Tuesday 17 November 2015

ஞானப்பானா- கிருஷ்ண கீதை 8

ஞானப்பானா- கிருஷ்ண கீதை 8

அத்தியாயம் 8 கர்ம பந்தம்



நம்மெயொக்கெயும் பந்திச்ச ஸாதனம்
                                                கர்ம்மமென்னறியேண்டது மும்பினால்
                                               
நம்மை பந்தனத்திலாக்கின்ற ஒன்றே ஒன்று உண்டென்றால் அது நமது பூர்வ ஜன்ம கர்மங்கள் தான்.”
நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் காரணம் நம் முன்சன்ம கர்மங்களே என்கிறார் பூந்தானம்.
 நமது முன்னோர் ‘கர்மத்தை’ மூன்று விதமாகப் பிரித்துக்கூறியுள்ளார்.—சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமி கர்மம் என்று.
நாம் செய்கின்ற ஒவ்வொரு கர்மத்திற்கும் பலன் உண்டு. அதை நாம் அனுபவித்தே தீர வேண்டும். ஜன்ம-ஜன்மாந்தரங்களாக  நாம் செய்கின்ற கர்மங்களின் சேகரம்- குவியல் நம்மீது எப்போதும் உள்ளது. அதன் ஒரு பகுதியைத்தான் நாம் ஒரு ஜன்மத்தில் அனுபவிக்கிறோம். ஜன்ம-ஜன்மாந்திரங்களாக நாம் தேடியுள்ள கர்ம சேகரம் தான் ‘சஞ்சித கர்மம்’ எனப்படுகிறது.. நாம் ஒரு ஜன்மத்தில் அனுபவிக்க வேண்டும் என்று பகவானால் விதிக்கப்பட்டுள்ள கர்ம பகுதிதான் ‘பிராரப்த கர்மம்’ .பிராரப்த்தத்தை அனுபவிக்கும் பொழுது நாம் ஆற்றும் வினைகளின் பலன்கள் தான் ‘ஆகாமி’ கர்மங்கள். இந்த கர்மங்கள் தான் நம்மை இந்த இஹலோகத்துடன் பந்தித்து வைக்கிறது,.
பிராரப்த்தத்தை அனுபவிப்பதிலிருந்து  யாரும் தப்ப முடியாது. ஆகவே தான் மஹான்களெல்லாம் கூட பலவிதமான வேதனா ஜனகமான அனுபவங்களை சகிக்கவேண்டியுள்ளது. பகவான் ரமணரும் ராமகிருஷ்ண பரம ஹம்சரும் கூட இதற்கு விதி விலக்கல்ல.ஒரே ஒரு வித்தியாசம் ஞானிகளுக்கும் சாமானியர்களுக்கும்—ஞானிகள் அதன் வேதனையை அறியமாட்டார்கள்; சாமானியர்கள் வேதனையால் துன்ப படுவார்கள். ஞானிகளுக்குத் தெரியும் இந்த வேதனைகளெல்லாம் தேகத்திற்குத்தானே  தவிர தேகிக்கல்ல என்று. சாமானியர்களோ, ‘தனுவை தானாமென்று’ நினைத்து வேதனைப்  படுவார்கள். ‘நான்’ என்பது இந்த உடலல்ல என்ற ஞானம் ஏற்படாத காரணத்தால்.
பிராரப்தத்தின் தாக்கத்தை குறைக்கவும் ஆகாமி கர்மங்களின் வரவை குறைக்கவும் ஒரே வழி ‘பலன் கருதா’ கர்மங்கள்—‘நிஷ்காமிய கர்மங்கள்’ ஆற்றுவது தான்.
நிஷ்காமிய கர்மம் என்றால், ‘ செய்வது நான்’ என்ற எண்ணத்தை விடுத்து செயல் ஆற்றுவது. .கர்மங்கள் ஆற்றாமல் இருக்க முடியாது. கர்மங்கள் செய்யும் பொழுது ‘கர்த்த்ருத்வ’ மனோபாவம் இல்லாமல் செய்தால் அதன் பலங்கள் நம்மை பாதிக்காது.’நான்’ செய்தேன்; ‘எனது’ என்னால்’ போன்ற எண்ணங்கள் தான் நமது துன்பங்களுக்கெல்லாம் காரணம்.
பகவத் கீதை மூன்றாம் அத்தியாயம் பத்தாம் சுலோகம் நிஷ்காமிய கர்மத்தை விளக்குகிறாது.

                                                सहयन्झा: प्रजा: स्रुष्दा पुरोवाच प्रजापति !

                                      अनेन प्रसविष्यध्वमेवोस्त्विष्दकामतुक् !!

                       
                                                ஸஹயக்ஞ்சா: ப்ரஜா ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி: !
                                                அனேன ப்ரஸவிஷ்யத்வமேஷவோ அஸ்த்விஷ்டகாமதுக் !!

