செய்ய வேண்டும்.
பகவன் நாமம் என் நாவிலிருந்து பிரியாமலிருந்தால் தான் இந்த மனித ஜன்மம் ஸஃபலமாகும்.
நேற்று வரை நான் யார் என்று எனக்குத் தெரியாது; நாளை என்னவாவேனோ என்றும் தெரியாது; இன்று காணும் இத்தேகம் எப்பொழுது நாசத்தை எதிர்க்கொள்ளும் என்றும் தெரியாது.. இன்று பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களை நேற்று பார்க்கப்பட்டவர்கள் என்று நிலைமையாக மாற்றுவதும் பகவான் தான்”
மங்களாசரணம் அல்லது கடவுள் வணக்கம் என்கின்ற முதல் சுலோகத்திலேயே பூந்தானம் என்கின்ற கவி சிரேஷ்டர் மிகவும் உயரிய, எல்லோரும் சிந்திக்க வேண்டிய, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய தத்துவத்தை சுட்டிக்காட்டுகிறார்.
பூந்தானத்திற்கு ஒரு குரு இருந்ததாக வரலாற்றில் குறிப்புக்கள் காணப்படவில்லை. ஆகவே யாரை குரு என்கிறார் ? சாக்ஷாத் அந்த நாராயணனையே தான் அவர் குரு என்கிறார். குருவாயூரப்பன் துணை இருந்தால் மட்டும் தான் பகவத் நாமம் நம் நாவிலிருந்து பிரியாமல் இருக்கும் என்கிறார் பூந்தானம். ‘குரு நாதன்”.என்கிற பதம் மூலம் குருவாயூரப்பன் இந்த சகல உலகையும் காப்பாற்றி சர்வ ஐஸ்வரியங்களும் தருகிறவன் என்ற கருத்தையும் தெளிவு படித்துகிறார்.
‘நரஜன்மம்’ ஸஃபலமடைய வேண்டும் என்று சொல்வதன் மூலம் எத்தனையோ ஆயிரம் ஜன்மங்களின் கர்ம பலனாக நாம் இன்று உயரிய ஆறறிவு படைத்த மனிதர்களாக பிறந்திருக்கோம். அது நம் பூர்வ ஜன்ம புண்ணியம் . இந்த ஜன்மம் வீணாகாமல் இருக்க வேண்டுமென்றால் பகவத் நாமத்தை ஜபித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.நாமஜபத்தை பக்தி மார்க்கத்தின் முக்கிய தூணாக இந்த சுலோகத்தின் மூலம் கவிராயர் தெளிவு படுத்துகிறார் அதற்கான காரணத்தையும் பூந்தானம் அடுத்த வரிகளில் தருகிறார்.
“நேற்று வரை நான் யாராக இருந்தேன் என்று தெரியவில்லை; நாளை யாராக இருப்பேன் என்றும் தெரியவில்லை.”
இங்கு   ‘நேற்று’ என்பது கடந்த ஜன்மங்களில் என்று பொருள்; ‘நாளை” என்பது  வரும் ஜனமங்களில் என்றும் பொருள் பட பூந்தானம் கவிதையில் சொல்லியுள்ளார். மனிதர்களின் அறிவு ஒரு வரையறைக்குட்பட்டது. பூர்வ ஜன்மங்களில் செய்து கூட்டியிருக்கின்ற கரமங்களையும் அறியோம் அவையின் பலன்களையும் அறியோம்.அறிந்தாலும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஜன்மத்தில் பாப கர்மங்கள் செய்யாமல் இருந்தால் போதும் ஆகவே நாம் வீணாக அலட்டிக்கொள்ளவேண்டாம் என்கிறார் பூந்தானம்.நம்மால் செய்யக்கூடியதெல்லாம் நாமஜபம் ஒன்று தான். பகவானால் மட்டும் தான் நமக்கு பிராரப்தங்களிலிருந்து விடுதலை அளிக்கமுடியும்.
அதோடு மட்டுமல்ல, இந்த தேகத்திற்கு விநாசம் என்று வந்து சேரும் என்றும் நமக்குத் தெரியாது. இங்கே தேகத்தை’ இத்தடிக்கு” என்று சொல்லுகிறார் கவி. ‘தடி’ என்றால் மரக்கட்டை என்று பொருள்.அதாவது ஜடம்.இதற்கு எப்பொழுது நாசம் சம்பவிக்கும் என்றும் தெரியவில்லை”.எனக்கு எப்பொழுது மரணம் சம்பவிக்கும்” என்று அவர் சொல்லவில்லை.ஆத்மாவிற்கு மரணம் கிடையாது என்பதை பூந்தானம் சூசகமாக குறிப்பிடுகிறார். நாம் பார்த்துக் கொண்டேயிருக்கின்ற மனிதர்கள் திடீரென்று காணாமல் போய்விடுகிறார்கள். இதெல்லாம் அந்த பகவனின் லீலா விளையாட்டுக்கள். நம் கையில் ஒன்றுமே இல்லை.ஆகவே பகவத் நாம ஜபம் ஒன்று தான் முக்திக்குவழி. “விடாமல் உன் திரு நாமத்தை ஜபித்துக்கோண்டிருக்க நீயருளவேண்டும் கண்ணா”, என்கிறார் பூந்தானம் நம்பூதிரி. இதையே தான் சைதன்ய மஹாபிரபுவும் சொல்லியுள்ளார். சைதன்யர் மேலும் கூறுவார் பகவத் நாம ஜபத்திற்கு தவிர்க்க முடியாத நியமங்கள் ஒன்றுமில்லை; நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் பகவத் நாமத்தை ஜபிக்கலாம்

                                    சுசிர் வ அசுசிர் வ சர்வ அவஸ்தாசு சர்வதா

நாமும் சேர்ந்து பாடுவோம்:

                                    கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

                                    கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாணா! ஹரே!

                                    அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

                                    ஸச்சிதானந்தா! நாராயணா! ஹரே!

               


No comments:

Post a Comment