“இந்த பிரபஞ்சத்தின் உற்பத்திகாலத்தில் ப்ரஜாபதியான பிரம்மா, ‘நான் உலகமாகப்பட்ட காமதேனுவை தருகிறேன் அதை வைத்துக்கொண்டு எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து மேன்மையடைவீர்கள்” ’என்றார்  ப்ரஜாபதியின் இந்த வார்த்தைகளின் சரியான அர்த்தத்தை புரிந்து கொண்டோமென்றால் நாம் மேன்மையடைவோம்.காம தேனு எனும் பசு உங்கள் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுகின்ற வரதானம் என்பது கதை. அதிலிருக்கின்ற  myth ஐ நீக்கி விட்டுப்  பார்த்தோமென்றால்,  இந்த பிரபஞ்சமே ஒரு காம தேனு; நீங்கள் ‘காமி’ப்பது ( ஆசைப்படுவதெல்லாம் கிடைக்குமிடம்; இதை சிருஷ்டித்த பிரம்மா ஒரு யக்ஞ சங்கல்ப்பத்துடன் சிருஷ்டித்துள்ளார்; அதே யக்ஞ சங்கல்பத்துடன் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ்வீர்களேயானால் மேன்மையடைவீர்கள் என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லுகிறார். அதாவது எல்லாம் தனக்கே என்று எண்ணாமல், எல்லாம் எல்லாருக்குமே என்ற நோக்கத்துடன் கர்மங்களை செய்வீர்களேயானா நீங்கள் மேன்மையுடன் வாழ்வீர்கள்.
நாலு புருஷார்த்தங்களில் அர்த்தமும் காமமும் முதலில் சொல்லப்பட்டாலும் அவை இரண்டும் தர்மத்தை அட்ப்படையாக கொண்டாதாயிருந்தால் மட்டுமே முக்தி கிடைக்கும்.. பொருள் சேர்ப்பது நமக்காக மட்டும் என்று எண்ணக்கூடாது. நம்மிடம் பொருள் சேர்ந்துள்ளது பிறருக்கும் பயன் படுவதற்காகத் தான் என்று உணர வேண்டும்.’பகுத்துண்டு பல்லுயிரோம்புக’ என்பது சான்றோர் வாக்கு.
 அதே போல் தெய்வீக குணங்களாக, க்ஷமா.ஆர்ஜவம், தயா, சந்தோஷம், சத்யம் என்பவற்றை முக்கியமாக நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்..
சஹபிராணிகளிடம் உள்ள குற்றம் குறைகளைப் பொருட்படுத்தாமல் மன்னிக்கும் குணம், எல்லோரிடம் கபடு, சூது இல்லாமல் நேர்மையுடன் கர்மங்களை ஆற்றும் தன்மை,மற்ற உயிரினங்களிடம் கருணை, சஹப்பிராணிகளுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் கர்மங்களை ஆற்றும் தன்மை,சத்யத்திற்கு பொருந்தினவைகளை மட்டுமே செய்ய்யும் குணம் இவை நிஷ்காமிய கர்மத்திற்கு மிகவும் இன்றியமையாதவை.
பகவத் கீதையில் கிருஷ்ணர் விளக்கமாக க் கூறுகிறார்.:
                                                             अहिम्सा सत्यमक्रोध्स्त्याग्: शान्तिर्पैशुनम् !
                                                दया भूतेष्वलोलुप्तवम् मार्दवम् ह्रीरीरचापलम् !!
                                           ப்.கீ. அத்15 சுலோ 2
                                                            அஹிம்ஸ ஸத்யமக்ரோதஸ்த்யாக: சாந்திரபசுனம் !
                                                            தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம்  ஹ்ரீரசாபலம் !!
“ மற்றவர்களுக்கு—மற்ற உயிரினங்களை ஹிம்சிக்காமலிருப்பது, உண்மைக்குப் புறம்பாக நடக்காமலிருப்பது, யாரிடமும் கோபப்படாமலிருப்பது, தியாக மனப்பான்மை, சாந்த குணம், பிறரைக் குறித்து குறை சொல்லாமலிருப்பது, எல்லா உயிரினங்களிடமும் கருணை, தன்னிடமுள்ளதை பகிர்ந்து அனுபவிக்கும் நல்லெண்ணம், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமலிருப்பது, பிறரிடம் மிருதுவாக பழகுதல், அடக்கம், ஆசைகளுக்கு அடிமையாகாமலிருப்பது” என்பவை தெய்வீக குணங்கள். இந்த குணங்கள் இருந்தலே நமதுப் செயல்கள் நமக்கு நல்ல பலன்களை தந்து கர்ம பாரத்தைக் குறைக்க உதவும்.
இந்த எண்ணங்கள்-குணங்கள் நம்மிடம் வர வேண்டுமென்றால் நம்முள்ளும், மற்றவர்களுள்ளும் இருப்பது ஒரே பரபிரம்மம் தான் என்ற ஞானம் வந்தால் தான் நடக்கும்.


No comments:

Post a Comment